அமேசான் காடுகளைப் பற்றி எத்தனையோ படங்கள் இதுவரை வந்து உள்ளன. இதில் மிகக் குறிப்பிடுபவை Embrace of the Serpent (2015), Aguirre, the Wrath of God (1972) மற்றும் Fitzcarraldo (1982). இந்தக் காடு ரெயின் forest வகையைச் சேர்ந்தது. அதுமட்டும் இல்லாமல், இந்தக் காடுகளில் தரை கருப்பாக இருக்கும். சூரிய ஒளியில் வெறும் 1% மட்டுமே இதன் தரைகளை வந்து அடையும்.
அவ்வளவு திக் forest. அமேசான் என்று பெயர் வைத்தவர் ஒரு ஸ்பானிஷ் traveller. அவர் பெயர் Francisco Orellana. அவர் இந்தக் காடுகளில் அலைந்து திரிந்த போது சில காட்டு வாசி பெண்களால் தாக்கப்பட்டார். அவர்கள் tribe ல் பெண்கள்தான் போர் வீரர்கள். காடுகளில் இவரைத் தாக்கியவர்கள் theIcamiabas எனும் tribe. இதைப் பார்த்த அவர், கிரேக்க வரலாற்றிலும் இப்படி ஒரு பெண் வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் பெயர் ” ஆண் துணை இல்லா பெண்கள்”.
அதனால் அமேசான் என்று பெயர் வைத்தார். மொத்தம் 9 நாடுகளில் பறந்து விரிந்து இருக்கும் இந்தக் காடுகளை பற்றி இன்னும் மனிதக் குலத்துக்கு முழுதும் தெரியாது. நீயா நானா கோபிநாத்துக்கு சொந்தமான ” அமானுஷ்யமான” என்ற வார்த்தைக்கு இந்தக் காடுகள்தான் அப்பா, அம்மா.
இந்தப் படம், இந்தக் காடுகளில் நடந்த ஒரு உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டது. படம் முடிந்தவுடன் நான்கு டைட்டில் information போடுவார்கள். அதைப் படித்துவிட்டு விருப்பம் இருந்தால் மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
உண்மையில் இது பொலிவியாவில் இருக்கும் அமேசான் காடுகளில் உண்மையாக நடந்த நிகழ்வு.
நான்கு பேர் அமேசான் காட்டுக்குள் செல்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு மன நிலை.
அமேசான் காடுகளில் உலகத்துக்குத் தேவையான 20% oxygen உருவாக்கப்படுகிறது. படம் பார்க்கும் உங்களுக்கு இது புரியும்.
சுமார், ஒரு ஹெக்டரில் 750 மர வகைகளும், 1500 தாவர வகைகளும் இருக்கும் கும் இருட்டு காடு.
மழைதான் இதன் தாய். இடித்தான் இதன் தந்தை.
வழி தெரியாமல் காட்டுவாசி உள்ளே சென்றாலே உயிரோடு திரும்பி வருவது கடினம்.
இப்படிப்பட்ட காட்டில், தங்கம் இருப்பதாக ஒரு ஆஸ்திரியா நாட்டு தேடப்படும் குற்றவாளி நம்புகிறார்.
இதைப் படத்தில் சொல்லி இருக்க மாட்டார்கள். அதனால் அதை அடைய எதேச்சையாகச் சந்திக்கும் சிலருடன் ஆரம்பிக்கிறது பயணம்.
ஹாரி பட்டர் பையன்தான் மெய்ன் ரோல்.
பின்னி எடுத்து நடித்து இருக்கிறார்.
படத்தில் ஒரு ஆறு sequence வரும்.
அதை எந்தளவுக்கு ரியலாக எடுக்க முடியுமோ அதைப் படம் பிடித்து இருக்கிறார்கள்.
கண்டிப்பாகப் பார்க்கலாம்.
வனங்கள் பற்றிய ஆர்வமும், தென் அமெரிக்க காடுகளை பற்றித் தெரிந்து கொள்ள இந்தப் படம் உதவலாம்.
உண்மையிலேயே இந்தக் காட்டில் சிக்கிய Yossi Ghinsberg என்ற இஸ்ரேல்லியரின் உண்மை கதைதான் இது.
பின்னாளில், அவர் சிலிகான் வேலியில் கம்பெனி நடத்தி இப்போது ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டார்.
ஆனால் இவரின் இந்த உண்மை கதை உங்களை உறைய வைக்கும்.
www.ஸ்ரீதர்.காம் ரேட்டிங்: 6.8 /10.00
ரியல் yossi
Enchanting movie to see in Broad screen ..