No one wants to die.

இதை Steve Jobs வாழும் போதே சொன்னார்.

சொர்க்கம் செல்லவேண்டும் என்று நினைப்பவர்கள் கூட இறக்க விழைவது இல்லை.

வாழும் போது சின்ன சின்ன மேடர்களுக்கு எல்லாம் எவ்வளவு கவலைப்படுகிறோம்?

எத்தனையோ இரவுகளைத் தூங்காமல் கழிக்கின்றோம்.

மொபைல் காணாமல் போனாலோ, பாக்ஸிங் டே டீல் மிஸ் ஆனாலோ …சின்னது முதல் பெரிய கவலைகளை நமக்கு ஏராளம்.

எல்லாக் கவலைகளையும் தினம் சுமக்கும் நாம் இறக்கும் பொது “சில நொடிகளில்” எல்லாக் கவலைகளுமே சட் என்று முடித்துக் கொள்கின்றோம்.

அந்த சில நொடிகள் எப்படி இருக்கும் என்பதை ஒட்டிய பதிவுதான் இது.

நேற்று ஜெயலலிதா ஜூஸ் குடித்த வீடியோ பார்த்தேன்.

சிலர், இவ்வளவு நன்றாக இருப்பவர் எப்படி திடீர் என்று இறக்க முடியும்?

இதில் எதோ சதி இருப்பதாக எழுதித் தள்ளுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை இது சதி இல்லை விதியும் இல்லை.

யோசித்துப் பார்த்தால், அந்த ஜூஸ் குடித்துக்கொண்டு இருக்கும் ஜெயலலிதா என்ன நினைத்துக் கொண்டு இருந்து இருப்பார் ?

இல்லை.. இறக்கும் முன் தன் நினைவு இருக்கும் அந்த சில நொடிகளில் என்ன நினைத்து இருப்பார்?

தெரியாது.

தான் தாயை பற்றியோ , கடந்து வந்த பாதை பற்றியோ , இல்லை இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பற்றியோ ?

இல்லை, இப்போது நாம் இறக்கப் போகிறோம் என்பதை அவர் தெரிந்து கொண்டேதான் இறந்து இருப்பாரா?

அந்த சில நொடிகள் எப்படி இருக்கும்?

இதற்கு நான் ஒரு நிஜ நிகழ்வைச் சொல்கிறேன்.

சுமார், பத்து வருடம் முன்பு என் மனைவியின் பாட்டிக்கு உடம்பு சுகமில்லை என்று தகவல் வந்தது.

அவருக்கு சுமார் 90 வயதுக்கு மேல் இருக்கும்.

Strong லேடி.

மிக மிக active ஆக எப்போதுமே திண்ணையில் ஏதாவது வேலை செய்துகொண்டுதான் இருப்பார்.

அது டிசம்பர் மாதம். செம குளிர்.

போன் வந்தவுடன், எல்லோரும் விழுந்து அடித்துக்கொண்டு கிராமத்துக்கு ஓடினார்கள்.

கவலைக்கிடமான அவரைப் பொள்ளாச்சியில் இருக்கும் மிகப்பெரிய ஹாஸ்பிடலுக்கு எடுத்துச் சென்றார்கள்.

டாக்டர், மிகத் திறமையானவர் . சுமார் 50+ வயது இருக்கலாம்.

பிரபலமானவர். கை ராசிக்காரர். அவரிடம் போனவர்களுக்கு சங்கு அவ்வளவு எளிதில் ஊதிவிட முடியாது.

அப்பாடக்கர்.

90 + வயது என்பதால் எல்லோருக்கும் எப்படியும் பாட்டி பிழைப்பது கடினம் என்ற மனநிலை இருந்தது.

அந்தப் பயத்தில், உற்றார் உறவினர்களுக்குப் போன் கால்கள் பறந்தன.

அமெரிக்காவில் இருக்கும் பேரன்கள் முதல், முட்டுச் சந்துவரை எல்லோரும் எதையோ எதிர்பார்த்து இருந்தார்கள்.

