எல்லோருக்கும் வாழ்க்கையில் லக் அடித்து இருக்கும்.

சின்னதோ பெரியதோ .

ஏதாவது ஒரு வகையில் என்றாவது ஒரு நாள் ஒரு லக் அடித்து இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு லக் ஒரு காலேஜ் பையனுக்கு எப்படி அடித்தது என்பது பத்திய கதைதான் இது.

இந்தக் கதையின் முடிவு வரி இப்படித்தான் இருக்கும்.

எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் என்றாவது ஒரு நாள் ஒரு லக் அடித்து இருக்கும்.

அது எவ்வளவு பெரிய பம்பர் லாட்டரி லக் என்பது நம் தேடலை பொறுத்து அமையும்.

இந்தக் கதை எழுதும் முன் ..

“Chance favours those in motion.” என்று James H. Austin சொல்லியது ஞாபகம் வருகிறது..

Lets begin தி ஸ்டோரி ….

——————————————-

 

அப்போது வருடம் …..2004.

7G Rainbow Colony னு ஒரு படம் வந்து சக்கை போடு போட்டது.

நான், கோயம்புத்தூரில் அந்தப் படம் பார்க்கப் போய் இருந்தேன்.

அந்தப் படத்தில் ஒரு சேட்டு பொண்ணாக சோனியா அகர்வால் வருவார்.

இந்தத் திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா அறிமுகமானார்.

சோனியா அகர்வால் நடித்திருந்த இப்படத்தை எழுதி இயக்கியவர் செல்வராகவன்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையுடன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

அப்ப பக்கத்தில் படம் பார்த்துட்டு இருந்தவன் அடுத்தவன் கிட்ட சொன்னான்…

மாப்பிள்ள… நாம கூடத்தான் இந்த RS புரத்தில் இத்தனை வருஷமா இருக்கிறோம்…

RS புரம், முழுக்க சேட்டு வீடுங்கதான்…

வத்தலோ சொத்தாலோ ..எல்லாமே கோதுமை மாவு கலரில் ஜிகு ஜிகுன்னு மிண்ணுதுங்க ..

என்னிக்காவது எவனுக்காவது இப்படி ஒரு லக் அடிச்சி பார்த்து இருக்கியா …

இல்ல ரோட்டில் நின்னு இப்படி தாடி வச்சுக்கிட்டு இருக்கிறவனிடம் பேசித்தான் பார்த்து இருக்கியா ??

இல்லை …இப்படி எல்லாம் உண்மையிலேயே ஒருத்தனுக்கு நடக்குமா என்ன.. ?

கதை எடுக்குறானுங்க கதை என்று நொந்து கொண்டே படம் பார்த்துக்கொண்டு கமெண்ட் அடித்தான்.

அன்று படம் பார்த்த எனக்கு அந்தப் படத்தில் பார்த்த எதுவுமே புதுசாக தெரியவில்லை….

ரியலிசத்தை விடக் குறைவாக எடுத்து இருந்தார்கள்..

ஒவ்வொரு காட்சி ஓடும் போதும் என் கண்களுக்கு வேறு காட்சிகள் ஓடியது ..

அந்தப் படம் பார்க்கும் போது என் மனதில் அந்தப் படமே பதியவில்லை …

 

என் மனதில் வேறு ஒரு படம் ஓடிக்கொண்டு இருந்தது…

என் படத்தின் ஹீரோயின் பெயரும் அதே சோனியா அகர்வால்…

 

அதே சேட்டு..

அவருக்கு அதே பொண்ணு ..

அதே கோதுமை மாவு நிறம் ..

ஆனா …

கதை வேற,

முடிவு வேற…

 

ஆனா ஹீரோ நான்தான் ..

நம்புங்கள் …

Luck means ..“Chance favours those in motion.”

அப்ப நான் செம மோஷன்ல இருந்தேன் ..

I mean, அப்ப நான் தெரு பொறுக்கியா இருந்தேன் …

 

தொடரும் …