நல்ல புகைப்படம். இரண்டு வரியில் கவிதை பிலீஸ் ? என்று நண்பர் மகேந்திரன் ஒரு பதிவு செய்து இருந்தார்.

இரண்டு வரி கவிதையை பலர் எழுதி இருந்தார்கள்.
எல்லோருக்கும் நன்றி. எல்லோருடைய கவிதைகளையும் படித்தேன்.

கவிதைகள் தொடாத ஒரு குறியீடு இந்தப் படத்தில் ஒன்று உள்ளது. இதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.

1940, களில் இங்கிலாந்துக்கும், ஹிட்லரின் ஜெர்மானிய படைகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்துவந்தது. இது இரண்டாம் உலகப் போர்.
ஹிட்லருக்கு ஒரு வியூகம். அதாவது ..இங்கிலாந்து படைகளை அடக்க அவர்களின் போர் வீரர்களுடன் சண்டை இடும் முன் அந்த நாட்டிற்குச் செல்லும் உணவைத் தடுத்தால் அவர்கள் பசியால் வாடிச் சோர்வடைவார்கள்.
அதனால் உணவைக் கட் செய்ய யோசித்தார். இங்கிலாந்துக்கு உணவுகள் அந்த காலத்தில் தெற்கு ஐரோப்பாவில் இருந்தும், கிழக்கு நாடுகளில் இருந்தும் கப்பலில் இறக்குமதி ஆகிக்கொண்டு இருந்தது.

அதனால், ஹிட்லர் தான் படைகளை அந்த உணவு ஏற்றி வந்த கப்பல்களை நோக்கி ஏவி விட்டார். அதைக் கச்சிதமாக செய்து முடித்து ஹிட்லரின் U படகுகள்.
சுமார் மூன்று மாதத்தில் பெரும்பாலான உணவு கப்பல்கள் கடலில் மூழ்கின. இதைச் சற்றும் எதிர்பாராத இங்கிலாந்து, உணவு பற்றாக்குறையில் தவித்தது.

அப்போது கேம்பிரிட்ஜ் மருத்துவ ஆராச்சியாளர்கள் இருவர் களம் இறங்கினார்கள்.( Elsie Widdowson and Robert McCance)
நம்மிடம் இருக்கும் உணவை வைத்து சத்தான breads செய்வது எப்படி என்று formula வை அரசாங்கத்துக்குக் கொடுத்து உதவினார்கள்.

உடனே, அரசாங்கம் இதைச் செயல் படுத்தியது. அதற்குள் மக்கள் பசியால் வாட ஆரம்பித்தார்கள்.
அப்போது உருவாக்கியதுதான் ரேஷன் சிஸ்டம்.

சரி, அதற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்.

மேட்டர் இதுதான்..

ரேஷன் என்பது ..
ஒவ்வொரு வீட்டில் இருக்கும் குழந்தைகள், மற்றும் பெரியவர்களின் கணைக்குப்படி பிரட் துண்டுகளை எண்ணி ஒரு வாரத்துக்கு உண்டான உணவாக அரசாங்கம் தரும்.
அதைச் சேமித்து வைத்து ஆளுக்கு ஒரு வேளைக்கு ஒரு கடி கடிப்பார்கள். கடித்தது போக மீதி ரொட்டி மதியம், மற்றும் இரவுக்குச் சேமித்து வைக்கப்படும்.

ரேஷன் சிஸ்டம் என்பது வறுமையின் அடையாளம்.
ஒரு வீட்டில் ஒரு ரொட்டி துண்டுதான் ஒரு நாளைக்கு.
அதை அவரசரப்படாமல் சேமித்து உண்பது பின் வழக்கமாகியது.

அதனால், யாரும் அவசரம் அவசரமாகக் கடித்து உண்ணாமல் ஒரே கடி ஒரு வேளைக்கு என்று வறுமையின் கோடு ஒவ்வொருவரின் வயிற்றிலும் வரைந்து விடும்.
ஒரு வீட்டுக்குச் சென்று கடி பட்ட ரொட்டியின் அளவைக் கொண்டு அது காலையா, மாலையா அல்லது இறவா என்று சொல்லும் அளவிற்கு வறுமை வாட்டி எடுத்து.

மேல் உள்ள படத்தில், அந்தக் குடும்பத்தின் வறுமையும், ரேஷனிங் சிஸ்டமும் அந்த ஒரு கடி பிஸ்கேட்டில் இருந்தே தெரிகிறது.
இரண்டு குழந்தைகளுக்கும் அந்தத் தாய் ஒரே ஒரு பிஸ்கேட் கொடுத்து இருக்கிறார்.

இரண்டுமே அதைச் சந்தோஷமாக ஒரே ஒரு கடி கடித்து இன்பமாகச் சிரிப்பது ” வறுமையின் சிரிப்பு”.

படத்தில் இருக்கும் Marie பிஸ்கேட் உலகப் போரின் போது இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வறுமையின் அடையாளம்.
இதைத் தயாரித்தது ஒரு இங்கிலாந்து போக்கிரி. அதன் பெயர் Peek Freans. தயாரித்த ஆண்டு 1874.

இதை ITC நிறுவனம் இறக்குமதி செய்தது.
சுந்தந்திர இந்தியாவில் ஆங்கிலேயர் விட்டுச் சென்ற வறுமையை இன்னமும் இந்த இரண்டு பிஸ்கேட் துண்டுகள் கடி பட்டு காட்டுகின்றன.

என் இரண்டு வரிக் கவிதை இதுதான்

வறுமையின் நிறம்
Marie பிஸ்கேட்டு