தற்போது இந்தியா ஒரு சீட்டு கட்டு விளையாட்டில் தன்னையும் சேர்த்து கொள்ளுமாறு ஒரு குரூப்பிடம் ரொம்ப நாளாகவே கேட்டு வருகிறது. ஆனால் இந்த விளையாட்டில் உன்னை சேர்த்துக் கொள்ள முடியாது என்று ஆல்ரெடி குரூப்பில் உள்ள பெரும் கை உள்ள சீட்டாடக் காரர்கள் இந்தியாவை தள்ளி வைத்து அவர்கள் மட்டும் சீட்டுக்கட்டை லாபத்துடன் ஆடி வருகிறார்கள்.

நம்மோ பிரதமர் மோடி, சீனாவிடமும் மற்றும் ஏனைய உறுப்பினர்களிடமும் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்ட போதும் இன்னும் யாரும் தலையாட்டவில்லை.
இதைப் பார்த்த நம் பக்கத்து வீட்டு பங்காளி பாகிஸ்தானும் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் …என்னிடமும் அணு குண்டு இருக்கு என்று ஒரு குண்டை போட இந்தியாவின் position மிக சிக்கலாகி போனது.

ஏன் இந்த ஆட்டம் முக்கியம்? இதில் இந்தியா சேர போராடி வருவது எதனால்?
மற்ற பிரதமர்களை விட நரேந்திர மோடி இந்த விளையாட்டில் அதி தீவிரமாக ஈடுபட என்ன காரணம்?

கதை பெரிது என்றாலும், முடிந்தவரை சொல்லி விடுகிறேன். அந்த சீட்டாட்ட குரூப்பின் பெயர் NSG. Nuclear Suppliers Group. அணுவாற்றல் வழங்குவோர் குழுமம். சரி… NSG என்றால் என்ன?

அணு குண்டு, அணு சக்தி, அணு ராதா, அணுபமா, அணு மாலிக் என்று எந்த சொல் அணுவில் ஆரம்பித்தாலும் அதன் international டீலிங் இந்த குருப்பின் வழிதான் நடக்க வேண்டும். மொத்தம் 48 நாடுகள் இந்த

இது ஒரு closed Facebook group போல. கொடுமை என்னவென்றால் இந்த குரூப் ஆரம்பிக்க முதல் காரணம் நம்ம இந்தியாதான். ஓமி யெகாங்கிர் பாபா என்ற விஞ்ஞானிதான் இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தை. மும்பையில் பார்சி குடும்பத்தில் பிறந்த இவர் இங்கிலாந்து சென்று படித்து பாபா சிதறல், அண்டக்கதிர் ஆராய்ச்சியில் ஆய்வு செய்து உலகப் புகழ் பெற்றார்.

September 1939 ஆண்டு இங்கிலாந்தில் இரண்டாம் உலக போரின் ஒரு இடைவேளையில் இந்தியாவுக்கு விடுமுறைக்கு வந்தார். அப்போது Indian Institute of Science ன் தலைவர் சர்.சி.வி.ராமன். பாபாவை கோழி அமுக்குவது போல் அமுக்கி ஏன் உன் சேவையை இந்தியாவுக்கு செய்யக் கூடாது என்று கேட்டார் சர்.சி.வி.ராமன். பாபாவும் இசைந்து, சில மாணவர்களை செலகட் செய்து தனது ஆராய்ச்சிகளை இந்தியாவில் தொடங்கினார். பின்னாளில் மிக பிரபலாமான டாட்டா ஆராச்சியகத்தின் ஹரிஷ் சந்திராவும் பாபாவின் மாணவர்களில் ஒருவர். பாபாவின் திறமை அப்போது காங்கிரசில் இருந்த ஜவாஹர்லால் நேருவுக்கு தெரிவிக்கப்பட்டது.

பாபாவும் நேரும் சந்தித்தார்கள். நேரு அப்போது பிரதமர் இல்லை. வருங்கலத்தில் இந்தியாவில் அணு சக்தி திட்டங்கள் வர வேண்டும், அதை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் கோரினார். நேருவும் அவரை ஆமோதித்து அவர் பிரதமர் ஆனதும் இந்திய அணு ஆயுத திட்ட குழுவின் தலைவர் ஆக்கினார். அடுத்து இந்தியா சீன போர் வந்தது. பாபாவின் அணு ஆயுத குரல் ஓங்கி ஒலித்தது. Scientific Advisory Committee யில் இருந்து விக்ரம் சாராபாய் போன்றவர்களுக்கு வழி காட்டியாய் இருந்தார். நன்றாக போய் கொண்டு இருந்த பாபாவின் வாழ்க்கை சாட் என்று ஒரு நாள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

யார், எதனால் என்று இந்தியாவுக்கு தெரிந்தும் வெளியே பேச முடியாத நிலை.

