ஹவாய் தீவு. கிளம்பவே மனம் இல்லை. சுமார் இரண்டு வாரங்கள் பல தீவுகளைச் சுற்றி திரிந்துவிட்டு வான்கூவர் கிளம்பும் flight ல் அமர்ந்து இருந்தேன். முதல் வரிசையிலேயே இடம் கிடைத்தது. எனக்கு சென்டர் சீட். window seat ல் என் மகன். இடப்பக்கம் மனைவி அமர்ந்து இருந்தார். Boeing 747 ல் மீதி 363 பேரும் ஒவ்வொருத்தராக மெதுவாக ஏற எனக்குப் பயங்கர அயர்ச்சி. என்னை அறியாமல் தூங்க ஆரம்பித்துவிட்டேன். என்ன நினைத்தேன் என்று தெரியாது..சட் என்று முழித்து ” Where is my mobile?” என்று தேட ஆரம்பித்தேன். Within seconds மண்டையில் security செக் போது எடுத்து டப்பாவில் வைத்தது மட்டும் நினைவில் இருக்கிறது. அதற்குப் பின் அங்கு இருந்து எடுக்கவில்லை. ஓ மை காட் ! கைகள், என்னை அறியாமல் எல்லா பாக்கெட்களையும் தேடியது. என் மனைவி, என்னிடம் …நல்லா தேடி பாருங்கள் ..எல்லா ஏதாவது பாக்கெட்டில் இருக்கும், மெதுவா தேடுங்கள் என்றார். கைகள் பாக்கெட்டுகளை தடவ,என் மனம் செக்யூரிட்டி செக்கிங் ஏரியாவில் என் மொபைலை தேடி அலைந்தது. சட் என்று, எழுந்து நின்றேன்.

Arise, awake, and stop not till the goal is reached.

Flight கிளம்ப பெல்ட் போட்டு எல்லோரும் ரெடி. அந்த அழகான flight அட்டெண்டென்ட் யிடம் …என் மொபைல் மிஸ்ஸிங். செக்யூரிட்டி செக் இடத்தில் மிஸ் ஆகிவிட்டது. போய் எடுத்து வருகிறேன் என்றேன். மொத்த Flight அமைதியானது. சாரி, இப்போது கதவு மூடப் போகிறோம், முடியாது என்றார். அதற்கு நான் நோ, I want my மொபைல். வெயிட் நான் போய் தேடி எடுத்துவிட்டு வந்துவிடுகிறேன் என்றேன். Flight ல் இருந்த 366 பெரும் இப்போது என்னைப் பார்த்தார்கள். என் மனைவி, சரி போனா போகுது விடுங்க என்றார். நான் நோ, என்று சொல்லிக்கொண்டே.. மூடப் போன கதவைத் திறந்துவிட்டு செக்யூரிட்டி செக் பகுதிக்கு தேடச் சென்றேன். பைலட், மைக்கில் …சாரி for the delay என்று சொல்லி இருக்கிறார். சுமார், 15 நிமிடம் தேடி கடைசியில் என் மொபைல் செக்யூரிட்டி ஏரியாவில் தேடும் போது கிடைத்துவிட்டது. எடுத்துக் கொண்டு மீண்டும் ஓடி வந்தேன். 365 பேரும் என் பதிலுக்கு காத்து இருந்தார்கள். அந்த அழகான ஏர் ஹோஸ்டஸ், you got it …?? என்றார். நான், yes ..but அது என் பின் பாக்கட்டில்தான் இருந்து இருக்கிறது. அதை வாலட் என்று நினைத்துவிட்டேன். சாரி என்று சிம்பிளாக சொல்லிவிட்டு அமரச் சென்றேன்.

என், மனைவி எனக்கு இடம் கொடுப்பது போல் எழுந்து நின்று என் நடு மண்டையில் “நங்க்க்க்க்” என்று ஒரு கொட்டு கொட்டினார். லூசு. உன் Absent mind க்கு ஒரு அளவே இல்லையா. என்கிட்ட இந்த flight ல ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது. ” மூ..டி : உட்கார்ர்ர் என்றார். அந்த மாதிரி ஒரு கொட்டு என் வாழ் நாளில் வாங்கியதே இல்லை. அந்த அற்புத காட்சியை 365 பேர் பார்த்தார்கள். Flight take off ஆனவுடன், முதலில் எழுந்து பின் புறம் இருக்கும் கேபிடேரியாவுக்கு நடந்து சென்றேன். யார் என்னைப் பார்த்தாலும் என் தலையை தடவிக் கொண்டே சிரித்தேன். மெதுவாக சிலர் பின்னால் வந்து actually என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். அப்படியே பேசி பேசி மெதுவாக அந்த ஏர் ஹோஸ்டஸ்கிட்ட கடலைப் போட ஆரம்பித்தேன். என்னிடம் இதைப் போன்ற சுமார் பத்து flight நின்ற கதைகள் சொன்னார். அதில் கொட்டு வாங்கிய நான் டாப் 10 ல் முதல் என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் பேசி இருப்பேன் .What a நைஸ் டே ! Loved it. Flight ல பேசவா ஆள் இல்லை.

நீதி:

மறப்பது மனித இயல்பு.
மன்னிக்காமல் விடுவதும் மனித இயல்பு.
Accept and Acknowlege your mistakes.
உங்கள் வாழ்க்கையின் தி பெஸ்ட் Oppurtunity
தோல்விகள் மற்றும் அவமானங்களில் இருந்து மட்டும் கிடைக்கும்.

# Vtwdiscussionforum_tamil2.0_a2#