அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
இன்று காலையில் கொழுக்கட்டையையும், சுண்டலும் செய்து பிள்ளையாருக்கு படைத்தது, பின் உண்ட பின் இதை எழுத வேண்டும் என்று தோன்றியது.
சிறு வயதில் விநாயகர் சதுர்த்தி என்றாலே ஒரு பரவசம் இருக்கும்.
முதன் முதலில் ஒரு பெரிய பிள்ளையார் சிலை வாங்கி அதை சைக்கிள் பின்னால் வைத்து, பின் அதை கீழே விழாமல் சுமார் 3 கிலோ மீட்டர் தள்ளி வந்து வீட்டுக்குள் அவர் காலடி வைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
எவ்வளவு பெரிய பிள்ளையார் சிலை ஒருவர் வீட்டில் இருக்கிறது என்பதில் பொடியர்களிடம் போட்டியும் பொறாமையும் இருந்த பருவம் அது.
நான் முதன் முதலில் பிள்ளையார் சிலையை வாங்க என் அப்பாவுடன் சென்றேன். அங்கே கிராமத்தில் இருந்து வந்து ஒரு தார்பாலின் மீது சிலையை செய்து வைத்து விற்பார்கள்.
அந்த சிலையை செய்து விற்பவர்கள் எல்லோருமே கிராமத்து கலைஞ்சர்கள்.
சிலைக்கு அருகிலேயே ஒரு மாட்டு வண்டியில் சிலை செய்யும் களி மண்ணும் இருக்கும்.
சிலைகள் விற்க விற்க அங்கேயே அதை ஒருவர் செய்து கொண்டு இருப்பார்.
அடுத்த வருடம், என் தந்தை எனக்கு சிலை வாங்கி தராமல் இரண்டு ரூபாய்க்கு களி மண்ணை வாங்கி தந்தார்.
இதோ செய்து கொண்டு இருக்கிறேன் பார் என்றார். சுமார் 30 நிமிடத்தில் ஒரு அழகான பிள்ளையார் ரெடி.
எப்படியும், வீட்டுக்கு வந்தால் செய்துவிடலாம் என்ற தெம்பு வந்தது.
சிலை செய்தவரின் எல்லா steps களும் என் மனதில் மனப்பாடமாக ஞாபகமாக இருந்தது. முதல் ஸ்டேப் தவிர.
இதில் என்ன கடுப்பு என்றால்…விநாயகர் கூட பரவாயில்லை.. அந்த தம்மாத்துண்டு எலிக் கூட அதன் shape ல் இல்லை.
சாயந்தரம் வரை போராடி கடைசி வரை அந்த விநாயகர் அருள் எனக்கு கிட்டவில்லை.
கொழுக்காட்டை சுண்டல் எல்லாமே ரெடி.
என் விநாயகர் தவிர.
நானும் முடிந்த அளவு ஒரு shape செய்து அவர் தான் விநாயகர் என்று நம்ப வைத்தேன்.
களி மண்ணில் ஏதோ பிரச்சனை என்று சமாளித்து எடுத்து வந்து வைத்தேன்.
பூஜை மணி அடிக்க அடிக்க கயிறு போல் திரித்து ஒரு வாலை எலிக்கு ஓட்டினேன்.
அன்று புரிந்தது, சிலை வடிப்பது ஒன்றும் லேசு பட்ட காரியம் இல்லை.
அடுத்த வருடம் அதே கடைக்கு சென்றேன்…அங்கு …
First episode itself is gripping ….
It reminds me of my young days how I used to make Ganeshji …with clay …!!
Interesting start to Gingerbread Pieces… reminded me of my Vellore days when my brother and I used to buy clay and make Vinayagar. Over a period of time my brother excelled in making மண் பிள்ளையார். I never pursued…
Thanks Subbu Govindarajapuram
This is a “100 bits Ginger Series”. It’s a mix of everything. Hope you like it.
Sridar, looking forward to this series… I’m sure I would be able to reminisce my many memories of the beautiful Vellore Days!!!
நினைவுகள் பசுமை!! எங்கள் ஊரில் நன்கு பிசைந்த களிமண்ணை ஒரு அச்சில் வைத்து உடனுக்குடன் செய்து தந்தார்கள். எங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்வது இல்லை என்றாலும் அடம்பிடித்து சில வருடங்கள் வாங்கியதும் பக்கத்து வீட்டினருடன் சென்று கிணற்றில் போட்டதும் நினைவுக்கு வருகிறது. பல வீட்டு பலகாரங்கள், குதூகல சந்திப்புகள் தனி.