கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.
உலகு எங்கும் மனிதர்கள் பல போராட்டங்களை நடத்தித்தான் வாழும் சம நிலையை அடைந்து இருக்கிறார்கள்.

இன்னும் நாம் முழுமையாகச் சமூக சம அந்தஸ்தை , அடைய முடியவில்லை என்றாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் மனிதர்களைப் பிரித்து வைத்து நடத்துவது இந்த உலகில் இலை மறை காயாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இது உடனே, ஒரு இந்திய கதை என்றோ, கோவில் கதை என்றோ நினைக்க வேண்டாம்.
உலகமே ஆசிரியப்பட்ட பல அறிவாளிகளைக் கொண்ட அமெரிக்காவின் நாசா அறிவியல் கூடத்தில் படித்தவர்கள் எப்படி ஒரு இனத்தை அடிமையாக வைத்து நடத்தினார்கள் என்பதைப் பற்றிய கதை. இது ஒரு உண்மை கதை.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் நாம் எப்படி வாழ்ந்து இருக்கிறோம், எப்படி மனிதர்களைப் பிரித்து வைத்து ஆண்டார்கள் என்பதுதான் கதையின் கரு.

படத்தில் மூன்று நாயகிகள். உண்மையில் இவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்த கதா பாத்திரங்கள்.
கறுப்பினத்தை சேர்ந்த இவர்களைப் படித்த ராக்கெட் விஞ்ஞானிகள் எப்படி நடத்தினார்கள் என்றும் பின்னால் அவர்கள் தங்கள் அறிவின் மூலமும், போராட்டத்தின் மூலமும் எப்படி அந்தத் தடைகளை உடைத்து எரிந்து சாதனை படைத்தார்கள் என்ற உண்மை நிகழ்வுதான் படத்தின் கதை.

Segregation என்பது பிரித்து வைப்பது. நிறத்தால் கறுப்பின மக்களை எப்படி நாசா கூடத்தில் கழிவறையில் இருந்து குடிக்கும் காபி கப் வரை பிரித்து வைத்து நடத்தினார்கள் என்ற உணர்ச்சி வயப்படக்கூடிய கதைக் களம்.

Katherine Goble ஒரு கணிதவியலாளர்.

கறுப்பர்.

ரஷ்யாவின் யூரி கிராகரின் விண்வெளியில் முதல் காலடி வைத்த முதல் மனிதன் என்று ஆகிய பின்பு, அமெரிக்காவிற்கு அடுத்து என்ன பெரியதாக செய்யவேண்டும் என்ற அழுத்தம் வந்தது. அதற்காக அவர்கள் முயலும் பல கட்டங்களில் நிறம் எப்படி அறிவைத் தடுக்க முயன்றது என்பதைச் சொல்லும் கதை இது.

கதையை நான் எழுதவில்லை. மூன்று கேரக்டர்களும் உண்மை கதாப் பாத்திரங்கள்.
Freindship 7, அப்பலோ விண்கலம், மற்றும் Space Shuttle missions களில் அந்தம்மா போட்டுக் கணக்குகளைத்தான் இன்று கணினிகள் செய்கின்றன.

2015 ஆம் ஆண்டு கேத்தரீனுக்கு அமெரிக்க அதிபர் Presidential Medal of Freedom என்ற மெடல் அணிவித்து மரியாதை செய்தார்.
ஆனால், இந்த நிலையை அடைய அந்த மக்கள் எவ்வளவு துன்பத்தை தாண்டி வந்து இருக்கிறார்கள் என்பதை ஓடும் பேருந்தில் இருந்து, நூலக புத்தகம் வரை எப்படி கோடு போட்டு பிரித்தார்கள் என்று படம் பார்த்தால் புரியும்.

படத்தின் பெயர் hidden figures.
மூன்று பெண்மணிகளின் அறிவுக்கதை.

Netflix க்கில் இருக்கிறது.
முடிந்தால் குழந்தைகளுடன் பார்க்கவும்.

உலகில் உயர்ந்தது நிறமும், இனமும் இல்ல அறிவே என்பதை உணர்த்தும் படம் இது.
நீல் ஆம்ஸ்ட்ராங் போன்றவர்களைத் துதிக்கும் இந்த உலகம் இந்தப் பெண்மணிகளை மறந்துவிட்டது என்பதை உணர்த்தவே படத்துக்கு இந்தப் பெயர்

Katherine Johnson இன்றும் உயிரோடு இருக்கிறார்.
அவருக்கு வயது 99.

 

Sridar.com Rating: 8/10