இந்தப் படத்தை எடுத்து சுமார் நான்கு வருடம் ஆகிறது. Oregon coast டில் மிக உயர்ந்த ஒரு மலை முகட்டில் இருந்து எடுத்து. ஒவ்வொரு முறை இந்தப் படத்தை பார்க்கும் போதும் ஒவ்வொரு தகவல் எழுதத் தோன்றும்.
காரணம், உலகத்திலேயே மிக டைனமிக் கடற் பரப்புகளில் முதன்மை இடம் இந்த கடற் தொடர்ச்சிக்கு உண்டு. ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு வானிலை. மிகவும் அபாயகரமான கடல் அலைகள்.
இதில் சில அதிசியங்களும் உள்ளன..
அதில் சிலவற்றை இன்று சொல்கிறேன்….
இங்கு இருக்கும் கடற்கரை மணல் இரவில் ஜொலிக்கும். காரணம் இந்த சீதோஷ நிலையில் ஒரு phytoplankton எனும் நுண் உயிர் வாழ்கிறது. அதன் பெயர் dinoflagellates. இது ஒரு நுண் உயிர் தாவரம்.
அதற்கு ஒரு குணம் உண்டு. இதை ஏதாவது தொட்டால் மின் மினி பூச்சு போல் மினு மினுக்கும். இவர் கடற்கரையில் உள்ள மணலில் வளர்கின்றன.
சில குறிப்பிட்ட இடங்களில் இரவு வெளிச்சம் இல்லா கடற் கரைக்கு சென்றால் கடல் அலைகள் மணலைத் தொடும் போது இவை மினுமிக்கும்.
உலகத்தில் ” glowing கடற்கரையை” கொண்ட ஒரு சில பீச்க்ளில் இதுவும் ஒன்று.
இதை இரவு மணி ஒன்றில் இருந்து சுமார் நான்கு வரை கீழ் கண்ட இடங்களில் சென்று பார்க்கலாம்.
(Lincoln City, Gleneden Beach, Newport, northern Yachats, Waldport, Cannon Beach, Manzanita)
இதைவிட அதிகம் மிளிரும் பீச் பார்க்க வேண்டும் எனில் நீங்கள் மாலத்தீவுக்குத்தான் போக வேண்டும்.
இந்தக் கடற்கரையில்தான் உலகத்திலேயே அதிக பேய்கள் நடமாடும் கோஸ்ட் டௌன்ஸ் உள்ளன.
சுரங்க நகரங்கள் பிற காலத்தில் இழுத்து மூடியபின் பேய்கள் குடி கொள்வதுதான் உலக வழக்கம்.
கோஸ்ட் டௌன்ஸ், மிக சுவாரிசியாமானவை. இதில் கிங் காங்க் உஸ்பேக்கிஸ்தானில் உள்ளது.
அதைப்பற்றி பின்னால் எழுதுகிறேன்.
Oregon சென்றால் இரவில் கடற்கரைக்கு பேய்களுடன் செல்லலாம்.
With this information you have provided, I’m tempted to do this coastal drive, once more.
இரு முறை சென்றுள்ளேன். ஒருமுறை பகற்பொழுதில். மற்றொருமுறை முன்னிரவுப் பயணம். இந்த விவரம் தெரியாமல் போய்விட்டதே. சுப்பு சொன்னதுபோல் இன்னொரு முறை சென்று விட வேண்டியதுதான்!