இன்று நாம் திருக்குறளையும், திருவள்ளுவரையும் போற்றுகிறோம்.
திருவள்ளுவருக்குச் சிலை, மண்டபம் எல்லாம் கட்டி, உலகப் பொது மறையாம் திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் தக்க மரியாதையை தருகின்றோம் .
தமிழ் என்றால், திருக்குறள். Current Status.
குறள் இல்லாமல் பாட புத்தகம் இல்லை. குறள் இல்லாமல் இயல், இசை நாடகம் இல்லை. இதில் எழுதப்படாத கருத்துக்களே இல்லை எனலாம். ஏராளமான மொழிகளில் அவை மொழி பெயர்க்கப்பட்டு இன்று, திருக்குறள்கள் வான் புகழ் அடைந்து இருக்கிறது என்றால் அது மிகை அல்ல.
But, இவை அனைத்துமே கடந்த 150 வருடத்துக்குள் நாம் கொடுத்த அந்தஸ்து.
திருக்குறள் எழுதி 2000 வருடத்துக்கு மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், இதுவரை தமிழ் நாட்டை ஆண்ட எந்த அரசனும் அதைப் புகழ்ந்தோ, கல்வெட்டில் செதுக்கியோ, சிலை வைத்தோ அதைக் கொண்டாடவில்லை.
ஏன் இலக்கியமும் இந்தத் தெய்வ புலவரை பெரிய அளவில் cross reference செய்தோ, அல்லது இதன் மதிப்பை உயர்த்தியோ வரலாற்றில் உயர்த்தி பிடித்ததில்லை.
ஆங்காங்கே சில reference இருக்கிறது.
பாண்டிய மன்னன் நெடுச்செழியன் ஆண்ட போது சில ஓலைச் சுவடிகளில் cross reference உள்ளது. திருவாசகத்தில் மறைமுகமாக ஒரு வரி இருக்கிறது . அதுக்கு அப்புறம், மதுரை தமிழ் சங்கத்தில் அவர் தன் படைப்புகளை அரங்கேற்றக் கஷ்டப்பட்டதாகவும் பின்பு ஒளவையார் துணை செய்ததாகவும் சொல்கிறார்கள்.
இதற்கு எல்லாம் எந்த solid ஆதாரமும் கிடையாது.
சொல்லப் போனால், அவர் மயிலாப்பூரில் வாழ்ந்தார், மதுரையில் வளர்ந்தார் என்று எல்லாம் சொல்கிறார்கள். But, ஆதாரப் பூர்வமாக எதற்கும் references இல்லை. ஒரு இடத்தில் கபிலர் சொல்லி இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
என் கேள்வி இதுதான்.
The most facinating, Twitter Version of உலக இலக்கியம் திருக்குறள் தான்.
இது இந்தக் காலத்துக்கு மட்டும் அல்ல.
எந்தக் காலத்திலும் இதுவாகத்தான் தமிழில் இருந்து இருக்கும் வாய்ப்பு உள்ளது.
எப்படி இவ்வளவு பெரிய மேடர் பெரிய தாக்கம் ஏற்படுத்தும் ஒரு உலக இலக்கியம், தமிழ் வரலாற்றில் சுவடுகள் இல்லாமல் மிஸ் ஆனது?
கிரேக்கத்திலும், லத்தீனிலும் புலவர்கள் பற்றிய cross referencing பக்காவாக அங்கு ஆண்ட அரசர்கள் அதை உயர்த்திப் பிடித்த தருணங்களும், சிலை கல்வெட்டுக்கள் எனச் செதுக்கியும் வைத்துவிட்டுச் சென்றார்கள்.
5000 ஆண்டுகளுக்கு முன், நடந்த எத்தனையோ மொக்கை இலக்கிய மேடர்கள் எல்லாம் காலம் கடந்து தெளிவாக வந்த நம்மை அடைந்து இருக்கின்றது. புட்டு வித்தவன், அப்பளம் செய்தவன் எல்லாம் தமிழ் வரலாற்றில் இடம் பெற்று இருக்கிறார்கள்.
எப்படி திருக்குறள் ஒரு கல்வெட்டிலும் இல்லாமல் போனது?
எந்த சமய நூலிலும் சரி, சமய போதனை வாழ்கை நெறி இலக்கிய படைப்புக்களிலும் சரி திருக்குறள் reference செய்யப்படவில்லை என்றே நினைக்கிறன்.
எனக்குத் தெரிந்து தமிழ் நாடு எப்போதுமே ஒன்றுபட்டு ஒரு பெரிய நிலப்பரப்பாகக் கிரேக்கம், லத்தீன் போல் இல்லாமல் பல சிரு குறுநில மன்னர்கள், மற்றும் அதிக பட்சம் சோழ சேர பாண்டிய என்ற மூன்று division ஆக இருந்ததால், திருக்குறள் போன்ற நூல்கள் வரலாற்றில் பெரிய இடம் பெறாமல் இருந்து இருக்கலாம்.
இல்லை, இதைவிட அவர்களுக்கு வேறு இலக்கியத்தின் மீதோ அல்லது வேறு மேடர்கள் முக்கியமாகத் தெரிந்து இருக்கலாம்.
திருக்குறளின் அருமையும், பெருமையும் அவர் வாழ்ந்த காலத்தில் சரியாக மதிப்பீடு செய்யப்படவில்லை.
வள்ளுவர் தான் வாழ்ந்த காலத்தில் பெரிதும் அறியப்படாத புலவராக ஒரு சிற்றுரில் வாழ்ந்து மடிந்த ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற பெரும் மண்டை பார்ட்டியாக இருந்து இருக்கலாம்.
வான்கோ போல் வாழும் காலத்தில் தன் சிறப்பு தெரியாத ஒருவராக திருவள்வளுவர் வாழ்ந்து இருக்கலாம்.
கடந்த 200 வருடத்தில் தமிழ் இலக்கியத்தில் நடந்த மிக முக்கிய நிகழ்வு திருக்குறளையும், திருவள்ளுவரையும் நாம் அதன் சிறப்பை உணர்ந்து பெருமை படுத்தியதுதான்.
இதைவிடச் சிறப்பான செய்தி, தமிழன் வரலாற்றிலேயே நடந்தது இல்லை.
தமிழனாக இந்த நூற்றாண்டில் நாம் தலை நிமிர்ந்து உலகுக்கு சொன்ன ஒரே செய்தி ..
திருவள்ளுவர் ஒரு தமிழன்.
Great Sago
Arumayaana alasal. Sindhithup paarkkavendiya onŕu …!
என்ன ஆழமாக சிந்திக்க வேண்டியது. ஆராய்ச்சியாளர்கள் இதைப் படித்து பதில் தர வேண்டும். அனுப்புங்கள் தமிழறிஞர்கள் படித்து சரியான பதில் கொடுக்க வேண்டும்.
Superb
ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டிய து அவசியம்
பட்டய கெளப்புறீங்க !?
நிச்சயமாக ஆராய வேண்டிய விடயம் புதிய சிந்தனை.