இந்தப் பதிவை அரசியல் பதிவாகவோ, ஆன்மீக பதிவாகவோ பார்க்காமல் just ஒரு நிகழ்வின் அடிப்படையில் படிக்கவும்.

நம்புனா நம்புங்க. இல்லைன்னா தும்புங்க.

Part 1

வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைச் சீமான் சந்தித்த நிகழ்வைப் பற்றி சீமான் அவர்கள் விளக்கும் போது..முதல் நாள் வான் கோழி பிரியாணி, அப்புறம் ஆமை கறி 28 கிலோ, அப்புறம் நண்டு, ஆறு வகை ஏரால் fry என்று பட்டியலை அடுக்கிக்கொண்டே போகிறார். அவருக்கு political wing head நடேசன் அவர்கள் இருட்டில் வண்டி ஓட்டியதாகவும், பின் பிரபாகரன் அவர்களே இவருக்கு ‘டுமீல் டுமீல்’ துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்ததாகவும் கூறுகிறார். இவரை தன் தம்பி என்று சொல்லி அழைத்தாகவும் கூறுகிறார்.

இந்த நிகழ்வு ஒரு ஆங்கில படத்துக்கு இணையான சிங்கள குண்டுகள் முழங்க, வானில் நட்சத்திரம் மின்ன நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு.

இந்தப் பயணத்தில் சீமானுடன் பயணித்த சில திரை துறையினருக்கு இந்த ஆமை கறி உண்ணும் வாய்ப்பு ஏனோ கிடைக்கவில்லை. இந்த நிகழ்வின் ஒரே ஆதாரம், சீமானும் பிரபாகரன் அவர்களும் சேர்ந்து நிற்கும் நிழற் படம்.

Back to 1989 வைகோ, தோணி ஏறி பிரபாகரன் அவர்களைச் சந்தித்தது வரலாறு.

மற்றபடி கொளத்தூர் மணி, பழ நெடுமாறன் போன்றவர்கள் பிரபாகரன் அவர்களைச் சந்தித்தும் அவர்களிடம் இந்த ஆமைக் கறி story line ஏனோ இல்லாமல் போனது.

சீமானைப் பற்றி ஒரு முறை வைக்கோவிடம் கருத்துக் கேட்டபோது “ தயவுசெய்து அதைப் பற்றி பேசவேண்டாம்” என்று ஒதுங்கிக் கொண்டார்.

மற்றபடி, அந்தச் சந்திப்பு எவ்வளவு நிமிடம், யார் யாருடன் நிகழ்ந்தது என்பது இருவருக்குமே மட்டுமே வெளிச்சம்.

ஒருவர் அதில் உயிரோடு இல்லை.

Part 2:

ஆதி சங்கரர் வாழ்ந்த காலமும் அவர் சமய பணிகளும் வரலாற்றில் பல ஆதாரங்களுடன் கொட்டிக் கிடக்கின்றது.

அவர் தன் 32 வயதில், தன் நான்கு சீடர்களுடன் பத்ரிநாத்தில் இருந்து இமய மலைக்குப் பயணம் மேற்கொண்டார்.

கேதார்னாத் அருகே வந்தவுடன், தன் சீடர்களை “நீங்கள் என்னுடன் இனி வர வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அவர் மட்டும் பயணம் தொடர்ந்து முக்தி அடைந்தார்.

அதற்கு முன் தான் சித்தாந்தத்தைப் பரப்ப, இந்தியாவில் நான்கு திசைகளிலும் மொத்தம் நான்கு மடங்களை மட்டுமே நிறுவினார்.

கர்நாடகாவில் சிறுங்கேரி, ஒடிசாவில் பூரி, குஜராத்தில் துவராகா, மற்றும் உத்தர காண்டில் பத்ரி.

சங்கரர் இறந்ததைப் பற்றிய இந்த theory ஐ இந்த நான்கு மடங்களும் ஆமோதிக்கின்றன.

