சனீஸ்வரன் என்பது ஜோதிடத்தில் ஒரு கிரகம். கடவுள்.
ஆனால், உன்மையில் சனீஸ்வரன் என்பது ஒரு கான்செப்ட்.

அது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சிண்டிகேட் கான்செப்ட்.
சனி மட்டும் அல்ல, சோதிடத்தில் இருக்கும் ஒன்பது கிரகங்களுமே ஒரு கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டவைதான்.

சனியின் முதல் பார்ட் படித்துவிட்டு இதைப் படித்தால் புரியும்.
சிம்பிளாக, விளக்க முயல்கிறேன்.

பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னால் உலகில் எலெக்ட்ரிசிட்டி கிடையாது.
போன் கிடையாது. மொபைல் கிடையாது. டிவியும் கிடையாது.

இயற்கையும், மனிதனும் மிருகங்களுடன் கொஞ்சி குலாவிய காலம் அது.
சுமார் 10,000 வருடம் முதல் 5000 வருடம் முன்பு வரை …என்று வைத்துக்கொள்ளுங்கள்.

நைட் எட்டு மணிக்கு மேல் மக்களுக்கு இனப்பெருக்கம் தவிர பெரிய entertainment எதுவும் கிடையாது.
மாடி வீடும், மல்டிப்ளெஸ்க்கும் இல்லாத வாழ்க்கையில், பாய் போட்டு வானத்தைப் பார்ப்பதுதான் மனிதனின் ஒரே பொழுது போக்கு.

பாட்டி வடை சுட்டது முதல், பனிக்கரடி பணியாரம் சுட்ட கதைகள் அனைத்துமே இரவில் வானத்தைப் பார்த்து எழுதியவைதான்.

இந்தப் பாக்கியம், இந்தியர்களுக்கும், ஆப்ரிக்கர்களுக்கும் அதிகம்.
கிரேக்கர்களுக்கு வேற பழக்கம். அதை எழுத 10 தொடர் வேண்டும்.

அப்புறம் எழுதுகிறேன். Back to வானம்.
Clear Skies. Fewer Clouds. வருடம் முழுவதும் Fixed Daylights.

இந்தப் பாக்கியம் எவனுக்குக் கிடைக்கும்?
பூமத்திய ரேகையில் நடு-சென்டரில் இருந்த, இருக்கின்ற இந்தியாவிற்கு இது ஒரு வர பிரசாதம்.

உலகின் மற்ற பகுதியில் வாழும் மக்களுக்கு இந்த ஓபன் தியேட்டர் வசதி கிடையாது.
சில இடங்களில் இருக்கும். ஆனா இருக்காது.

பல இடங்களில், சூரியனையும், நிலவையும் பார்ப்பதே அரிது.
மழை, குளிர், மேகம் என்று வானிலையும் variable day light இருப்பதால் கூரைக்குள் பதுங்கி திரும்பி படுத்தார்கள்.
ஆசியாவில் மக்கள் தொகை அதிகமாகவும், கனடாவில் மக்கள் பெருக்கம் குறைவாக இருக்க இதுவும் ஒரு காரணம்.
When its cold, we condense. இன் ஹீட் வி expand அண்ட் explode.

இப்படிப் பிறந்த, பல பேர் வானத்தைப் பார்த்தாலும் பெரும்பாலோர் கொட்டாவி விட்டுத் தூங்கினார்கள்.
சிலர் நிலவையும், பெண்ணையும் உவமையாக வைத்து பாட்டு எழுதிவிட்டுத் தூங்கினார்கள்.

சிலர் மட்டும், நிலவையும் நட்சத்திரங்களும் கவனிக்க தொடங்கினார்கள்.
பின்பு அது நகர்வதும், அது எப்படி எவ்வளவு தூரம் நகர்கிறது என்பதையும் கவனிக்க ஆரம்பித்தார்கள்.
அதைப் புள்ளிகளாக குறிப்பு எடுத்துவிட்டு இறந்தும் போனார்கள்.

பின்பு பிறந்தவர்கள், அதே நாள் அடுத்த வருடமும் நிலவும் நட்சத்திரமும் அதே இடத்திற்கு வருகிறதா என்று கவனித்து அதை அந்தக் குறிப்பில் update சேர்த்தார்கள். இப்படிப் பல பேர் பல நூற்றாண்டுகளாகக் கவனித்து எழுதி, எழுதி ஓரளவுக்கு இந்த சைக்ளிக் movements வானத்தைப் போல விஜயகாந்த் போல கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்துவிட்டது.

அவர்கள் குறிப்பு எடுத்து இரவில் நட்சத்திரம் movements மட்டும் அல்ல, அடுத்த நாள் பகலில் நடக்கும் நிகழ்வுகளையும்தான்.

