ஆப்ரிக்காவின் தண்ணி மாஸ்டர் யார் என்றால் இவர் தான். ஆங்கிலத்தில் பெயர் வாட்டர் பக்.
இவர் இருக்கும் இடத்தில் தண்ணி இருக்கும், அப்படி இல்லை என்றால் தண்ணி இருக்கும் இடத்தில் இவர் இருப்பார்.

பரிணாமத்தில் மாட்டுக்கும், மானுக்கும் இடைப்பட்ட ஒரு பொசிஷன் தலைவருக்கு.

இவருக்குச் சிங்கம், சீட்டா என்று பல எதிரிகள் இருப்பினும் கத்துகிட்ட ஒரு தனி தன்மை இருப்பதால் தப்பித்துக் கொள்ளும்.
இவர், தண்ணி மாஸ்டர் மட்டும் இல்லை. மிகவும் நாற்றம் பிடித்த தண்ணி மாஸ்டர்.

தோளில் இருக்கும் ஒரு வித சுரப்பிகள் இந்த நாற்றத்தைக் கொடுப்பதால் இதைக் கொன்று உண்ண மிருகங்கள் யோசிக்கும்.
வேகமா ஓடாது. migrate ஆகாது. சண்டை போடாது. பெரிய கொம்புகள் கிடையாது.

யார் வம்பு தும்புக்கும் போகாது.

இதைக் கொன்று சாப்பிட நாற்றம் பிடுங்கி தள்ளும் என்பதால் இதுங்களா செத்தாதான் உண்டு.

காட்டில் வேற எதுவுமே கிடைக்காமல் மரண பசியில் இருக்கும் போது மட்டுமே பிரச்சனை.

மற்றபடி ஹாப்பி லிவிங் creature. இதைப் பார்க்கும் மற்ற காட்டு உயிரணங்களுக்கு இவைகளை பிடிக்காது.

உலக அழகி மார்லின் மன்ரோ சொன்னார்..
இந்த உலகில் அதிகம் வெறுக்கப்படுபவர்கள் successful மனிதர்கள்.

Success makes so many people hate you.
I wish it wasn’t that way.
It would be wonderful to enjoy success without seeing envy in the eyes of those around you.

ஆனால் ஒவ்வொரு தண்ணி மாஸ்டரை கடந்து போகும் மான்கள் அப்படி நினைப்பதில்லை.

Success மனிதர்கள் ஒவ்வொருவருவரும், ஒரு டைப் of hate மெக்கானிசம் வைத்து தன்னை பாதுகாத்து கொள்வார்கள்.

கஜினி முதல் ரஜினி வரை.