சங்கர மடமும் மரபும்:

சங்கராச்சாரியார் எழுந்து நிக்கனும் என்பது மரபு இல்லைனு நேற்று BBC க்கு பெயர் சொல்லமுடியாத ஒரு மடத்தின் நிர்வாகி பதில் சொல்லி இருக்கிறார். ஒரு மடத்தின் மரபைக் கூட பெயரோடு ஒப்பனாக சொல்ல முடியாத நிலைமை. ஓக்கே அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஆனால் இந்த மடத்தில் என்ன, என்ன முக்கிய மரபு இருந்தது, இதற்கு முன்னாடி அதை இவர்களே எப்படி மீறி இருக்காங்கனு பார்ப்போம். இந்த மடத்தின் தீவிர follower என்பதால்.. எழுதுகிறேன்.

அதுக்கு முன்னாடி கொஞ்சம் ஹிஸ்டரி.

போதாயானார்னு ஒரு துறவி 8 ஆம் நூற்றாண்டில் இருந்தார். அவர் ஒரு கணித மேதையும் கூட. இவர் எழுதி வச்சுட்டு போன ஐட்டம் பல. அதில் இது ஒண்ணு… ஒரு செங்கோண முக்கோணத்தில் செவ்வகத்தை வர்க்கமூலம் இல்லாமல் கண்டறியும் முறை. எங்கயோ படித்த மாதிரி இருக்கா? இதுதான் பிதாகரஸ் தியரி. இதைப் பற்றி அவர் அப்பவே எழுத்திட்டார்.

இவர் கணிதத்தை மட்டும் எழுதல. சமஸ்கிருதத்தில் பல ஹிந்து தர்மங்களையும் எழுதி இருக்கிறார். அதில் போதாயானா சூத்திரமும் ஒன்று. இது ஹிந்து தர்ம சாஸ்திரத்தைச் சொல்கிறது.

இதன் படி ஒருவர் கடலை கடந்து பயணம் செய்தால் அவருடைய ஜாதியை இழந்து விடுவார். நடந்து போகலாம். ஆனா கடலை தாண்டக் கூடாது என்பதுதான் வேத சாஸ்திரம் சொல்கிறது. சரி அப்படியே கடலை கடந்து சென்றால் அந்தத் தீட்டை கழிக்க அவரே ஒரு தீர்வையும் சொல்லி இருக்கிறார்.

http://www.hinduwebsite.com/sacredscri…/…/dharma/baudh2.asp… – (II.1.2.2)

அது என்னனா, தினமும் உணவு அருந்தும் நான்காவது முறை குறைவாக உண்ண வேண்டும். தினமும் மூன்று முறை குளிக்க வேண்டும். தினமும் பகலை நின்று கொண்டும், இரவில் அமர்ந்து கொண்டும் இருக்க வேண்டும். ஓக்கே இந்த punishment ஒரு நாள் என்றால் ஓக்கே. இதைத் தொடர்ந்து மூன்று வருடம் செய்தால்தான் தீட்டு கழியும்.

சரி, இதற்கும் சங்கர மடத்துக்கு என்ன சம்பந்தம் என்கிறீர்களா??

இந்த இந்து தர்மத்தை இன்றும் சங்கர மடம் மரபாக வைத்து இருக்கிறது. அதனால்தான் எந்த சங்கராச்சியார்களும் நித்தி, ஜக்கி போல foreign trips அடிப்பதில்லை.

மரபை மீறி, யார் மூன்று வருடம் நின்று கொண்டே இருப்பது??

ஆனால், மரபை மீறி ஜெயேந்திரர் 2000 வருடம் சீனாவுக்கு கடலை கடந்து போகத் திட்டம் போட்டார். இந்தியாவில் இருந்து சீனாவுக்கு கடலைக் கடந்து பறப்பதாகத் திட்டம். ஆனால், இதற்கு முன்னரே ஜெயேந்திரர் நேப்பால், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்குத் தரை வழியே சென்றார். கடலைத் தாண்ட போகிறார் என்று தெரிந்ததும் இது சங்கர மடத்தின் மரபுக்கு எதிரானது என்ற குரல் எழுந்தது.