Just for example, december 2017, 22 ஆம் தேதி மிகக் கடுமையான மழை என்றால் அன்று இரவு நிலவும், நட்சத்திரமும் எந்த இடத்தில் இருந்தது என்று refer செய்து பார்த்தார்கள். இதில் எவை எவை, எத்தனை முறை repeat ஆகின்றதோ அதை எழுதி வைத்தார்கள்.
அவர்கள் வாழ்நாளில் அது repeat ஆகவில்லை என்றால் அதை நோட் செய்துவிட்டு இறந்து விடுவார்கள்.

Repeats and Variables.
Repeats in their lifetime are recorded.
Variables are noted for reference.

முதலில் பொழுது போக்காக ஆரம்பித்த இந்தப் பழக்கம் பின்பு ஒரு சீரியஸ் ஹாபியாகி, பின் வெறியாக மாறி எழுதி எழுதித் தள்ளினார்கள்.
முதலில் வந்த விண்டோஸ் பெயிண்ட் போல, அதில் கிறுக்காத கோடுகளே இல்லை எனும் அளவுக்கு வானத்தில் புள்ளி வைத்து கோலம் போட்டார்கள்.

அதைப் படிக்கும் அடுத்த தலைமுறை, விடுபட்ட அந்த நிகழ்வும் இரவு நிலவும், நட்சத்திரமும் மேட்ச் ஆகும் வரை வானத்தைப் பார்த்து இருப்பார்கள்.
மெதுவாக, புள்ளிகள் கனெக்ட் செய்தார்கள். ஏன் செய்கிறோம், என்ன வரப் போகிறது என்று எல்லாம் தெரியாது.

Coding செய்யும் போது ஒரு வெறித்தனமும், வெங்காயத்தனமும் கலந்து இரவு முழுவதும் தட்டோ தட்டு என்று தட்டுவோம் அல்லவா, அதைப் போல் பகலில் தூங்கி இரவில் வானத்தை நோட் செய்யும் இவர்கள்தான் வான சாஸ்திரர்கள். எல்லாமே assumpitons. லாஜிக் வரும் வரை பார்த்து, செட் ஆன பின்பு அதை predict செய்வார்கள்.

இவர்களுக்கு, கொஞ்சக் காலம் சென்றவுடன் புரிந்துவிட்டது.
இரவு நடக்கும் மேடர்களுக்கும் பகலில் நடக்கும் மேடர்களுக்கும் ஏதோ ஒரு லிங்க் இருக்கிறது என்று.

இதைப் புரிய வைக்க ஒரு லாஜிக் சொல்கிறேன்.

இருண்ட அறையில், கண் தெரியாதவன் வெளியில் நடந்து போகும் மனிதர்களில் கால் தடம் சத்தம் வைத்து எத்தனைப் பேர் எத்தனை முறை ஒரு நாளில் நடந்து சென்றார்கள் என்று ஜட்ஜ் செய்ய முடியும் அல்லவா? அந்த ஜுட்ஜ்மெண்ட் தான் கான்செப்ட்.

இதுதான் ஜோதிடக்கலை.
ஒரு குத்துமதிப்பா கரெக்ட்டா இருக்கும்னு ஸ்ட்ரோங்கா நம்ப வைக்கும் கலை.
ஆனா, அது குத்துமதிப்பா இருக்க வேண்டிய இடத்தில் கரெக்ட்டாகவும், கரெக்ட்டா இருக்க வேண்டிய இடத்தில் குத்து மதிப்பாகவும் இருக்க நிறைய வாய்ப்பு உண்டு.

அதாவது இருட்டு அறையில் ஒரு முரட்டு நம்பிக்கை குத்து.

இதை நாம் மட்டும் கண்டுபிடிக்கவில்லை ..
Clear skies கொண்ட பாபிலோனியர்களும், கிரேக்கர்களும் கண்டுபிடித்தார்கள்.
அவங்க குத்தாட்டம் வேற கணக்கு.

Lets back to track.

இப்படி, பகலில் நடக்கும் நிகழ்வுக்கும், இரவு நகரும் நட்சத்திரத்தையும் லிங்க் செய்யும் போது எல்லாமே variable values இருந்தால் equation எழுத முடியாது. இதைச் சொன்னவர்கள் எண் கணிதவியலாளர்கள்.

இந்த Bus எத்தனை மணிக்கு வரும்? என்ற கேள்விக்கு பல variables இருக்கும்.

