கடந்த 20 ஆண்டுகளில் எத்தனையோ மேனேஜர்களிடம் வேலை பார்த்து இருக்கிறேன். அதில் இருவர் மட்டுமே பெண்கள். ஒருவர் நான் அனிமேஷன் industry யில் இருக்கும் போது art director ஆக இருந்தவர். இன்னொருவர் என் தற்போதைய மேனேஜர்.

முதல் மேனேஜர் Very unique, intelligent and dynamic leader. அது என் முதல் job என்பதால் என்னால் அவ்வளவு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்த ஆண்டில் மீண்டும் ஒரு பெண் மேனேஜர் வந்தவுடன் என் பழைய மேனேஜரின் பல பண்புகளை இவரிடமும் கண்டு வியந்தேன்.

இது ஏதோ எதேச்சையாக நடந்தது அல்ல. நான் கீழே குறிப்பிடும் பல பண்புகள் நான் வேலைப் பார்த்த experience கொண்டு எழுதியது.

பலது எழுதலாம்.

இருந்தும் just for discussion…

In majority of the cases .. என்பதை எல்லா point க்களுக்கும் முன் போட்டு இவை என் case study போல் படிக்கவும்.

மைக்ரோ லெவல் திங்கிங்:

Macro Level execution.

இந்தப் பண்பு எல்லா ஆண் மேனேஜர்களிடமும் நான் கண்டதில்லை. இது பெண்களுக்கே உண்டான strength.

Genetically பெண் ஜீன் நான்கு சுவருக்குள் evolve ஆனது. வேட்டைக்குச் சென்றவன் திரும்ப வரும் வரை மொத்த குடும்பத்தையும் 360 rotate செய்து ஆய்ந்து செயல்படுத்தும் திறன் கொண்ட ஜீன் அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை அடிமட்டத்தில் ஆராயும் திறன் உள்ளவர்கள். மேம் போக்கு என்பது அரிது. நோண்டி நுங்கு எடுத்துவிடுவார்கள்.

2. அசால்ட்னஸ்:

மிகப் பெரிய பிரச்சனைகளை அசால்ட்டாக ஆரப் போட்டு மெதுவாக டீல் செய்யும் அணுகுமுறை. ஆண் மேனேஜர்கள் பொதுவாக Action pack விரும்பிகள். Result, Result என்று குதிக்கும் அளவுக்குப் பொறுமை இருப்பது இல்லை.

3. காட்டிக் கொடுப்பது, போட்டுத் தள்ளுவது:

தம் டீமில் ஒருவர் செய்யும் தவறுக்கு தானாக வந்து பொறுப்பு ஏற்று தலைமை பண்பைக் காப்பாற்றுவார்கள். மறக்கும் குணமும், மன்னிக்கும் குணமும் கொண்டவர்கள். ஆண் மேனேஜர்கள் பொதுவாக யார் மீது தப்பு என்பதைக் கண்டுபிடிப்பதில் இருக்கும் அக்கறையை தன் குழுவில் இருப்பவரைக் காப்பாற்றி தேற்றுவதில் காட்டியதில்லை. குழந்தைகளை வளர்க்கும் பெரும் பொறுப்பில் இருப்பதால் பெரும்பாலும் பெண்கள் வேலை செய்யும் இடத்தில் வஞ்சம் வைத்து ஒருவரை அழித்துப் பார்த்தது இல்லை.

4. Dedication:

வேலைக்கு வந்தால் வேலை. இந்த விஷயத்தில் இவர்களை அடித்துக் கொள்ள முடியாது. OP அடிப்பதிலும் சமாளிப்பதிலும் ஆண்கள் கில்லாடி.

5. IQ:

அராய்சிகள் அடிப்படையில் IQ நான்கு வகைப்படும். அதில் social awareness மற்றும் relationship IQ இரண்டுமே professional qualities. இவை இரண்டுமே பெண்களுக்கு அதிகம். Project சுற்றி என்ன நடக்கிறது மற்றும் stakeholder relationship எல்லாம் பக்காவாக maintain செய்வார்கள் பெண்கள்.

6. Dignity:

பெண் என்பதாலே ஆண்கள் வழிந்த பல சந்தர்ப்பங்களை பார்த்ததுண்டு. அதுவே பெண்கள் சரியான இடத்தில் சரியான கோடுகளை professional லாக கிழித்துவிட்டு நடந்து போவார்கள்.

Scientifically பெண்கள் are more evolved, live longer, supernatural and powerful.

அதனால்தான் ஆண்டு ஆண்டுக் காலம் அவர்களை அடிமைப்படுத்தி வந்தார்கள்.

ஆண்கள் இதற்கு உபயோகப்படுத்துவது muscle power.

அந்த காலம் கரை ஏறிவிட்டது.

It’s a Women’s Era.

இவர்கள் இல்லாமல் வீடு மட்டும் அல்ல பூமி கூட சுத்தாது.