தன் மகன் கலை உலகத்தில் நடிக்கும் அதே கால கட்டத்தில், இன்னொரு நடிகரை தன் கலை உலக வாரிசாக அறிவித்தார் சிவாஜி.
இவர் ஒரு உண்மையான கலைஞன்.
A good parent…too..
Just for discussion ……
இப்ப நம்ம பசங்களே சில சமயம் Stage ஏறும் போது, மத்த பசங்களை விட சுமாராக செய்ய வாய்ப்பு இருக்கு.
அதுக்காக மற்ற குழந்தைகளை பாராட்டாமல் இருப்பதும், எப்பவுமே தன் குழந்தைதான் உசத்தி என்றும் நினைக்கும் பெற்றோர்களையும் அவர்கள் Stage க்கு கீழே அடிக்கும் கூத்துக்களையும் என் பள்ளி பருவத்திலேயே இருந்தே பார்த்ததுண்டு.
நம்ம பசங்களுக்கு, நாம் தான் ஊக்கம் கொடுக்கனும் என்பது ஒரு வகையில் சரி எனினும், இல்லாத ஒரு திறமையை இருக்குனு குழந்தையை நம்ப வைப்பது ஒரு வகையில் தவறு.
இன்னொருவரை நம் பசங்க முன்னாடியே பாராட்டுவதும், இன்னும் நீ கற்றுக் கொள்ளவேண்டியது இருக்கிறது என்று சொல்லுவதும் தப்பில்லை.
அது ஒரு வகையில் குழந்தைகளுக்கு உலக ரியலிசத்தை புரிய வைக்கும். அது குழந்தைகளின் தன் திறன் மேம்பாட்டுக்கு உதவும்.
அதை விட்டு விட்டு, எப்ப பார்த்தாலும் என் பையன் / பொண்ணுதான் சூப்பர், டூப்பர்னு நம்மளே இல்லாததை வீட்டுக்குள்ள positive energy, positive energy னு ஒரு பொய் தோற்றத்தை ஏத்திவிட்டு .. கடைசியில் ஒப்பன் மார்க்கெட்டில் அந்தக் குழந்தைகள் வித்தைக் காட்டும் போது குழந்தைகள் மிகப்பெரிய சவாலை சந்திக்கும்.
போட்டிகளில் எப்போதுமே நம் குழந்தை வெற்றி பெற வேண்டும் என்று பல முறை பெற்றோர்கள் டகால்ட்டி அடித்து வின் செய்ய முயற்சிப்பார்கள்.
நீங்கள் வாழ் நாள் முழுவதும் இதைச் செய்ய முடியாது. In fact, குழந்தைகளுக்குத் தோல்விகளையும், வெற்றி போல சம பங்காய் நாமே சில சமயம் simulate செய்து, அதில் இருந்து வெளி வருவது எப்படி என்று கூட இருந்து வழி காட்டலாம்.
தோல்வி பயம், தற்கொலை, Inferiority complex போன்றவற்றை வெற்றி கொண்டு சொல்லிக் கொடுக்க முடியாது.
தோல்விகள்தான், நிலவில் மனிதனின் காலடிகளை பதித்தது. நாம் பார்க்கும் பார்வை மட்டுமே அவை வெற்றி. உண்மையில் ஒவ்வொரு வெற்றியும் தோல்விகளின் முகமே.
மாயை வெற்றியை ஊட்டி வளர்த்த குழந்தை தோற்கும் போது, அவர்களை உங்களாலேயே தேற்ற முடியாது. தேம்பி தேம்பி அழும்.
இதுவே குறியீடு.
காரணம் அதுவரை நீங்க ஏத்திவிட்டது பொய்னு அப்போது குழந்தை நம்பாது.
இது போட்டிகள் நிறைந்த உலகம்.
சின்ன குழந்தைகளுக்கு நிறைய ஊக்கம் தேவை.
ஆனால், வளர வளர .. கொஞ்சம் கொஞ்சமா உண்மையையும் ..அந்தக் குழந்தைகளின் hidden talents களையும் நாம் தோண்டி எடுப்பதே good parenting.
அதை விட்டுவிட்டு காக்கா குரலுக்கு குயில் தொண்டை இருக்கு என்று நம்ப வைக்கிறதும், வராத dance, முடியாத கலைகளை படி, படி நீ செம talented என்று ஏத்தி வைத்து அழுத்துவதும் ஒரு வகையில் பாயசத்தில், பர்கர் செய்வது போன்ற ஒரு செயல்.
