இன்றோடு 21 வது நாள்.
ஹ்ம்ம்… ஒரு நைட் கூட , முழுசா இரண்டு மணி நேரம் தொடர்ந்து தூங்க முடியவில்லை.
சில சமயம் பகலில் தூக்கம். பெரும்பாலும் இரவில் வேலை.
ஆபீசில் Go Live. Almost 24 X 7. Unavoidable.
எல்லாரும் உடனே, உடம்பை பார்த்துக்கோங்கனு advice தர வேண்டாம்.
எனக்கு வேண்டும் போது நானே, போன் போட்டு கேட்டு வாங்கிக் கொள்கிறேன்.
எல்லா நேரமும் மீட்டிங்.
எல்லா நேரமும் காதில் Headphone ல் ஏதாவது நாம் பேச வேண்டும், இல்லை அவர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
எவ்வளவு நேரம்தான் கேட்பது? ஒரு லெவலுக்கு மேல் காது டமார் ஆகிவிடும்.
இப்படியே மூழ்கிப் போனால், வேலைப் பளு அதிகமாகி டென்ஷன் எகிறிவிடும்.
அதனால், வேலை அதிகமானால் Lets have fun mode க்கு போய்விடுவேன்.
2005 ல் இருந்து இப்படித்தான்.
இந்த 21 நாளும் ஒரு கையில் ஆபீஸ் கீபோர்ட், இன்னொரு பக்கம் என் Blog App in my mobile.
எப்ப எல்லாம் நான் அதிகமா FB யில் இருக்கிறேனோ அப்ப எல்லாம் நான் ஏதாவது ஒரு வேலையில் இருக்கிறேன் என்று அர்த்தம்.
நான் எப்பவும் என் free time ஐ FB யில் waste செய்யமாட்டேன்.
Free டைமில், நல்லா தூங்குவேன். இல்லை கிட்டுவுடன் வாக்கிங்.
I mean dedicated FB time என்று ஒன்று இல்லை.
ஒரு காலத்தில் இது இருந்தது.
இப்போது அதை குறைந்துக் கொண்டேன்.
It’s been 99% of the time, I try to do multitasks when I am busy.
The best thing I have learned in the past seven years using FB is I can type two different subjects on two screens
With few seconds lag, I can able to do it at the same time.
I use a custom-made app especially for this purpose which can take drafts and revise and stream it in a schedule in FB.
Many of my comments are pushed from my app. Pre-typed on assumptions. Then I will come back to edit.
பெரும்பாலும் என் எல்லா வலைப் பதிவுகளையும் என் இடது கையில் மட்டுமே அடிக்க பழகிக் கொண்டேன்.
வலது கை பூவா போடும் ஆபீஸ் வேலைக்கு. இடது கை FB க்கு நேர்ந்து விட்டாச்சு.
இப்போது இருக்கும் வேலையில் இதனுடன் கேட்டு அதற்குப் பதில் அளிக்கும் மூன்றாவது task சேர்ந்து உள்ளது.
முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இதுவரை பிரச்சனை வந்தது இல்லை.
The only time I messed up was when I sent an FB post to my manager as project update.
Leave A Comment