நான் வரைந்த ஓவியங்களில் மிகக் கடுமையாக போராடி ரசித்து வரைந்தது இந்த ஓவியம்தான்.
மெதுவாக வரைய சுமார் மூன்று வாரம் ஆனது.
அது Hum Aapke Hain Koun..! வெளிவந்த சமயம்.
கோவை அர்ச்சனா தியேட்டரில் படம் பார்த்து விட்டு வந்த போதும், மனதில் இருந்து அகலாத ஒன்று என்றால் அது தியேட்டரில் ஒவ்வொரு பாட்டுக்கும் கிடைத்த ஆரவாரம் !
தியேட்டர் இருக்கும் இடம் மார்வாடிகளின் மெக்கா எனும் RS Puram.
பாதுஷாவின் அங்கங்கே ஒட்டி இருக்கும் சக்கரை பாவு போல் தியேட்டர் முழுவதும் சேட்டு பெண்கள் திட்டு திட்டாக அங்கங்கே, குழு குழுவாக அமர்ந்து இருந்தார்கள்.
அநேகமாக, இந்தப் படத்தை அவர்கள் குறைந்த பட்சம் பத்து முறையாவது பார்த்து இருப்பார்கள் போல.
படம் ஆரம்பித்ததில் இருந்து ஒவ்வொரு சீனுக்கும் வசனம் வரும் முன்னே அங்கங்கே கிசு கிசு என்ற வண்டுகள் ஹிந்தியில் ரீங்காரம் இட்டு கைகளை தட்டின.
ஜோத்பூர், பிக்கானீர் வளையல்கள் சத்தம் ஒவ்வொரு பாட்டுக்கும் ராம் லக்ஷ்மன் இசையைத் தூங்கி விழுங்கின.
படத்தில், மாதுரியை விட சல்மானுக்குதான் பொண்ணுங்க கிட்ட செம கிளாப்ஸ்.
சரி, மாதுரியை வரைந்து என்ன ஆகப் போகின்றது… சல்மானை வரைந்தால் ஆவது ஒரு நாள் …ஏதாவது ஒரு சேட்டு பொண்ணுகிட்ட காட்டி ..Dot Dot Dot..
சரி விடுங்க …
Back to ஸ்கெட்ச்.
Just to note…
There is no pure white in this picture. ( 99.9%)
முழு படத்திலும் ஒரு Grey tone இருக்கும்.
கண்ணில் மட்டும் வெள்ளை.
மற்றபடி படம் முழுவதும் Grey டோனில் விளையாட்டு.
இந்த Board பேர் Linen Board ( White Linen Textured).
காட்டன் cloth போன்று இருக்கும்.
Amazon ல் கிடைக்கின்றது.
அப்போது எல்லாம் சின்ன சீட் கிடையாது. Fullboard வாங்கி custom cut அடித்து Hardboard ல் ஒட்டி காய வைத்து விடவேண்டும்.
இந்தப் பேப்பரின் speciality…வரிக் குதிரை போல் criss cross textures. மேடும் பள்ளமும் மாறி மாறி இருக்கும்.
மல்டி layer பென்சில் ஓவியங்களை வரைய எனக்குத் தெரிந்து இதுதான் the best medium.
சிலருக்கு ஒத்து வராது. எனக்கு இதிலே பழகி விட்டதால் போட்டோ ரியலிசம் என்றால் என் favourite லினன் போர்டு மட்டுமே.
சல்மானுக்கு பெண்கள் கண். முகம் ஒரு perfect மாடல் முகம். ஒரு முகம் மாடல் லுக் உடன் இருக்க Chin செவ்வகமாக இருக்க வேண்டும்.
இந்தியாவின் ஒரே perfect ஆண் முகம் ( Geometrically correct மாடல் – மிலிண்ட் சோமன்)
சல்மானின் கை ரோமங்கள் மட்டும் சுமார் ஒரு வாரம் எடுத்து வரைந்தது.
முடி வரைய முதன் முதலில் Charchol + Blade technique உபயோகித்தேன்.
முதலில், கரித் தூளை வைத்து வரைந்துவிட்டு பின்பு பிளேடு முனை கொண்டு மெதுவாகக் கீறி எடுக்க வேண்டும்.
தப்பாக இழுத்துவிட்டால், மீண்டும் கரி தூளைப் போட்டு காயவைத்து விட்டு ஒரு நாள் கழித்து மீண்டும் வரைய வேண்டும்.
ஒவ்வொரு லேயர் வரைந்த பின் Pasofix Spray அடிக்க வேண்டும்..
இரண்டு வகையில் இதை அடிக்கலாம். (Holding the picture vertically or horizontally)
If you go to the vertical school of thought, make sure you do it back and forth across the picture horizontally, dropping from top to bottom on subsequent sweeps.
If you spray from the bottom to top you risk adding additional fixative to those areas you have already sprayed because gravity will pull some of the sprays down.
Spray அடிப்பதிலேயே பினிஷ் மாறிவிடும்.
இதை வரைந்து முடித்தவுடன் நிறையப் பேர் இதை சல்மான் கானுக்கு அனுப்பச் சொன்னார்கள்.
ஹ்ம்ம் …நான் சல்மானுக்கு வரையவில்லை.
என்னைக்காவது ஒரு சேட்டு பொண்ணு என் வாழ்க்கையில் வரும்..
அப்ப, இந்த ஒரிஜினல் படம் தேவைப்படும்…னு சொல்லிட்டேன்.
God is Great!
சில வருடத்தில் அதுவும் நடந்தது.
என்னைக்குமே ஒண்ணு நினைச்சி அதுக்கு உழைத்தால் அது வீணாகாது.
It’s just magical… amazing…
This is coming to life ! No words of praise would suffice ????????????????
I remember seeing this?
Yes. Displayed once in our college art exhibition
Wow fantastic
Great bro
Great work
Superb… Great
Superb work.. Salman looks great in this than photo!
wonderfull
This is mind blowing!
Wow Amazing.
you are unique ..exceptional …what a genius ..your effort really shows ..Numero Uno …Sridar
Absolutely no words….
I think I have seen this before..உயிரோட்டமுள்ள படம்.
It was in my hostel Room Senior !!!
Wonderful
Excellent, feels like salman is right in front of you. The BEST. I wish you draw Madhuri as well
Fantastic.
Wonderful ????????????????
Unga sketch/painting Ku lam thaniya dictionary la word kandupidikanum.amazing/extraordinary/exceptionally good lam pathathu.vera level ????
Beautiful
Wow! Those eyes! ????
Wonderful art Sridhar! Awesome !
Nice
Mesmerizing! True lifelike sketch????????
This is excellent MR. Sridhar Elumalai. Looks awesome.
Did you see Anil Kapoor and Juhi Chawla pictures that he posted?