தியாகம்ன்னா என்ன? 
எப்ப பார்த்தாலும் சின்னம்மா எனும் சசிகலா தன் வாழ்க்கையே தியாகம் செய்ததா அவரும், அவர் கூட இருப்பவர்களும் சொல்கிறார்கள். நட்புக்காக தன்னையே தியாகம் செய்தார் என்பதுதான் அவர்கள் வாதம். ஆனா, அப்படி என்ன தியாகம்னு மட்டும் சொல்லவே மாட்டேங்கிறார்கள்.
நானும் யோசிச்சு பார்த்தேன். அப்படி என்னதான் தியாகம்னு? எனக்கும் ஒண்ணும் பிடிபடவில்லை. 
இந்த காந்தி ஜெயந்தி வீட்டில் சும்மா இருக்கும் போது ஒரு யோசனை வந்தது. காந்தி அடிகள் எப்போதுமே, அவருக்கு ஏதாவது doubt வந்தா அவரை வச்சே ஒரு experiment செய்வார். My experiments with truth னு புக் கூட எழுதினார். சுய சோதனை. 
சரி, நானும் காந்தி வழியில் சசிகலாவின் தியாகம்ன்னா என்னனு experiment செய்ய முடிவு செய்தேன். 
Close friend க்கு போன் போட்டேன். நண்பா, Wife ஊரில் இல்லை. இதுதான் எனக்கு ரைட் டைம், நண்பா.. 
இது வரை பட்டது போதும். நான் மூட்டை முடிச்சு எல்லாம் கட்டிக்கொண்டு, இப்பவே கிளம்பி உன் வீட்டுக்கு வந்துவிடுகிறேன். The final destination.
எனக்கு எல்லாமே இனி நீதான் நண்பா. வரும் போது இரண்டு சொந்தங்களையும் அழைச்சிட்டு வரேன். ஒண்ணுக்கு ரெண்டு கால். இன்னொன்னுக்கு நாலு கால். இனிமே, நீதான் எங்களுக்கு எல்லாமே நண்பா !
நான் வீட்டிலேயே வேலை வெட்டி செய்யாமல் இருந்துவிடுகிறேன். நீ போய் எல்லாத்தையும் சம்பாரிச்சு கொண்டுவா. சொத்து ரெண்டு பேரில் சேர்த்தா போதும். மத்தபடி, தினமும் .. நண்பா ஆபீசிக்கு போனியா, நண்பா காலையில் என்ன சாப்பிட்டே, நண்பா மத்தியம் லஞ்சுக்கு என்ன வேண்டும்னு தினம் கேட்டு உண்ணை என் கண் போல பார்த்துகுவேன். 
வீட்டு வேலைக்கு ஒரு அழகான பஞ்சாபி லேடியும், கார் ஓட்ட ஒரு அரபு குதிரையையும் டிரைவரா கொடுத்தா போதும். இத்தனை வருட நட்புக்காக காந்தி ஜெயந்தி அதுவுமா இந்த தியாகம். நட்பின் இலக்கணமா இதை நீ ஏத்துக்கனும் நண்பா என்றேன். 
அதுக்கு அவர் இப்ப production issue இருக்கு. நாளைக்கு முடிஞ்சா கூப்பிடு. பேசி தீர்த்துக்கலாம் என்று போனை வைத்துவிட்டார்.
தியாகம் என்பது நாம் நம்மை கொடுப்பது அல்ல. இன்னொருத்தர் நமக்காக அவரை கொடுப்பது. அதை நாம சொல்லக்கூடாது. அவங்க செய்யனும்.
சின்னம்மா எனும் சசிகலாவை எல்லாம் தப்புனு தெரிந்தும் கடைசியில் கட்டையில் வேகும் வரை நட்பின் இலக்கணமா கூட வைத்து இருந்தாரே ஜெயலலிதா அம்மையார்… அதுக்கு பேர்தான் தியாகம். நம்மளா போய் முட்டு சந்தில் முட்டுகிட்டு நொந்து போனால் அதுக்கு பேர் விவேகம். 

காந்தி my experiments with truth மூலமா எனக்கு சொன்னது இதுதான். 

________________________________

Read more : http://bit.ly/2yHsfZU