முதலில் அதை ஜெயேந்திரர் கண்டு கொள்ளவில்லை.
மரபாவது அதை maintain செய்வதாவது ?
அப்ப அவர் பாலிடிக்கிஸ்ல பிசி.

அப்போது முதலில் லோக்கல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு அவர் மீது பாய்ந்தது.

அதில் சங்கர மட மரபுக்கு மீறி ஜெயேந்திரர் கடலை தாண்டப் போகிறார். வேண்டும் என்றால் அவர் சீனாவுக்கு இமயமலை மீது ஏறி இறங்கி நடந்தே போகலாம். ஆனா கடலை கடக்கக் கூடாது என்பதுதான் வழக்கு. பின்பு அந்த வழக்கு சென்னை செஷன் நீதி மன்றத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

நீதிபதி, அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் முன் ஜெயேந்திரர் தன் china ட்ரிப்பை கான்செல் செய்தார்.

அந்த வழக்கைப் போட்டு இந்த மடத்தின் மரபைக் காக்க நினைத்தவர் வேறு யாரும் இல்லை.

அவர் பெயர் சங்கரராமன்.
அவர் அப்பா பெயர் அனந்தகிருஷ்ண ஷர்மா.

லேட். சரஸ்வதி சுவாமிகள் காஞ்சியில் இருந்து காசிக்கு நடந்தே சென்ற புனித யாத்திரையில் கூட நடந்து சென்ற நால்வரில் சங்கர்ராமனின் தந்தையும் ஒருவர்.

சங்கராச்சியார் எழுந்து நிற்பது மரபு அல்ல, அவர் செய்தது சரியே என்று வாதாடும் சங்கர மடத்துப் பக்தர்களுக்கு என் கேள்விகள் சில.

1. மடத்தின் மரபை மீறி கடலை கடக்க ஜெயேந்திரர் முயலும் போது நீங்கள் ஏன் அது தவறு. மடத்தின் மரபை மீறக்கூடாதுனு குரல் கொடுக்க வில்லை? கொடுத்த ஒரே ஆளும் காலி.

2. சங்கர மடத்தின் மரபையும், மடத்தின் எல்லா ஹிந்து தர்மாவையும் மதித்து நடப்பவர் என்றால் கனடாவுக்கோ, அமெரிக்காவுக்கோ வரும் போது கடலில் எப்படி நடந்து வந்தீர்கள் ?

ஒரு சமயத்தில், மதத்தில் சாஸ்த்திரத்தில் அந்த காலத்தில் ஆயிரம் சொல்லி இருப்பார்கள். எழுந்து நிற்பது, குனிவது, கும்மி அடிப்பது, தீட்டு, இத்தனை தடவை ரிபீட்டுனு என்று ஆயிரம் இருக்கும். அதை எல்லாம் தாண்டி நாம் எல்லோரும் வந்துட்டோம்.

காலப்போக்கில் அதை அனைத்தையும் இந்த லோகத்தில் follow செய்ய முடியாது.

அமர்ந்தே இருப்பது, நிமிர்ந்தே நடப்பது, தூங்கிக் கொண்டே இருப்பது போன்ற பழைய கிரீஸ் டப்பாவையே இன்னமும் உதைத்துக்கொண்டு இருக்க வேண்டாம்.

ஒண்ணு கம்ப்ளீட்ட்டா ஒரு ரூலையோ மரபையே follow செய்யவேண்டும். இல்லை இந்தக் காலத்துக்கு ஏற்ப மாற்றனும். மாறனும்.

இது மனுஷனுக்கு மட்டும் அல்ல.
மடத்துக்குப் பொருந்தும்.