எந்த நம்பர் பஸ், எங்க இருந்து கிளம்பும், எங்க போய் சேரும், எத்தனை மணி, யார் டிரைவர்னு எழுத்திட்டே போகலாம்..
ஆனா இந்தக் கேள்வியில் பல variables இருந்தாலும், இந்தக் கேள்வியில் பஸ் தான் ஒரு constant. Moving கான்ஸ்டன்ட்.

அதைப்போல், பகலில் நடக்கும் நிகழ்வுக்கும் இரவுக்கும் லிங்க் செய்ய constants தேவைப்பட்டது.
சரி, இதில் மிகப் பெரிய கான்ஸ்டன்ட் எது?

எது மாறாமல், ஒரே இடத்தில் தோன்றி ஒரே இடத்தில் மறைகிறதோ அதுதான் the big கான்ஸ்டன்ட்.
அது சூரியன். உடனே அதை புடித்து உள்ளே போட்டார்கள்.

அதுதான் முதல் கிரகம்.
அடுத்து பளிச்சுனு தெரிவது நிலவு. வான்னு அதையும் பிடித்து போட்டார்கள்.

இந்த இரண்டையும் கணிதவியலார்களிடம் எடுத்து சென்றார்கள்.
இரண்டு கான்ஸ்டன்ட்ஸ் ஓக்கே. ஆனா, more the constants… the better the predictions என்றார்கள்.

மீண்டும் போய் தேட ஆரம்பித்தார்கள்.
பகலில் சூரியனை தவிர, வேற எந்த கான்ஸ்டன்ட்ஸ்ம் இல்லை.
மீதி எல்லாம் நைட்டுல புடிக்கணும்.

போய், வானத்தை உத்து பார்த்தாதான் தெரிகிறது …
எல்லா நட்சத்திரமும் ஒரு மாதிரி இல்லை. சிலது பிரைட்டா இருக்குதுங்க.

அவை வேறு யாரும் இல்லை.

செவ்வாய் (Mars)
புதன் (அறிவன் Mercury)
குரு (வியாழன் Jupiter)
சுக்கிரன் (வெள்ளி Venus)

நான் மேலே குறிப்பிட்ட இந்த நான்கு ஸ்டார்ஸ் – கிரகங்களை நாம் வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்.
டெலெஸ்கோப் எல்லாம் தேவையே இல்லை.

இப்போ…. மொத்தம் 4 + 2 ( சன் and moon)

இந்த ஆறு கான்ஸ்டன்ட்ஸ் களையும் கணிதவியலார்களிடம் எடுத்து சென்றார்கள்.
ஆறு ஓக்கே … ஆனா இவை எல்லாமே கான்ஸ்டன்ட்ஸ் என்றாலும் இவை சுற்றி சுற்றி வருபவை.

இந்த லாஜிக் படிப்பார்த்தால் எல்லாமே சுத்தி சுத்தி வந்தால், நமக்கு repeats வரவே வராது.
ஆக இதில் எவனோ ஒருத்தன் நிலையா இருக்கிறான்.
அவனைச் சுத்திதான் மத்தவங்க ஓடிக்கிட்டு இருக்காங்க.
போய் அவனை கண்டுபிடிச்சு கூட்டிக்கொண்டு வா என்றார்கள்.

அதில் ஒருவன் சொன்னான்..அந்த நிலையா இருப்பது நம்ம பூமிதான்.
அதையும் நம்பி வானத்தைப் பார்த்தார்கள்.

அப்பத்தான் தெரிந்தது, இரவில் நான்கு நட்சத்திரங்களும் 16 டிகிரி zodiac தொலைவில் சுற்றி வந்தன.
அப்பத்தான் புரிந்தது, நாம் இருக்கும் பூமியும் இதே 16 டிகிரி zodiac தொலைவில் சுற்றி வருகிறது.

அப்படி என்றால், சுற்றாமல் இருக்கும் சூரியன்தான் தி பிக் கான்ஸ்டன்ட்.
சூரியன்தான் தலை. இதைச் சுற்றித்தான் எல்லாரும் சுத்துறோம்.

உடனே, சூரியனை எடுத்துச் சென்று கணிதவியலார்களிடம் நிறுத்தினார்கள்.
கிரேட். எல்லா கான்ஸ்டன்ட்ஸ் கிடைத்தாகிவிட்டது.

ஆனா இதில் ஒரு சிக்கல்.
இதில் பூமியும் சுற்றுவதால், நாம் ஒண்ணு செய்வோம்.

பூமி value கண்டுபிடிக்க, மேல ஒண்ணு ..கீழ ஒண்ணு பூமியை சுற்றவிட்டு அந்த 16 டிகிரிகையை கணக்கு செய்துக்கலாம்.
நாமளே, பூமி மேல சுத்திகிட்டு உட்க்காந்து இருப்பதால் இந்த இரண்டு நெட்டு குத்து கான்ஸ்டன்ட்ஸ் உதவும்.

