சித்தாராமையா கர்நாடகத்துக்கு தனிக் கொடி கேட்கிறார். நாயிடு காரு special status கேட்கிறார். போற போக்கை பார்த்தால் அனேகமா Cathay Pacific ல் நம்ம பேர பசங்க Bangalore போய் இறங்க தனி விசா எடுக்க வேண்டி வரும் போல.

Strategically தெற்கு தேய்கிறது வடக்கு வளர்கிறது என்ற கோஷத்தின் மறு வடிவம்தான். மேட்டர் இதுதான் .. southern states ல் நீங்க ஒரு ரூபாய் மத்திய வரி கட்டினால் அதில் சுமார் 40 பைசா மீண்டும் நம் கைக்கு வருகிறது. அதுவே உத்திர பிரதேசத்தில் ஒரு ரூபாய் வரிக்கு 1.75 காசு போய் சேருகிறது.

Federal system த்தில் சம நிலைதான் தூண். அதில் டொக்கு விழுந்தால் சோவியத் துண்டானது போல் துண்டாகி போகும். எதுவுமே நடக்காதுனு மட்டும் நினைக்காதீங்க.

ஒரே இந்தியா, ஒரே நாடு என்ற எண்ணமும் நோக்கமும் எல்லா சலுகைகளும், நியாயங்களும் உரிய முறையில் மத்திய அரசு பேணிக் காப்பதிலேயே இருக்கிறது.

ஒரு சின்ன sample… காவிரி நடுவர் மன்றம் அமைக்க சொல்லி உச்ச நீதி மன்றமே தலையில் கொட்டி சொல்லிய பின்பும் அதை மத்தி அரசு ஏன் செயல் படுத்த தவறுகிறது என்பதை மானில அரசு கேட்காவிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.

கியாஸ் – கோயபல்ஸ் தியரிப் படி நாயுடுவோ, சித்தாராமைய்யாவோ இப்படி திமுறும் போது, இன்று இல்லை என்றாலும் ஒரு நாள் எல்லாம் குமிறி திக்குனு திடீர்னு தீப் பற்றி மக்கள் புரட்சியாய் எறியும்.

அது என்னைக்குனு தெரியாது.

ஆனா போகிற போக்கில் நடகும்னு தோணுது.

காரணம் …

History repeats.