இந்த வாரம் பார்த்த மிகச் சிறந்த ஒரு வரலாற்றுப் படம் இது. ஒரு அரசியல் தலைவரின் இறப்பில் எந்த அளவுக்கு அரசியல் இருக்கும் என்பதை நகைச்சுவையுடன் பல உண்மை சம்பவங்களுடன் சொல்லும் பிரிட்டிஷ் நாவலை ஒட்டி எடுக்கப்பட்ட படம்.

ஜெயலலிதா இறப்பும், அதற்குப் பின் நடந்த கூத்துக்களுக்களும் முன்னோடி இது. Stalin ஒரு dictator. அவர் stroke ல் கீழே விழுந்து 12 மணி நேரம் வரை எந்த டாக்டரும் வந்து பார்க்காத அளவுக்கு ஒரு அரசியல் நடந்தது.

Stalin இறந்த பின்பு நடந்த வரலாற்றில் குருஷேவ் எப்படி அடித்துப் பிடித்து பதவிக்கு வந்தார் என்பதைச் சிரிப்புடன் சொல்லும் ஒரு அட்டகாசமான படம்.

If you love historical movies and knows a bit about Soviet Union’s history… for sure you will love it.

இல்லை ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால்… நீங்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது.

Stalin மகனும், மகளும் கடைசியில் என்ன ஆனார்கள் என்பதை இதைவிட சுவாரியசமாக சொல்ல முடியாது.