அறம்:

ஆஹா ஹோ ஹோ என்று ஏகப்பட்ட பில்ட் அப்புக்கு பின் இப்போதுதான் அறம் பார்த்தேன்.

என்ன சொல்லவேண்டும் என்ற கருத்தை ஆல்ரெடி முடிவு செய்துவிட்டு கதை மூலம் சொல்லாமல், கதா பாத்திரமே வசனம் பேசி சொல்லும் மெலோ டிராமா டாக்குமெண்டரி செண்டிமெண்ட் மிக்ஸ் படம். சில ரியல் லைப் நிகழ்வுகள் அதை ஒட்டி நடந்த நிஜங்கள்தான் படத்தின் களம்.

என்னதான் அமெரிக்காவில் நாசா இருந்தாலும் ஒரு சாதாரண இரும்பலுக்கு இந்தியாவில் டாக்டரை போய் பார்ப்பது போல் பார்த்து ஊசி போட்டுக் கொண்டு 30 நிமிடத்தில் திரும்ப முடியாது.

இது ஒரு வகை Gap.

தண்ணீர் பிரச்சனைக்கும், ஆழ் குழாய் கிணற்றில் சிக்கிய குழந்தை எடுக்கும் இயந்திரம் எளிதில் கிடைப்பதற்கும், அறிவியல் முன்னேற்றத்தில் ராக்கெட் விடுவதற்கும் என்று ஒரே நேர் கோட்டில் சம்பந்தம் இல்லை. இப்படி ஒரே கதையில் வைத்து கம்மூனிச பொது தத்துவம் பேணுவதில் எனக்கு உடன்பாடில்லை.

இவ்வளவு பிரச்சனைகளையும் கோபங்களையும் வைத்து இருக்கும் மக்கள் ஒரு கோமுட்டி மண்டயனையே MLA வாகவும், கவுன்சிலராகவும் தேர்ந்து எடுத்ததில் இருந்தே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

பிரச்சனை அரசாங்கத்திடமும், அரசியல்வாதிகள் மத்தியிலும், அறிவியலாளர்கள் மத்தியிலும் இருப்பதாக ஒரு சோக கதை மூலம் divert செய்யும் director … resign செய்துவிட்டு part 2 வில் நயந்தாரா நேர்மையாக போய் தேர்தலில் நின்றால் குக்கர் சின்னத்தில் ஒரு டிடிவி 20 ரூபாய் டோக்கன் கொடுத்தது போல் மீண்டும் அதே MLA வை வெற்றி பெற வைக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

இன்று அரசாங்கமே நேர்மையான படித்த அதிகாரிகளும், விஞ்ஞானிகளும், மோசடி செய்யும் அரசியல்வாதிகளையும் மீறி ஏதாவது ஒரு வகையில் diplomatic க்காக முட்டி மோதி செயல்படுவதால்தான் தப்பித்து இந்த நாடே பிழைப்பை ஓட்டிக்கொண்டு இருக்கிறது.

எல்லா தவறுகளையும் வேறு ஒரு பக்கம் திருப்பி விட்டதால் படத்தில் ஏழைகள் மட்டும் ஏமாளிகள் என்று பாடம் எடுக்கிறார் இயக்குனர்.

இன்று கிராமத்தில் இருக்கும் அதே அளவு பிரச்சனை சென்னையில் வாழும் நடுத்தர மக்களுக்கும் வேறு ஒரு வகையில் இருக்கிறது. இரண்டிலுமே உயிர் போகும். ஆட்டோவில் தொங்கும் குழந்தை உட்பட.

களமும் கதையும் மாற்றினாலும் குற்றம் யார் மீது என்று ஒரு பக்கம் மட்டும் கை காட்டக் கூடாது.

In larger sense, தண்ணீர் பிரச்சனை முதல் குழந்தை விழுந்த வரை அந்த ஊர் மக்களுக்கும் அதில் ஒரு பங்கு இருக்கிறது.

Democratic நீதியின் சாவி மக்களிடம் இருக்கிறது. நயந்தாராவின் அறம் வெறும் பூட்டுத்தான்.

She doesn’t know which key will work.

Even if there is a second part.

________________________________

www.sridar.com