நான் காலேஜ் படிக்கும் போது ஒரு முறை interstate Art festival க்கு கேரளாவுக்குப் போனேன்.

போன இடம் கோட்டயம்.

கேரளாவில் இருந்த எல்லா college ல் இருந்தும் பலர் வந்து இருந்தாலும் கோட்டயத்தில் இருக்கும் ஒரு மிகப் பெரிய தியேட்டரில்தான் Event நடந்தது.

கோட்டயம்தான் host city.

ஊரே கலை கட்டி இருந்தது. School படிக்கும் பெண்கள் முதல் college படித்த அக்காக்கள் வரை ரக ரகமாகக் குவிந்து இருந்தார்கள். Infact இரண்டு கண்கள் போதாது.

பசங்களை பற்றி please பேச வேண்டாம்.

சேலைகள் முதல் school uniforms வரை திரும்பிய இடம் எல்லாம் செம ரகளை. Art competition நடந்தது ஒரு ladies School ல்.

என் வாழ்க்கையில் அப்படி ஒரு அழகான school லை பார்த்ததே இல்லை.

ஒரு ஊரு முழுவதும் எப்படி அழகான பெண்கள் இருக்கிறார்கள் என்று இன்று வரை எனக்குப் புரிந்ததில்லை.

கோட்டயம் ஒரு mixed community. Muslims, Christians என்று பல தரப்பட்ட மக்கள் இருப்பினும் அந்த வளமையான கலர் மட்டும் எப்படி என்று இன்று வரை புரிந்தது இல்லை.

இதுதான் உண்மை…

அந்த ஊர் பெண்களுக்கு மஞ்சளும் இல்லாமல், சிவப்பும் இல்லாமல்.. Adobe Photoshop லே இல்லாத ஒரு கலர் palette நிறம்.

எனக்கு என்னவோ, அரேபியாவில் இருந்து அழகு கப்பலில் ஆழப்புழா வழியாக கேரளாவுக்கு வந்து, நாயர் டீயில் கலந்துவிட்டது என்று அன்றும் இன்றும் நம்புகிறேன்.

கண்கள் ஈரானுக்குச் சொந்தமானது. நிறம் கிழக்கு அரேபியா. சிலரை கோஷே என்பார்கள். Muslims, Christians இருவருக்கும் ஒரே பெயர் அந்த ஊரில் உண்டு. கோட்டயம் ஜெருசலேம் போன்ற ஒன்று இணைந்த பூமி.

கடைசியில், வாயைப் பிளந்து கொண்டு வரைந்து competition ல் கோட்டை விட்டேன்.

இப்போது இந்த வீடியோவை பார்த்த போது எனக்கு பழைய கோட்டயம் ஞாபகம்தான் வருகிறது.

தமிழ் நாட்டில் இருந்து கொண்டு கோட்டயத்து பைங்கிளிகளைக் கண்டு ரசிக்காதது, டெல்லியில் வசித்துக் கொண்டு தாஜ்மஹலை பார்த்து ரசிக்காததற்கு சமம்.