How I failed my first Written Test?

இந்தியாவில் கார் ஓட்டிய தெனாவட்டு மற்றும் திமிரில் கனடா வந்தேன். Driving Test எடுக்க ICBC ஆபீசிக்கு போய் புக் வாங்கி வந்து படி என்றார்கள்.

என்னத்த பெரிசா இருக்கப் போவுது??

ரூல், இந்தியாவின் நாலு அடி ரோடுக்கும், கனடா 40 அடி ரோடுக்கும் ஒண்ணுதான் இருக்க போவுது. ரெண்டும் பிரிட்டீஷ் போட்டது தானே .. என்ன அங்க left இங்க right. போங்கடா வெண்ணைனு தெனாவட்டா புக் வாங்க போனேன்.

அப்ப அங்க Test சில பேர் எடுத்துட்டு இருந்தாங்க. Kiosk test machine எல்லாம் ஒண்ணுக்கு ஓண்ணு பக்கத்திலே இருந்துச்சு.

மடப் பசங்க.

இவ்வளவு பக்கத்திலா வச்சு இருப்பானுங்க?

நான் காலேஜில் ஒரு Exam கூட பிட் அடிக்காம எழுதி பாசானது இல்ல. இந்தியாவில் அரிவாளியையும் மக்கு பசங்களையும் exam வச்சு கண்டுபிடிக்க முடியாது.

தெரிஞ்சா pass.

தெரியலைனாலும் pass.

வேணும்னா பக்கதில் கண்ணை மட்டும் உருட்டி பார்த்தா போவுது. காப்பி அடிக்கிறது எல்லாம் தமிழனுக்கு தொல்-காப்பிய காலத்தில் இருந்தே தெரியும். வாங்கடா வானு நினைச்சேன்.

மொத்தம் 50 multiple choice. எப்படியும் லாஜிக்கா 50% எழுதிடலாம்.

மீதி தெரியலைன்னா பக்கத்தில் கண்ணை உருட்டி 10 நிமிஷம் வெயிட் செய்தால் random என்றாலும் பார்த்து காப்பி அடிச்சு பாசாகிடலாம்னு புக் வாங்க போன நான் யோசிச்சேன்.

உடனே அடுத்த Spot ல் அங்கேயே book செய்தேன். இருந்த அரை மணி நேரத்தில் வெளிய காபி கடைக்கு போய் காப்பி குடிச்சுகிட்டே காப்ப் அடிச்சு Pass ஆக திட்டம் தீட்டினேன்.

Exam spot ல் என் Test machine க்கு ரெண்டு பக்கமும் இரண்டு ஆளுங்க. செம. இன்னைக்கு நான் Pass னு முடிவே செஞ்சிட்டேன்.

Exam ஆரம்பித்ததும்.. முதல் கேள்வி ரோட்டில் மான் வேகமா வந்தால் என்ன செய்வாய்னு இருந்துச்சு.

கழுதை.. இந்த மாதிரி கேள்வி எல்லாம் இந்தியாவில் வராதே.. என்ன செய்வதுனு கண்ணை உருட்டி பக்கத்தில் இருந்த ஆளோட மெஷினை பார்த்தேன்.

அவர் screen ல் பஞ்சாபியில் கேள்வி இருந்துச்சு. அந்த ஆள் என்னை பார்த்தான். இரண்டு பேருமே திரு திருனு திரும்பி பார்த்தா பின்னாடி ஒரு சப்பை Chinese lady ஆல்ரெடி எங்க screen ஐ உத்து பார்த்துட்டு இருந்துச்சு.

அதன் machine ல் மாண்டரின் ஆரஞ்சு.15 நிமிஷத்தில் மூணு பேருமே knockout.

வெளிய வந்த போது மனைவி கேட்டாங்க. ஏன் இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்கனு?

Passed?

நான், கூசாம பொய் சொன்னேன்.

என் machine வேலை செய்யல.

பாதியில் struck ஆகிவிட்டது.

நாளைக்கு வர சொல்லிட்டாங்க என்றேன்.

அவர் நம்பவில்லை.

வேணும்ன்னா அங்க பார். என் கூட எழுதிய எல்லாரும் வந்துட்டோம். அனேகமா system down.

பேரு கனடா.. வளர்ந்த நாடாம்?வா வா,, நாம் எல்லாம் இந்தியாவிலே 8 புள்ளி கோலம் ரோட்டில் போட்ட ஆளுனு கமுக்கமா வந்துட்டேன்.

________________________________