உயர் நீதி மன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க முடியாது: மத்திய அரசு.

இத்தனை வருடமும் இது இருந்தது இல்லை.

In fact இதுவே தவறு.

Tribals வாழும் ஆப்ரிக்க நாடான சூடானில் கூட எல்லா tribal மொழிகளிலும் பேசி வாதாடலாம்.

வக்கீலுக்குத் தண்டம் கட்டாமல், நாமே நம் வழக்கை வாதாடச் சட்டம் வழி வகுக்கின்றது. அப்படி இருக்கும் போது ஆங்கிலம் தெரியாதவன் ஒரு வக்கீலை நாடியே ஆக வேண்டும். இதுதான் இன்றைய நிலை.

தமிழ் ஒரு செம்மொழி.

ஆனால் இதை வைத்து, சட்டத்தைப் பேசி உயர் நீதி மன்றத்தில் ஒரு ஆணியைக் கூட பிடுங்க முடியாது என்றால் எதற்கு இந்தச் செம்மொழி honorary பட்டம்?

Just for show க்கா?

உடனே, சில பேர்.. சட்ட புத்தகம் எல்லாம் ஆங்கிலத்தில் உள்ளது என்று சொல்லாதீர்கள்.

Medical course கூடத்தான் முழுதும் ஆங்கிலம். அதுக்காக வயிற்று வலி வந்தால் டாக்டரிடம் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று சட்டம் சொல்கிறதா என்ன?

மொழி ஒரு communication ஊடகம். சொந்த மாநிலத்திலே தன் தாய் மொழியில் பேசி வாதாட முடியாதது ஒரு அவலம்.

திருவள்ளுவர் சிலை, செம்மொழி மாநாடு போன்றவற்றால் மக்களுக்கு நேரடி பயன்கள் இல்லை.

உண்மையில், ஒரு நாட்டைச் சட்டம்தான் வழி நடத்துகிறது. வழக்குகளை, தாய் மொழியில் பேசி வாதாட முடியாது என்றால் இத்தனை வருடங்கள் என்ன செய்து கொண்டு இருந்தோம்?

மாநிலங்களை மொழி வாரியாக பிரிக்கும் போதே இதைஎல்லாம் pre conditions ஆக போட்டு இருக்க வேண்டும். இல்லை பின்பாவது போராடி இந்த உரிமைகளைப் பெற்று இருக்க வேண்டும்.

200 வருடம் முன் வந்த ஆங்கிலத்தில் பேசுவதில் தவறு இல்லை. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர் அவர் தாய் மொழியில் நீதி மன்றங்களில் பேசவும் அனுமதிக்க வேண்டும்.

ஒவ்வொரு வருடமும், டெல்லியில் சுதந்திர தின parade ல், ஒவ்வொரு மாநிலத்தாரும் ஒரு வண்டியில் ஏறி அவர் அவர் மொழியில் ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடுவதுடன் இந்தியாவின் multiculturalism இறந்துவிடுகிறது.

இந்தியாவின் the best gong show இதுதான்.