இது ரெண்டும் imaginatory மூவிங் objects. They are not Stars.
இந்த இரண்டையும் பக்காவா ட்ராக் செய்ய சன் போதும்.

காரணம், Shadows வைத்து both vertical and horizontal movements புடிச்சு பூமியோட 16 டிகிரி புடிசிடலாம்.
அந்த இரண்டு வேறு யாரும் இல்லை.

1. இராகு (நிழற்கோள்)
2. கேது (நிழற்கோள்)

Two cardinal directions, up and down – Shadow Planets.

ஆக இதுவரைக்கும் எட்டு கான்ஸ்டன்ட்ஸ்.
இதை வச்சு, எது எது எதனை முறை repeat ஆகுது, இந்த repeat க்கும் பகலில் நடக்கும் நிகழ்வுக்கும் லிங்க் இருக்கானு பார்க்க ஆரம்பித்தார்கள்.

லிங்க் இருக்கத்தானே செய்யும்?
இந்த உலகின் மிக முக்கிய சக்தி சூரிய சக்தி.
மழை, காத்து, மின்னல், இடி, புயல் என்று எல்லாமே ஒரு cyclic நிகழ்வா நடக்க மிக முக்கிய காரணம் சூரியன்னு புரிஞ்சு போச்சு.

சரினு, ஒரு நாள் பழைய டேட்டா எல்லாம் எடுத்துட்டுவா, இதை வச்சு பக்காவா எது எது கூட லிங்க் ஆகுது பார்க்கலாம்னு யோசிச்சாங்க.
அந்த repeats டேட்டா பார்க்கும் போது, பூமி தன்னைத்தானே சுத்த 24 மணி நேரமும் ..சூரியனைச் சுற்ற 365 நாளும் ஆகுதுன்னு கண்டுபிடிச்சாங்க.

புதன் (Mercury) வெறும் 88 நாள்.
இப்படி எல்லார் rotation ஆண்டுகளும் கண்டுப்பிச்சுட்டே வந்தா அதில் ஒரு ராசுக்கோல் மட்டும் 30 வருஷத்துக்கு ஒரு முறை repeat ஆனது தெரிந்தது.

அந்த ராசுக்கோல்தான் சனி. Saturn.

பின்னால், சனியை ஒன்பதாவது கான்ஸ்டன்ட் ஆகச் சேர்த்தார்கள்.

அதாவது, சூரியன், நிலவு தவிர கண்ணால் பார்க்க கூடிய மீதி ஐந்து கிரகங்களுடன் இரண்டு shadows கார்டினல் calculative கான்ஸ்டன்ட்ஸ் சேர்த்து மொத்தம் ஒன்பதுதான் பின்னாளில் நவக்கிரகம் ஆனது. அதுக்கு அப்புறம் அதுக்கு கோயில் கட்டிக் கும்பிட்டது தனிக்கதை.

அது சயின்ஸ் இல்லை. ஆன்மீகம். back to சயின்ஸ்..

சனியை நாம் வெறும் கண்ணாலே தினம் பார்க்கலாம்.
எல்லா நாட்களில் தெரியும் ஒரு சில planets ல் சனியும் ஒன்று.
தன்னைச் சுற்றி ரிங்ஸ் வைத்துக்கொண்டு சிறியதாக மிக அழகாக இருக்கும் கோள் இது.

இந்த 9 கிரகத்திலேயே மிக அழகான, பளிச்சென்று இருக்கும் கிரகம் சனி மட்டுமே.
இவ்வளவு, அழகான சனியை ஏன் சாயா எனும் சூரியனுக்கு செட்டப் மனைவியாக உருவாகப் படுத்தி, அது கருப்பாகவும், தீமையைச் செய்யும் கடவுளாகவும், காக்கா மேல் உட்கார வச்சி நம் வேதங்களில் சனியை ஒரு பேட் buddy யாக உருவாக்கப்படுத்தினார்கள்?

ஏன் ஒரு கிரகத்தை தேவை இல்லாமல் தீமை தரும் ஒரு கிரகம் என்றும் அது நகர்வதை ஏன் இவ்வளவு சிறப்பு வாய்ந்த நிகழ்வாகவும் ஜோதிடம் பார்க்கிறது? உண்மையிலேயே, இது உண்மையா? சனியால் தீது வருமா? இதுக்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்பு.

சனியன் யார் பார்ட் ஒண்ணுக்கும், இரண்டுக்கும் என்ன தொடர்பு?

தொடரும்