இன்று காலை கிட்டுவை அழைத்துக் கொண்டு விடியர் காலையிலேயே, Whistler ல் இருக்கும் ஒரு golf மைதானத்துக்கு morning walk சென்றேன். அங்கே இருவர் golf விளையாடிக் கொண்டு இருந்தார்கள். 

இருவருமே Scottish.
Kittu,  golf பந்துகளை பிடிக்க ஓடினான். உடனே அவர் சொன்னார்… dogs and golf go together.

ஏன்? என்று கேட்டேன். அவர் சொன்னார் golf கண்டுப் பிடித்தது நாங்கள்தான் என்றார். 

நான் சொன்னேன்… இது still debatable topic. இது பணக்காரர்கள் விளையாட்டு என்பதால் டச், scott, Britt இடையே  இதை யார் கண்டுபிடித்தார்கள் என்ற அடிதடி நடக்கின்றது என்றேன். ஏழைகள் ஆடும் கோலி குண்டுக்கு யாராவது யார் கண்டுபிடித்தார்கள் என்று சண்டை நடக்குமா என்ன ?
சிரித்துக் கொண்டே சொன்னார்.. இந்த லாஜிக் கேளுங்கள் உங்களுக்கு புரியும். Scottish highlands க்கும், கடலுக்கும் இடையே ஒரு மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. அது salt Walter தெளித்து விவசாயம் செய்ய இயலாத பெரிய இடங்கள். விளை பூமிகளை தாண்டி வேட்டை நாய்களுடன் நடந்து கடற்கறைகளுக்கு நடந்து செல்லும் Scottish இந்த சால்ட் மற்றும் நீர் குட்டைகள் இருக்கும் இடங்களை பெரிய புல்வெளியாக மாற்றி அதில் ஒரு விளையாட்டாக golf கண்டுபிடித்தார்கள். இதில் Point to point நடந்து சென்று கடலை அடைவதே நோக்கம்.

கூட நாயும், குச்சியும் தேவை. அதனால் இது Scottish game என்றார். 

வரலாறுகளை புத்தகம் வாயிலாக படிப்பதை விட பயணம் மூலம் படிப்பது ஒரு பேரின்பம்.