இன்று காலையில் 4 மணிக்கே அலாரம் வைத்து பிரீமியர் லீக் football பார்க்கப் பையன் எழுப்பிவிட்டான்.

இப்போதே பார்த்து பழகவேண்டும். இந்த வருஷம் World Cup. இத்தாலி qualify ஆகல, Iceland ஆடுதுனு பல updates. இதை எல்லாம் பின்னாடி பார்க்கலாம்.

மேட்டர் இதுதான். Football முடிந்தவுடன் பார்த்த படம் இந்தச் சவரக்கத்தி.

படத்தில் வில்லன் நம்ம அகிரோ குரசோவா மிஷ்க்கின். ஹிரோ தன் பொண்ணுக்காக கேரளாவுக்குப் போய் நாய் புடிச்சுகிட்டு வந்த பாசக்கார அப்பா ராம்.

ராம் ஒரு பார்பர் ஷாப் வச்சு இருப்பார்…அப்ப ஒரு நாள்.. ஹ்ம்ம் இதுக்கு மேல கதையை எப்படி சொல்றதுனு எனக்கு தெரியல. எனக்கு மட்டும் அல்ல director க்கும் அதே பிரச்சனை.

அப்படியே படல் ஒரு லூசுக் கிட்ட ஆரம்பித்து அப்படியே ஆடிகிட்டே லொட லொடனு ஓடுது.

முக்கி, முக்கி மிஷ்க்கினை ஒரு காமடி வில்லன்னு நமக்கு prove செய்ய முயன்று இருக்கிறார்கள். ஒரு காட்சியில் இவன் ஒரு லூசு வில்லனு அடியாளே சொல்லும் அளவுக்கு script.

அவர் லூசு மாதிரி நடிச்சு இருக்கவே வேண்டாம். சும்மா வந்து முறுக்கிகிட்டு நின்று இருந்தாலே போதும்.

ராம் இந்த கதாப்பாத்திரத்துக்கு கொஞ்சம் கூட செட் ஆகல. அவருக்கு பட்டர்பிளைன்னா ரொம்ப பிடிக்கும் போல. படத்தில் தேவை இல்லாத இடத்தில் பட்டர்பிளை வந்து போகுது

படத்தில் ஒரு character க்கு கூடச் சரியான நடிகர் தேர்வு இல்ல.

படம் ஆரம்பிக்கும் போது பார்ப்பர் shop ல் ஒரு கத்தி காட்டுவார்கள். அது ஒரு மொக்கை கத்தி.

படம் பார்க்கும் நாம் அதைக் கழுத்தில் வச்சு வெட்டிகிட்டு நாண்டுகிட்டு சாக வேண்டியதுதான்.

படம் எடுக்கிறாங்க படம்.