இன்று காந்தி நினைவு தினம்.

காந்தி சமாதியில் மோடிஜி.

மகிழ்ச்சி.

January 30, 1948

அப்போது, டெல்லியில் தீபாவளி மற்றும் தசரா கொண்டாட்டங்கள் முடிந்து சுமார் மூன்று மாதங்கள் ஆகி இருந்தது. நாதுராம் கோட்சே எனும் சுதந்திர போராட்ட வீரர், தன் குழந்தைக்கு வாங்கி கொடுத்த பொம்மை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு டெல்லியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, பிர்லா house ல் மறைந்து நின்று கொண்டு இருந்த காந்திஜி திடீரென்று ஓடி வந்து, அந்த பொம்மை துப்பாக்கியை தேச பிதா நாதுராமிடம் இருந்து பிடுங்கி தன்னைத்தானே மூன்று  முறை டுமீல் டுமீல் என்று சுட்டுக் கொண்டு இறந்தார். In fact, this is a sucide.

இதை சற்றும் எதிர்பாராத கோட்சே, ஹே ராம் என்று கதறிக் கொண்டே மயங்கி கீழே விழுந்தார். அப்போது, அவர் தசராவுக்கு வாங்கி வைத்து இருந்த குங்குமம், அவர் மஞ்ச பையில் இருந்து  தரையில் சிவப்பு நிறத்தில் சிதறியது.

இறந்த காந்தி அடிகளை கைது செய்து, கோர்ட்டில் நிறுத்தினார்கள்.
அவர், நான் ஏன் என்னை சுட்டுக்கொண்டு இருந்தேன் என்று நியாயமாக வாதாடினார்.

இருப்பினும், தூக்கில் போட்டு கொன்றார்கள்.
தன், பொம்மை துப்பாக்கியை பிடுங்கிய காந்திஜிக்கு தக்க தண்டனை கிடைத்தது என்று நாதுராமும் அவரை கடை வீதிக்கு அனுப்பியவர்களும் கொண்டாடினார்கள்.

உண்மையில், RSS அமைப்பினர் அன்று  இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் என்பது வரலாறு.

காந்தி இறந்த பிறகு RSS னின் இரண்டாவது பெரும் தலைவரான மாதவ் சதாஷிவ  கோல்வால்கர்க்கு அன்றைய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் எழுதிய கடிதத்திலேயே இதை குறிப்பிட்டு கடிந்து கொள்கிறார். காந்தி இறந்ததை கொண்டாட வேண்டாம். Please don’t do this என்று எழுதினார்.

RSS வழிவந்த பிஜேபியும் சரி, சங் பரிவார் அமைப்புக்களும் சரி மகாத்மா காந்தி சுந்தந்திரத்தின் போது எடுத்த பாதை சரி இல்லை என்பதே அவர்கள் நிலைப்பாடு.

இப்போது கூட  கோட்சேவுக்கு கோவில் கட்டினார்கள்.
இன்றும் கோல்வார்கர்தான் அவர்களின் ஆதர்ச ஹீரோ.

ஒரு பக்கம் RSS சித்தாந்த அரசியல். மறு பக்கம் அஹிம்சை போதித்த காந்தி போர்வை.

முக்குத்தி ராமன் எனும் நாதுராமை ரெடி செய்து அனுப்பியதே இந்த RSS என்பதே வரலாறு.

ஆனால், இதைக் இப்பொது கேட்டால் மேல் சொன்ன தீபாவளி துப்பாக்கி கதையை சொல்லி, காந்தி சமாதி முன் அமர்ந்து நீலிக் கண்ணீர் வடிப்பார்கள்.

ஒரு RSS சிந்தாந்தவாதியை தன் சமாதிக்கு முன் அமர வைத்ததே காந்தியின் வெற்றி.

காந்தி இல்லாமல், இந்த தேசம் இல்லை.

காந்தி இல்லாமல் யாராலும், யாரும் தேசத்தை ஆள முடியாது.