Life expectancy மிக குறைவாக இருந்த போது குகை மனிதனாய், மனுஷன் சந்தோஷமா வாழ்ந்துட்டு செத்தான்.
தினம் சாப்பாட்டுக்கு வேட்டையாடியவுடன் தூங்க போனான். ஒரு நாள் முடிந்தது.

உயிர் வாழும் வருடம் கூட கூட தூக்கத்தை தொலைத்தான் மனிதன்.
சாப்பாடு இரண்டாம் இடத்துக்கு போனது.
பின்பு தங்க வீடும், உடுத்த உடையும் சாப்பாட்டோடு சண்டை போட்டு வென்றது.
இந்த சண்டையை அவனே தினம் தூங்காமல் விழித்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

அனேகமாக மூவருக்கும் இடையேயான இந்த சண்டை ஓவராக போனால், கடைசியில் ஆமை போல் 500 வருஷம் அமைதியாக ஒரு மூலையில் பனங்கா மண்டையில் மூடி போட்டுக் கொண்டு வாழ்ந்து சாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Actually, வாழ்க்கை மிக தட்டையாக மெதுவாக போய்கொண்டு இருக்கிறது.
We are heading towards a tortoise life.