சீத்தாபதி:

Settled life என்றால் என்ன குருவே?

குருஜி:

வயசான காலத்தில் எந்த கவலையும் இல்லாம, யாரையும் நம்பி வாழாம, நம்ம பசங்களை நல்லபடியா படிக்கவச்சு, அதுங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சு, நம்ம சொந்த காசில் நிம்மதியா 6 மாசம் சம்மரை கனடாவிலும், 6 மாச வின்டரை இந்தியாவிலும் கோயில் குளம் என்று சுற்றி வரலாம் என்று நினைப்பதே தி so called Canadian settled life.

ஆனா இதை செய்ய இரவில் கயோட்டியா ஓடியும், பகலில் நாயா திரிந்தும், கட்டு எறும்பு மாதிரி பிளான் செஞ்சு, தேனியா உழைச்சு, குருவி மாதிரி சேர்த்து வாங்கின கடனை அடிச்சி மிச்சம் மீதியை RRSP, RESP, ASP, Dot Net என்று வகை தொகை இல்லாமல் சேர்த்து, மீதியை mutual fund முட்டுசந்து fund, முட்டி உடஞ்சா fund என்று எல்லாவற்றிலும் போட்டுவிட்டு, நாம செத்தா நமக்கே காசு என்ற இன்சூரன்ஸ் பிளானில் வெந்து, ICBC க்கு சொந்தமான நம்ம காரில் சென்று நம்ம கல்லறைக்கும் நாமே இடத்தை புக் செஞ்சிட்டு சோர்ந்து போய் வீட்டுக்கு வந்து படுத்தாதான் தெரியுது நமக்கு காலில் ரெண்டு மரை, முட்டியில் ரெண்டு போல்டு, இடுப்பில் ஒரு washer ரிங், கழுத்தில் ஒரு screw, கண்ணில் இரண்டு பல்பு காலி என்று. ஏகப்பட்ட இடத்தில் ஆயில் லீக் வேற…

உடம்பில் உள்ள எல்லா பார்ட்ஸ்களின் வாரண்டி expiry ஆனது அப்போது தான் நமக்கு தெரியும். முழுச்சு பார்த்தா 40 பிளஸ்.

நைட் படுத்தா உடம்பு வலியில்லாமல், மனசும் கஷ்டபடாம டக்குனு ஆடாம அசையாமா 8 மணி நேரம் தூங்கினா அதுக்கு பேர் தான் settled life. இந்த மாதிரி தூக்கம் 30 வயசில் வந்தாலும், 80 வயசில் வந்தாலும் அதுதான் settled life .

இது இல்லாமல் நம்மகிட்ட என்ன இருந்தாலும் சரி, எது சேர்த்தாலும் சரி, எவ்வளவு தான் சம்பாரித்தாலும் சரி… ஏன் மண்ணுக்கு அடியில் பெர்மனேன்ட்டா செட்டில் ஆனாலும் சரி….. அதுக்கு பேர் settled life இல்லை.

நல்ல தூக்கம்தான்

Settled Life ன் முதல் குறியீடு.