ஷாருக் கான் என் ஆர்ட் Favourite. வரைந்து, வரைந்து ஓய்ந்து விட்டேன்.
சுமார் 16 பிக portraits. பின் ரியலிசம், போட்டோ பினிஷ் ஆர்ட் பக்கம் முயல ஆரம்பித்தேன்.

அப்போதுதான் இணையம் மெதுவாக ஆர்ட் field பக்கம் வந்தது.
அதில் அதிக blogs இல்லை என்றாலும் ஒரு ஜெர்மானியர் ஒருவர் எழுதிய டிப்ஸ் வைத்து லோக்கல் ஆர்ட் கடையில் சிலவற்றையும், பெங்களூர் சென்ற போது சில ஐட்டங்களையும் வாங்கி வந்து இந்த வகை பினிஷ் வரைய கற்றுக் கொண்டேன்.

இந்த வகைகளுக்கு architectural pencil ( HB to 9B) வரை உபயோகிக்க வேண்டும். வரையும் மீடியம் சாதாரண ஆர்ட் பேப்பர் கிடையாது. அதற்குப் பெயர் Stonehenge’s print making paper. இப்போது எல்லா இது அமேசானில் கிடைக்கின்றது. அப்போது எல்லாம் தேடி தேடிச் சென்று பெங்களூரில் ஒரு ஆர்ட் கடையில் இதை தேடிப் பிடித்தேன். Technique இதுதான். Drawing by lightly blocking in your subject. And then start massing in the major forms. மெதுவாக the large shapes of light and shadow guide you, detail comes later..டீடைல் வர வர தேய்க்க வேண்டும். கரியைப் பூசி பின் மெதுவாகக் கலர் டோனர் போல வரைய வேண்டும்.

I am somewhat Lucky. எங்கள் தாத்தாவின் போட்டோ studio வில் Black and White photo print போடப் பழகி கொண்டேன். நெகடிவில் இருந்து வெளிச்சம் பரவி, bromide பேப்பரில் எப்படி சில்வர் ஐயோடைட் கரைகிறதோ அதே technique தான் இதிலும்.
In Photo Developing Techniques – இதை டார்க் ரூம் methodologies என்பார்கள். தேவையான அளவு வெளிச்சத்தை expose செய்ய வேண்டும். அதை மிகவும் பொறுமையாக செய்ய வேண்டும்.

இந்த மாதிரி பினிஷ் கொடுக்கும் படத்தின் subject எப்போதுமே டார்க் subjects – அட்டைக் கரி போல் இருக்க வேண்டும்.

Once your drawing is coming well along, and we can see all the major shapes of your subjects. Then it’s time to fully develop the darks in the background.

ஒரே நாளில் வரைய முடியாது. ஒரு லேயர் வரைந்துவிட்டுக் காயவிட்டு பின் அடுத்த லேயர் வரைய வேண்டும்.

படம் கருப்பாக வரும். கரு கரு என்று பார்க்கவே முதலில் கேவலமாக நெகட்டிவ் லுக் இருக்கும். மனசைத் தளர விடாமல் மெதுவாகக் கருப்பை தேவையான இடத்தில் இருந்து நீக்க வேண்டும்.

பொறுமை. பொறுமை. பொறுமை. When creating your deepest blackest values, patience is the key.

கடைசிக் கட்டம் வந்தவுடன், பென்சில் முனைகளை உடைத்து தூள் தூளாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மெதுவாக பெயிண்ட் Brush வைத்து வடிவேலு, தோசைக்கு மேல் மழைச் சாரல் போலப் பொடி தூவச் சொன்னது போல் மெதுவாக டச் செய்ய வேண்டும்.
இதை buffing technique என்பார்கள்.. much like hand buffing or waxing your car.

சுமார் 20 முதல் 25 layers வரைய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக காகிதத்தில் இருந்து ஷாருக் உயிரோடு வெளியே வருவார்.
கடைசியாக, இரண்டு வகை fixative இருக்கிறது.

1. Workable Fixative: To protect against smudging pencil, pastel or charcoal. It can also help provide texture when you’ve applied so many layers of dry media that the paper
won’t accept any more.

Final Fixative: A final fixative is meant for use once you’ve completed your artwork for a final layer of protection. You must still be very careful not to spray too heavily or too close to your art because it can alter the
appearance significantly ( Krylon® Fine Art Fixatif) உபயோகிக்கலாம்.

Enough… இந்தப் படத்தை வரைந்து அதை ஒரு Art exhibition வைத்தவுடன், ஒரு business அதிபர் அதை பெரும் தொகைக்கு display வில் இருந்து எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.

பின் இதே படத்தை, எங்கள் கல்லூரியில் நடந்த ஒரு ஆர்ட் எக்ஸிபிஷனில் Live Demo வாக 8 மணி நேரத்தில் வரைந்தேன்.

என் கூட இன்னொரு பேனர் ஆர்ட்டிஸ்ட்டும் அந்த டெமோவில் வரைந்தார்.

இந்தப் படம் வரைந்து முடிக்கும் ஒரு மணி நேரம் முன்பு ஒரு பெண் வந்து அமர்ந்தார்.

அவர் பெயர் சசிகலா ! தி ரெஸ்ட் is history.