ஆஸ்திரியாவில் நடக்க இருந்த இருந்த ஒரு அறிவியல் மாநாட்டுக்கு சென்று கொண்டு இருந்த பாபாவின் விமானம் மௌன்ட் பிளாங்க்கில் வெடித்து சிதறியது.
அப்போது அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளி பாகிஸ்தான். இந்தியா பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெறுவதில் அண்ணனுக்கு விருப்பம் இல்லை.

ஆசியாவில் இந்தியா தலை தூக்க கூடாது என்று பிளான் செய்து விமானத்தில் கார்கோ வைக்கும் இடத்தில் குண்டு வைத்து வெடிக்க வைத்ததாக பின்னாளில் கிரௌலி எனும் CIA பேட்டி கூட கொடுத்தார்.
எவ்வளவு முட்டுக்கட்டை போட முடியுமோ அத்தனையும் போட்டார்கள்.

இருந்தாலும், இந்திரா காந்தி விடுவதாக இல்லை. ராஜா ராமண்ணா தலைமையில் அணு குண்டு செய்ய ஆடர் போட்டார்.
ராஜஸ்தானில் பொக்ரான் பாலைவனத்தில் முதல் அணு ஆயுத சோதனையை நடத்தினார். புத்தர் சிரித்தார். அமெரிக்கா வெகுண்டு எழுந்தது.

உடனே இந்தியாவை மானிடர் செய்ய November 1975 ல் ஒரு குழு ஆரம்பிக்கபட்டது. அந்த குழுதான் NSG – Nuclear Suppliers Group.
இதில் இந்தியாவை சேர்க்க சொல்லித்தான் மோடிஜி மட்டும் அல்ல எல்லா இந்திய பிரதமர்களும் கேட்கிறார்கள்.

காரணம், இது மானிடர் மட்டும் அல்ல. இது ஒரு பிரெஸ்டிஜ் அணு ஆயுத வியாபார சந்தை. இன்றுவரை நாம் அணு ஆயுதத்தில் உபயோகிப்பது அனைத்தும் லோக்கல் டெக்னாலஜி.
இந்த குரூப்பில் சேர்ந்தால் நம்மால் உலகத்தில் உள்ள லேட்டஸ்ட் தொழிற்நுட்பத்தை பெற முடியும். இந்தியா அதை பெறக்கூடாது என்பதில் மூவருக்கு விருப்பம்.

1. அமெரிக்கா 2. சீனா 3. பாகிஸ்தான்.

அதனால் அமெரிக்கா இந்தியாவை சேர்த்துக் கொள் என்று சப்போர்ட் செய்கிறது. சீனா பாகிஸ்தானை ” நீயும் அப்பளை செய் என்று தூண்டிவிட்டு பாகிஸ்தானும் இந்த வருடத்தில் என்னையும் சேர் என்று apply செய்துவிட்டது.
இதனால் ஆசியாவில் ஆயுத போட்டி நடைபெறும் என அமெரிக்காவும், சீனாவும் மத்த உறுப்பினர்களிடம் சொல்லி இந்தியாவின் இந்த முயற்சியை தடுத்து விட்டனர்.

மோடியின் இந்த வருடத்தின் NSG முயற்சி பாராட்ட தக்கது.
எல்லா வித ராஜதந்திரங்களையும் உபயோகபடுத்தி பார்த்துவிட்டார்.
ஸ்விஸ், South Africa, Norway, Brazil, Austria, New Zealand, Ireland ,Turkey நாடுகள் எல்லாம் நம்மை கடைசியில் வாரிவிட்டன.
கொடுமை என்ன வென்றால் இந்த NSG ல் கஜகிஸ்தான், மால்டா, ஸ்லோவோக்கியா , லாத்வியா, லிதுவேனியா போன்ற டெக்னலாஜியில் பஞ்சம் பிழைக்கும் நாடுகள் எல்லாம் உறுப்பினர்கள்.

நாம் மட்டும் இல்லை.
Nuclear non-proliferation treaty ல் இந்தியா கையொப்பம் இடவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் இதில் இருக்கும் வளர்ந்த நாடுகள் வருடத்துக்கு ரெண்டு மூன்று என்று எல்லாம் செய்து முடித்து வைத்து விட்டன.

பாகிஸ்தான் பங்காளியை கைகாட்டியே இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர்வதை தடுக்க இந்த முறையும் வெற்றி பெற்றுவிட்டார்கள்.
ஹோமி பாபா இறந்த பின்பும் புத்தர் இரண்டு முறை சிரித்தார்.

ஒரு நாள் இந்தியாவில் புத்தரே மீண்டும் உயிர்தெழுந்து வருவார்.