ஒரு சன்யாசி தன் சீடர்களோட காட்டில் போயிட்டு இருந்தார்.

போகும் போது அவர், நாம் எல்லோரும் சன்யாசி. நம் மனம் பெண்களை பார்த்து எப்பவுமே சஞ்சல படக்கூடாதுனு போதிச்சுக்கிடே போனார்.

நடுவுல ஆறு வந்தது.

அதில் ஒரு அழகான பொண்ணு பாதி உடையுடன் குளிச்சிட்டு இருந்துச்சு.

குருவும் சீடர்களும் அந்த ஆற்றை கடக்க முயலும் போது குளிச்சிட்டு இருந்த பொண்ணு நானும் அந்த பக்கம் போகனும் சாரே.. ஆனா என்னால் ஆற்றை தனியா கடக்க முடியாது. பய்மாகீதுனு சொல்லுச்சு.

உடனே குரு அந்த பொண்ணை .. நீ என் தோல் மேல ஏறி உட்கார். நானே உண்ணை தோளில் வைத்து அழைத்து செல்கிறேன்னு சொல்லி அந்த பொண்ணை தன் தோளில் ஏத்தி அடுத்த கரைக்கு கூட்டிட்டு போய் இறக்கி விடுகிறேன் என்றார்.

இதைப் கேட்ட சீடர்கள் நம்ம குருவே ஒரு குஜால் பார்ட்டிதான்னு முடிவுக்கு வந்துட்டாங்க. இவர் பேசறது ஒண்ணு. ஆனா செய்றது ஒண்ணுனு நினைச்சுக்கிட்டாங்க.

குரு ஜாலியா அந்த பொண்ணை ஏத்திகிட்டு ஆற்றை மெதுவா Enjoy செய்து கொண்டே கடந்தார். கரை வந்ததும் இறக்கிவிட்டார். அந்த பொண்ணு அவருக்கு ஒரு உம்மா Thanks சொல்லிட்டு போயிடுச்சு.

அதுக்கு அப்புறம் குருவும் சீடரும் காட்டில் போகும் போது சில மணி நேரம் கழித்து அதில் ஒரு சீடர் தயங்கி தயங்கி… censor censor ..ஏன் குருவே இப்படி செய்தீங்க. பொண்ணுங்களை பார்த்து சஞ்சலப்படக்கூடாது நீங்களே சொல்லிட்டு நீங்களே தோளில் வைத்து தூக்கலாமா என்றார். அதுக்கு அந்த பொண்ணு வேற உம்மா கொடுத்துட்டு போகுது .. நியாயமா என்றார். எல்லாரும் ஆமாம் ஆமாம் என்றார்கள்.

அதுக்கு குரு…நான் அந்த பொண்ணை தோளில் இருந்து அந்த கரையில் இறக்கி விட்டவுடனே மறந்துட்டேன். என் மனதில் இருந்து அந்த பொண்ணு அப்பவே போயிடிச்சு.

ஆனா எல்லா சீடர்களும் இன்னமும் அந்த பொண்ணை பற்றியே நினைச்சுட்டு இருக்கீங்க.

இதுக்கு பேர்தான் சஞ்சலம்.

நானும் உங்களை போல ஒரு மனுஷன்தான். யோக்கியன் கிடையாது. இருந்தாலும் எதை எத்தோட இணைக்கனும், எதை எத்தோட இறக்கி வைக்கனும் எனக்கு தெரிந்ததால்தான் நான் இன்னும் மடத்தை ஓட்டிக்கிட்டு இருக்கேன்,

பேசாம வாங்கடோய் என்றார்.!!