இல்லை, இல்லை அவர் இமய மலையில் இறக்கவில்லை காஞ்சியில் இறந்தார் என்று சொல்லும் ஒரே மடம் நம்ம சங்கர மடம்.

ஆதி சங்கரர் இறப்பைப் பற்றி காஞ்சி சங்கர மேடம் விளக்கும் போது.. அவர் தன் வாழ்நாளின் கடைசி கால கட்டத்தை காஞ்சியில் இருந்ததாகவும், பின் இங்கேயே முக்தி அடைந்ததாகவும் கூறுகிறார்கள்.

சொல்லப் போனால் முதலில் “சங்கரச்சாரி சமாதி” என்றுதான் பெயர் வைத்து இருந்தார்கள். பின், கோவிலுக்குள் எப்படி சமாதி என்றவுடன் பின் அதுவே சன்னதி ஆனது.

அவர்கள் சொல்லும் தியரி, இந்த நான்கு மடங்களுக்கும் head office இதுதான். சங்கரர் இறக்கும் முன் தன் சீடரான பதமபரமாச்சாரியாவை தன் தம்பி என்று அழைத்து இந்த head office ஐ பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு இறந்துவிட்டார் என்கிறார்கள் சங்கர மடத்தார். இவர்கள் கிட்ட ஆதாரம் இருக்குனு ஒரு புக் சொல்கிறார்கள்.

ஆனால், அதைத் திருத்தி எழுதியவர்கள் இவர்களே என்று மற்ற நான்கு மடங்களும் சொல்கின்றன. இந்த நான்கு மடங்களும், மடாதிபதிகளும் ஒருவருக்கு ஒருவர் பேசுவதும், மடங்களுக்கு இடையே கருத்து பரிமாற்றங்களும், சமய நல்லிணக்கணங்களும் இப்போதும் நடந்து வருகின்றன.

இதில் காஞ்சி சங்கர மேடம் மட்டும் left out. ஏன்?

ஆதி சங்கரர் போதித்தது யஜூர் வேதத்தின் அடிப்படை.

காஞ்சி மடம் ரிக் வேத அடிப்படை.

காஞ்சிபுரத்தை ஒட்டி ஏகப்பட்ட ஜைன கல்வெட்டுக்கள் இன்றும் உள்ளன.

ஒன்றில் கூட இப்படி ஒரு சங்கர மேடம் இருந்ததாகக் கல்வெட்டுக்கள் கூறவில்லை.

சிருங்கேரி சாராதா பீடம் பற்றி பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே குறிப்புகள் வரலாற்றில் உள்ளது.

அவரிடம் ஒரு முறை சங்கர மடம் பற்றி கேட்டதற்கு “ நாங்கள் கருத்து கூற விரும்பவில்லை” என்று ஒதுங்கிவிட்டார்.

End

சுமார் எட்டு வருடம் முன் நடந்த ஒன்றையே நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் போது, 2500 வருடம் முன்பு சங்கரர் காஞ்சியில் வந்துதான் முக்தி அடைந்தார் என்று சொல்லும் போது வைக்கோவும், சாரதா பீடமும் அமைதி காப்பது ஒன்றே ஒன்றுக்குத்தான்.

ஆதி சங்கரரையும், பிரபாகரன் அவர்களையும் மீண்டும் தேவை இல்லாத விவாதத்தில் இழுக்கக் கூடாது என்பதால்தான்.

மற்றபடி, உலகத்தில் சித்தாந்தங்களை உருவாக்கி அதற்காக உயிர் விட்டவர்கள் யாரும் தனக்கு அடுத்து இவர்தான் என்று வாழும் காலத்தில் கைக் காட்டிவிட்டு சென்றதில்லை.

மற்றபடி, இதுவே தலைமையகம், நானே அடுத்த கொள்கை தலைவன் என்பது நாமே நமக்கு சொல்லிக் கொள்வதுதான்.

People buy into the leader before they buy into the vision.