ஆனால், கை ராசிக்கார டாக்டர் எப்படியோ ஒரு வாரம் போராடி அவர் உயிரைக் காப்பாற்றி விட்டார்.

எல்லோருக்கும், நிம்மதி வந்தது. இருப்பினும் இது ஒரு சிக்னல். டைம் has come.

சில மாதம் கழித்து நான் கிராமம் சென்ற போது பார்த்தால், பாட்டி செம active.

நான் பார்க்கும் போது, குளித்துவிட்டு சூரிய நமஸ்காரம் செய்து கொண்டு இருந்தார்.

ஹ்ம்ம் ..பாட்டி ஆயுள் செம கெட்டி என்று நினைத்துக்கொண்டேன்.

கேள்விப்பட்டது வரை, அவருக்கு உணவே மருந்து.

அளவாக உண்டு, தினம் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பாராம்.

இரவு எட்டு மணிக்கு எல்லாம் உறங்கி, காலை 4 மணிக்கு எழும் பழக்கம்.

அடுத்த ஆண்டு மீண்டும் டிசம்பர் மாதம் வந்தது.

மீண்டும் போன் அலறியது.

பாட்டியை மீண்டும் ஹாஸ்பிடல் கூட்டிச் சென்றார்கள்.

மீண்டும் அமெரிக்கா முதல் முட்டுச் சந்து வரை செய்தி பரவியது.

ஆனால், இந்த முறை எல்லோரும் கெட்ட செய்திக்குத் தயாராக இருந்தார்கள்.

இழுத்துக்கொண்டே சில வாரம் ஓடியது. ஹ்ம்ம் ஹ்ம்ம் ..

டாக்டர் ஜெயித்துவிட்டார். பாட்டி back to form.

அடுத்த முறை சென்ற எனக்குப் பெரிய அதிர்ச்சி.

காரணம், அவர் நான் பார்க்கும் போது ஏதோ சின்ன பொண்ணு மாதிரி சமையலுக்கு கீரையை அமர்ந்தபடி ஆய்ந்து கொண்டு இருந்தார்.

உள்ளே கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டு இருந்தது.

பாட்டி எப்படியும் century அடிப்பார் என்றே தோன்றியது.

சில, வருட டிசம்பர்கள் வந்தது.

போன் கால்கள் மெதுவாக வந்தன.

எல்லோரும் நிதானமாகப் பேசினார்கள்.

சிலர் மறந்தும் கூட போனார்கள்.

இப்படியே, ஐந்து வருடம் ஓடிவிட்டது.

ஆனால், அடுத்த டிசம்பர் அப்படியில்லை.

பாட்டிக்கு நினைவு தட்டியது.

உண்மையிலேயே மிகவும் கவலைக்கிடம்.

confirmed என்று பேரன்கள் பேத்திகள் பேசிக்கொண்டார்கள்.

உணவு intake இல்லை. உடலில் இனி சக்தியும் இல்லை.

பேசக் கூட முடியவில்லை என்று செய்தி வந்தது. படுத்தப் படுக்கையாக தூக்கிக்கொண்டு போனார்கள்.

டாக்டர்,தன் கடைசி வித்தை எல்லாம் காட்டிப் பார்த்தார்.

சில நாட்கள் போராடி …

இனிமேல் என்னால், காப்பாற்ற முடியாது சாரி …என்று கை விரித்து விட்டார்.

கை ராசிக்காரர் கை விரித்தபின் ….

எல்லோரும் தயார் ஆனார்கள்…

டாகடர், இனிமேல் பாட்டியை ஹாஸ்பிடலில் வைத்து பயன் இல்லை.

நினைவு இருக்கிறது. முடிந்தவரை நீராகாரம் கொடுங்கள்.

அப்போதுதான் அந்த ஹிஸ்டாரிக் ஈவென்ட் நடந்தது.

பாட்டியின் கால்களை, கடைசியாக ஒரு முறை தொட்டு வணங்கினார், டாக்டர்.

அவ்வளவுதான், போன் கால்கள் மீண்டும் பறந்தன.

பாட்டியை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

இன்னும் சில நாட்களே …

எல்லோரும் தயாராக இருந்தார்கள்.

