கமல், ரஜினி எல்லாம் ஏன் அரசியலுக்கு வராங்கனு நிறைய பேர் கேட்கிறார்கள். இதுக்கு பல காரணம் சொன்னாலும்.. சினிமாவில் மார்கெட் போச்சு அதனால்தான் அரசியலுக்கு வராங்க என்று வாதம் செய்கிறார்கள். 

இந்த particular வாதத்திற்கு என் பதில் இதுதான்…
இந்த உலகத்தில் யார் யார், எப்ப எப்ப எதை எதை செய்யனும், செய்யக் கூடாதுனு இன்னொருத்தர் சொல்லமுடியாது. 

நாம் கூடத்தான் ஏதோ படிக்கின்றோம். பின்னாடி வேலை தேடி எதோ ஒரு உத்யோகத்தில் சேர்கிறோம். முதலில் கிடைத்த வேலையை வைத்து experience gain செய்கிறோம். திடீர்னு நம்ம வேலை அந்த கம்பெனிக்கோ, இல்லை நமக்கோ பிடிக்கவில்லை என்றால் வேறு இரு filed தேர்ந்து எடுத்து சாதிக்க நினைக்கிறோம். 
அது பல சமயம் புது filed ஆக கூட இருக்கும். அதுக்கு resume prepare செய்யும் போதும் சரி, interview attend செய்யும் போதும் சரி, அது புது field ஆக இருக்கும் பட்சத்தில் கொஞ்சம் preparation தவிர்த்து எதுவும் நம்மிடம் காட்டிக் கொள்ள எதுவும் இருக்காது. நாம் பழய வேலையில், company யில் செய்த வேலைகளை டிங்கர், பஞ்சர் ஒட்டித்தான் அடுத்த வேலைக்கு தாவுகிறோம்.
ஒரே வேலையிலோ, ஒரு தொழிலிலோ ,ஒரே வாழ்க்கை நோக்கத்திலோ நாம் நேர் கோட்டில் பயணிப்பதில்லை. வேலையிலோ, செய்யும் தொழிலிலோ மாற்றம் செய்யவோ, மாறவோ நாம் நினைக்கிறோம். வெற்றி பெறலாம் என்று எத்தனையோ நாம் try செய்வது இல்லையா என்ன??

பெரிய எந்த சாதனையும் செய்யாத நமக்கே ஒரு மாற்றம் தேவைப்படும் போது திரை உலகில் சொல்லிக் கொள்ளக் கூடிய சாதனை படைத்த ஒருவர் ஏன் ஒரு மாற்றத்த்துக்காக அரசியலில் இறங்கக் கூடாது?
அரசியலும் ஒரு career தான். அதிலும் professionalism உண்டு. கமலும், ரஜினியும் இதைத்தான் செய்ய வேண்டும் இதை செய்யக் கூடாது என்று சொல்பவர்கள் எத்தனை பேர் தங்கள் வாழ்க்கையில் career options களையும் மாற்றத்தையும் செய்யாதவர்கள்?
பிறக்கும் போதே அரசியலுக்கு நேர்ந்து விட்டு பிறப்பவர்கள் என்று இந்த உலகில் யாரும் இல்லை.
வந்து என்ன செய்யப் போகிறார்கள் என்பது தனிக் கதை. அந்த கதையை உங்களிடம் interview ல் கேட்கும் போது..
I am a team player, even though I don’t have direct experience my past job experience will help and I will do my best என்று சொல்லும் self confidence தவிற வேறு எதுவும் நம்மிடம் இருக்காது. 

இதே self confidence ல் கமலோ, ரஜினியோ பேசினால் சிரிக்கிறோம். இத்தனைக்கும் அவர்களை போன்று நாம் பெரிய அளவில் சாதித்தது கூட கிடையாது.
தகுதி என்பது வளர்த்துக் கொள்வது 

கூட பிறப்பது கிடையாது.