Sivaji தன் profession நேர்மையாக இருந்தார்.
தன் மகன் பிரபுவுக்கும் நேர்மையாக இருந்தார்.
தன் மகனுக்கு வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.
மற்றவர்களை தன் மகன் முன் பாராட்டினார்.
கமல், பிரபு இருவரும் சினிமா உலகில் கெட்டு போக இல்லை. இருவரும் தகுதி திறமைக்கு ஏற்ப வளர்ந்தார்கள்.
நம்மை அடையாளப்படுத்திக் கொள்வது எளிது.
இன்னொருவரை அடையாளப் படுத்துவதில்தான் நம் வெற்றி இருக்கிறது.
இந்த உலகில் வெற்றிகளை விட, உண்மையான தோல்விகளும், உண்மையான திறமைகளுக்குமே நிலைத்து நிற்பவை.
இதுல கொடுமை என்னனா, சில parents களுக்கு அவங்களே சிவாஜினு நினைப்பு.
அதுக்கு காரணம் அவங்க parents. காரணம் அவங்களும் சிவாஜினு அவங்க parents சொல்லி வளர்ந்த அப்பா அம்மாவா இருப்பார்கள்.
இந்த உலகில் உண்மையை சொல்லி திறமையை வளர்த்தவர்கள் மட்டுமே பிற்காலத்தில் மிளிர முடியும்.
மற்றவர்கள் எல்லோரையும், மெதுவாக இந்த போட்டி உலகம் உள்வாங்கி காற்றில் கரைத்துவிடும்.
Be a கிரிட்டிக்.
Tell தி truth ..அட் some பாயிண்ட்.
You decide when.
In complete agreement with you here. Last three lines kae ungaluku special claps.. ????
Sema !!
Clear Thoughts Sridar Elumalai
இது போன்ற பதிவுகள் இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியமாகிறது… சொல்ல வேண்டிய அனைத்தையும் ஓசையின்றி ஆணியடித்தாற்போல் சொல்லிவிட்டீர்கள்..மனமார்ந்த பாராட்டுக்கள்
எடுத்துக்காட்டு sema
காக்கைக்குத் தன் குஞ்சும் பொன்குஞ்சே – ஆனால் அதைக் குயில்கள் மத்தியில் கூறக்கூடாது!
காக்கைக்கு தன் குஞ்சுகள் மட்டுமல்ல குயிலின் குஞ்சுகளை பேனிகாத்தருளும் காகம். குயிலின் செவிலித்தாய்.
அப்ப்ப்ப்பா என்ன ஒரு உளவியல் ரீதியான மிக நேர்மையான கருத்து. விமர்சனங்கள் மீது பற்றற்ற தன்மை இருந்தால் மட்டுமே இது போன்று சமூகத்திற்கு நன்மை பயக்கும் கருத்துக்களை பதிவிடமுடியும். சொல்லவேண்டிய கருத்துகளை எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாமல் பதிவிட்ட உங்கள் நேர்மைக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
Well said! Totally agree!
Super ji
Super!
கலக்கிட்ட ஸ்ரீதர்!!
Totally true .. We should know to encourage them to perform better in any skill at every stage may be even in studies but not to cloud them with false ideas that they do the best ..Even in Airtel super singer or in Sun singer when the kids fail they cant take it anymore just because of the fear for the parents and to meet consequences. they must know their own values and perform in their levels …
the kids are scapegoats…
very well thought and the best example of a celebrity speaks all ..its a learning lesson for parents and kids in their life cycle ..extremely well analysed Sridar …i used to feel really sorry for the kids when they cant enjoy and do any act on their own ..
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தம்பி
Lovely said #Guruji !!
Well said.
Well said Sridar…I agreed…I saw so many parents like this mentality in my life.
Up to me, parenting is the toughest job. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு subject and வெவ்வேறு rules. நாம கத்துகிட்டு தெளியதற்குள் அவர்கள் Parent ஆகி விடுகிறார்கள்.
உண்மை. உங்கள் பதிவுகளில் முதல் இடம் பெற்றது. என்னைப் பொருத்தவரையில். பர்கர் பாயாசம் உங்கள் டிரேடு மார்க்.