இன்று நடமாடும் நிதயானந்தா முதல், ஆடி அடங்கிய சந்திராசாமி வரை, எல்லா வித corporate சாமிகளின் குரு யார்? 

1978 இல் ஜெர்மானிய டிஸ்கோ ஆல்பம் ஒன்றை போனி.M. என்ற இசைக்குழு வெளியிட்டு சக்கை போடு போட்டது. இந்த பாடல்கள் அனைத்தும் ஒரு சாமியாரின் வாழ்கையை சுற்றி அமைந்த பாடல்கள். 
அவர் வேறு யாரும் இல்லை தி கிரேட் playboy, mystical healer, and political demiurge of திஸ் நூற்றாண்டு. – “கிரிகோரி ரஸ்புடின்”

மேற்கு சைபீரிய கிராமத்தில் ஒன்பதாவது குழந்தையாக பிறந்த இந்த ஜகஜால சாமியார், படிப்படியாக தன் சாம்ராஜ்யத்தை ரஷ்ய ஜார் மன்னன் வரை விரிவுபடுத்தினார். 

இவர் கடைசியில் தொட்டது Russia மன்னனையோ அவர் அறியனையையோ அல்ல. 

அவர் “பொண்டாட்டியை”.

ராணி அலெக்சாண்ட்ராவை தன் mystical வித்தைகள் மூலம் வசப்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக ரஷ்ய ராஜாங்கத்தையே ஆட்டிப்படைத்த புண்ணியவான். இவரை பற்றிய கட்டுக்கதைகள் ஏராளம். 

இவரே பரப்பியது போக மக்கள் இவரை பற்றி பேசாத நாள் இல்லை.

“Ra Ra Rasputin: lover of the Russian queen – there was a cat that really was gone” இது தான் பாடலின் வரிகள். இந்த boney M இசை தட்டுக்கள், தானே தேயும் வரை உலகம் முழுவதும் பாடி தேய்ந்தது. 
ரஸ்புடின் வாழ்ந்த வாழ்க்கை ஒரு மாய உலக வாழ்க்கை. 

“ஹீலிங் பவர்” தனுக்கு இருப்பதாய் முதன் முதலில் அட்டகாசமாய் மார்க்கெட்டிங் செய்த சாமியார். இவர் தான் இன்றைய சாமியார்களின் immortal குரு. காவி உடுத்தியது முதல், தாடிவைத்தது வரை ஒரு சாமியார் எப்படி வாழவேண்டும் என்பதை விக்கிபெடியாவில் எழுதி வைத்துவிட்டு சென்றவர்.

எதிரிகள் வீழ்த்திய வலையில் விழுந்து பின் கொல்லப்பட்டார். தூக்கி ஐஸ் ஏரியில் வீசினார்கள். இவர் இறந்தபின்பும் இவர் பற்றிய கட்டுக்கதைகள் அடங்கவில்லை.

இவர் கண்ணை உற்று பாருங்கள்.

எல்லா corporate சாமிகளும் தெரிவார்கள். 

ரா ரா ரஸ்புடின்..