நான் ஆபிசில் அப்போது client மீட்டிங்கிலில் இருந்தேன்.

மனைவியிடம் இருந்து போன்.

கிராமத்தில் இருந்து போன் என்று ஆரம்பித்தார் ….

சரி, சங்குதான்.

Client மீட்டிங்கில் இருந்து வெளியே வந்து சரி ..

நீ உடனே கிளம்பு, நான் மீட்டிங் முடிந்தவுடன் வருகிறேன் என்றேன்.

அதற்கு மனைவி, சங்குதான் ஆனா பாட்டி இல்லை.

டாக்டர்.

Heart அட்டாக்.

பட்டுனு போயிட்டார்.

பாவம், சின்ன வயசு.

பாட்டியிடம் இப்பதான் சொல்லி இருக்காங்க. 

அதுக்கு பாட்டி, நல்ல மனுஷன். 

இப்ப தெரிகிறது ஏன் என் காலை தொட்டு கும்பிட்டார்னு சொல்லிட்டு சூரிய நமஸ்காரம் செய்ய போய்விட்டார் என்றார். 

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. 

நம்பவே முடியவில்லை. எப்படி என்று கேட்டால் …யாருக்குத் தெரியும். 

ஹார்ட் அட்டாக். 

நேற்று யோசித்துப் பார்த்தேன்.. 

ஜூஸ் குடிக்கும் போது ஜெயலலிதா என்ன நினைத்துக் கொண்டு இருந்து இருப்பார்? 

எப்படியும், நான் பிழைத்து கொள்வேன் என்றா ? 

டாகடர், தன் காலை தொட்டுக் கும்பிடும் போது பாட்டி என்ன நினைத்துக் கொண்டு இருந்து இருப்பார்? 

எப்படியும், நான் இறந்து விடுவேன் என்றா ? அதனால்தான் டாக்டர் தன்னை கும்பிடுகிறார் என்றா ? 

இல்லை, ஜூஸ் குடிக்கும் ஜெயலலிதாவை வீடியோ எடுக்கும் சசிகலாவிற்கு ஜெயலலிதா இறக்கப் போகிறார் என்று தெரியுமா? 

என்ன நினைத்தார்கள். என்ன நடக்கும் என்று யாரும் முடிவு செய்ய முடியாது. 

இதற்கு விடை பகவத் கீதையில் இருக்கிறது. 

ஆத்மா வெட்டுப்படாது. 

தீயில் வேகாது. 

மழையில் நனையாது. 

வெயிலில் வேகாது. 

அது ஆடாதது, அசையாதது, நிலையானது. 

ஆத்மாவைப் புலன்களால் அறிய முடியாது. 

சிந்தனையில் கட்டுப் படுத்த முடியாது. 

உன்னுள்ளே உறைந்திருக்கும் ஆத்மாதான் இறைவன். 

‘அஹம் பிரஹ்மாஸ்மி’ என்பது தத்துவம். 

ஜூஸ் வாயில் செல்லும் போதும், டாக்டரின் கைகள் பாட்டியின் காலை தொடும் போது இரண்டற்ற நிலை என்று ஒன்று பொதிந்து உள்ளது. 

அதாவது, அது அத்வைதம் (அ + துவைதம், அத்துவிதம்) 

என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். 

அதுதான் ‘ஸத்’ பிரும்மம் . 

இது பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. 

அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல. 

வாழும் வாழ்க்கையில் எதுவமே நிலை இல்லை. 

நம் சங்கை எப்போது, யார் ஊத வேண்டும் என்று யாரும் முடிவு செய்ய முடியாது. 

வாழும் போது, கவலை வேண்டாம். 

நமக்குச் சங்கு ஊதப்படும் அந்த சில நொடிகளில் நமக்கு உண்டான சங்கை நாமே எடுத்து ஊதுவோம். 

முதல் நொடியில், இனம் புரியாத பயம் வரும். 

பின்பு, வியர்த்துக் கொட்டும். 

பின், எல்லாக் கவலைகளும் மறந்து காற்றில் மறைந்து போவீர்கள். 

Thanks,

_______________________________________________________________