எங்கு ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.
ஆனால் எங்கு முடிக்க வேண்டும் என்று மட்டுமே தெரிகிறது.
என் வாழ்க்கையின் வாழ்நாளின் பாதி சதேவீதத்தை தாண்டிவிட்டேன் என்று நினைக்கிறன்.
அது மிகையா இல்லை குறைவா என்று தெரியவில்லை.
சுமார் 25 வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் என்னைப் புரட்டி போட்டது.
யார் புரட்டினார்கள். எதற்கு நான் புரண்டேன் என்று எல்லாம் தெரியாது.
It just happended. ஒரு சின்ன ஸ்பார்க்.
அந்த நாளுக்குப் பின், என்னை நானே மாற்றிக் கொள்ள கற்றுக்கொண்டேன்.
கிருஸ்து பிறப்பதற்கு முன், பிறப்புக்கு பின் என்று வரலாற்றை ஒரு புள்ளியில் இருந்து பிரிப்பது போல நானே பிரிந்தேன்.
என்னைப் பிரிக்க கற்றுக் கொண்டேன்.
அதற்குப் பின் நான் பார்க்கும் பார்வையையும், கடக்க வேண்டிய பாதையையும் மாற்றி அமைக்கத் தொடங்கினேன்.
அதற்குப் பின் நான் பழகும் நண்பர்கள், பேசும் வார்த்தைகள், செய்யும் செயல்கள் என அனைத்தையும் மாற்றினேன்.
அசையா தண்டவாளத்தில் ஓடும் ரயிலைப் போல ‘டக்’, ‘ட’க் என்று ஓடினேன்.
சத்தம் கேட்டது.
வண்டி ஆடியது. தேவையான இடத்தில் நின்றது.
ட்ராக் மாறியது.
சில சமயம் தடமும் கூட புரண்டது.
எழுந்து மீண்டும் ஓடினேன். இதோ பாதி தூரம் வந்துவிட்டேன்.
என் வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்கள், நடந்த நிகழ்வுகள், படித்த வரலாறு, பிடித்த அறிவியல், யோசிக்க வைத்த இயற்கையின் விந்தைகள் என ஏராளம்.
இதை எல்லாம் ஒரு நாள் தொகுப்பாக எழுத ஆசை.
அதனால் போன வருடமே இதை முடிவு செய்துவிட்டேன்.
இனி என் எழுத்துக்கள் “பாப்லோ லுகாஸ்” எனும் புனைப் பெயரிலே வெளிவரும்.
இந்த வருடம் முடியும் முன்பு அமேசானில் இந்தப் புத்தகம் கிடைக்கும்.
இதுவரை நான் எழுத நினைத்ததை இன்னமும் எழுதவே ஆரம்பிக்கவில்லை என்பதே இதன் முதன் உந்துதல்.
வரலாறு, Psychology, Science, Technology and Politics மற்றும் பயண அனுபவங்களைப் பல வருடங்களாகத் தொகுத்து வைத்து இருந்தேன். இனி அவை கல்வெட்டு snippets ஆக வெளிவரும்.
இனி என் எழுத்துப் பயணம் “Pablo Lucas” எனும் புனைப் பெயருடன் பயணப்படும்.
புத்தகத்தின் பெயர்: கெளபாயின் கல்வெட்டுக்கள்
VTW ல் எழுதுங்கள் என்று என்னை எழுத ஊக்கப் படுத்தியவர்கள் திரு. ரத்தினஸ்வாமி, திரு. பொன்ராஜா மற்றும் திரு. லிங்கி அவர்கள்.
என் முதல் எழுத்து எந்தத் தளத்தில் உருவானதால் இங்கு இருந்தே என் பயணத்தை துவங்குகிறேன்.
இந்தப் புத்தகம் இந்தத் தளத்திற்கு சமர்ப்பணம்.
உளியுடன், கற்கள் நோக்கி நடக்க ஆரம்பித்து உள்ளேன்..
எங்கு ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.
ஆனால் எங்கு முடிக்க வேண்டும் என்று மட்டும் தெரிகிறது.
பப்லோ லுகாஸ்
Leave A Comment