அன்று நான் டீ குடித்த கடையின் பெயர் “அர்ச்சனா பேக்கிரி”.

பேக்கிரி இருக்கும் இடம் RS புரம்.

என் கல்லூரியில் இருந்து சரியாக 2.7 கிலோ மீட்டர்ஸ்.

 

அது ஒரு மலையாளி நடத்தும் டீக்கடை.

கடையின் பெயர் அர்சனாவா, ஆராதனாவா இல்லை அரோமாவா என்று ஞாபகம் இல்லை.

ஆனால், ஏதோ ஒரு அ..

 

விடியற் காலை என்பதால் ஓனர் கடையில் இல்லை.

வேலைக்கும், பாலாக்காட்டில் இருந்து பனியின் போட்ட ஒரு பையன்தான் சேட்டன் செட் செய்து இருப்பார்.

அப்போது எல்லாம் விடியற் காலை பனி கோவையில் மிக சகஜம்.

ஸ்வீட்டெர், குல்லாப் போட்டுக்கொண்டு காலை ஐந்து மணி முதல் ஏழு மணிக்குள் ஒரு கும்பல் டீக்கடையில் தினம் சந்திப்பார்கள்.

அதே கும்பல்தான்,  தினமும் வருவார்கள் என்று கிடையாது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரகம்.

இவர்களை, அந்த நேரத்தைத் தவிர வேறு எங்குமே எந்த நேரத்திலுமே  ஊரில் பார்க்க முடியாது.

நடு நிசி நாய்களின் ஓயாத ஓலம் இரவில் ஓய்ந்தபின், காலையில் மப்ளருடன் அமைதியாய் டீ குடிக்க வரும் மங்கிகள் இவர்கள்.

சம்பந்தமே இல்லாமல் நான்கு பேர் இருப்பார்கள்.

அருகருகே அமர மாட்டார்கள்.

நான்கு பேரும் நான்கு மூலையில் வெவ்வேறு கால் கோணல்களுடன் அமர்ந்து இருப்பார்கள்.

அந்த நாள் எப்படி நகரும் என்று அவர்களுக்கே தெரியாதவர்கள்தான் இருப்பார்கள் இவர்கள்.

அவர்களின் ஒரே துணை,  டீகைடையில் பள்ளிக்கட்டும் அந்த அய்யப்பன் சுவாமிதான்.

தனியாக அவர்களாகேவே எதோ ஒரு டாபிக் எடுத்துப் பேசுவார்கள்.

வேண்டும் என்றால் நீங்கள் பங்கு ஏற்கலாம்.

முடி வெட்டும் கடையில் இருக்கும் அறிவு ஜீவிகளை போல் இவர்கள் கிடையாது.

விரக்தியில் இருப்பவர்கள். விட்டு விட்டுப் பேசுபவர்கள்.

கேள்விக்கும் பதிலுக்கும் இடையே ஈறு கெட்ட எதிர் மறை பெயரெச்சத்துடன், எச்சை டீ கிளாசில் விடை தேடும் விலாங்கு மீன்கள்.

டீ குடித்தவுடன்,   நழுவி விடுவார்கள்.

யாரும் பேசவில்லை என்றால், தனியாகவே பேப்பர் படித்துவிட்டு விரித்த பேப்பரை மடிக்காமல் செல்லும் மைனர் குஞ்சுகள்.

இவர்கள் வந்து சென்றார்கள் என்று, விரித்து படித்துவிட்டு மடிக்காமல் விட்டு போன நாள் இதழ்கள் அன்று முழுவதும் வரலாறு பேசும்.

 

இவ்வளவு நடந்தாலும், ஒரு மலையாளி வைத்து இருக்கும் டீக்கடையில் என்றுமே அமைதி இருக்கும்.

எல்லா இடத்திலும் கம்யூனிசம் பேசும் மலையாளிகள் அவர்கள் டீக்கடையில் மட்டும் அரசியல் பேசி பார்த்ததில்லை.

அவர்கள் உண்டு. அவர்கள் தொழில் உண்டு.

எந்த வம்பு தும்புக்கும் போகாதவர்கள்.

கேரளாவில் இருக்கும் நீர் பரப்பும், நிலப்பரப்பும் ஏதோ ஒரு compatability யை அவர்கள் ஜீனில் சங்க காலம் முதலே ஏற்றி விட்டது.

கேரளா என்றால் Accomodative நிலப் பரப்பு.

மக்களும் அப்படிதான். சிம்பிளான மக்கள்.

என்று ஒரு மலையாளி இந்தியாவிற்கு பிரதமராக வருகிறாரோ, அன்று பாகிஸ்தான் இந்தியாவோடு வந்து சேரும்.

கோவையில் வளர்ந்தவர்களுக்குத்தான் இந்தியா எப்படிப்பட்ட பன்முக நாடு என்று நன்கு புரிந்து இருக்கும்.

பாலக்காட்டில் இருந்து வந்து செட்டில் ஆகும் நாயர்கள், தமிழ் மக்களுடன் பாலில் கலந்த டீதூளாய் பிரிக்க முடியாமல் ருசிப்பார்கள்.

சோசியலிசத்தில் கான்செர்வ்டிவ்னெஸ் இருந்தாலும், outlook and open to modern thoughts.

மற்றவர்களின் கலாச்சாரத்தை உள்ளவாங்கியும் தன்னிலை மாறாத mixed life ஸ்டைல் மக்கள்.

ஒரு மலையாள டீக் கடை ஓனரின் மொத்த கவனமும் , நேற்று இரவு சுட்ட அந்தப் பழைய பழம் பொரியை எந்த வித பிரச்சனை இல்லாமல் அடுத்த நாள் காலைக்குள் விற்று முடிப்பதிலேயே இருக்கும்.

மலையாளிகளுக்குச் சிவப்பு கொடியும், அப்பமும் சொல்லிக்கொடுத்த பாடம் அது.

அரசியல் சாயம் இல்லாத ஒரு மலையாளி தன் முழுக் கவனத்தையும் எந்தவித பிரச்சனை இல்லாமலும் அந்த நாளின் கடிகார முள்ளை நகர்த்துவதிலேயே குறியாக இருப்பார்.

 

தர்மேஷ் அகர்வாலுக்கும் ஒரு மலையாளியை போல்  இருக்க ஆசைதான்.

முடியாதே …காரணம் அவர் ஒரு மார்வாரி.

அவர் டிசைன் அப்படி அல்ல.

அவர் ஒரு பஞ்சாலை நூல் வியாபாரி.

ஓடும் வாழ்க்கையில் நிலையாக வாழ்பவர்.

He is a static body on a moving life.

பணம் கையில் இருந்தால் வாழ்க்கை இப்படித்தான்.

மார்வாரியிடம் இருக்கும் பணத்தை எடுத்துவிட்டால் அவர் கவரி மான் போல துடி துடித்து விடுவார்.

RBI நோட்டில் காந்தி சிரிப்பதே மார்வாரிகளை பார்த்துத்தான்.

அந்தக்காலம், கோவையில் பஞ்சாலைகள் படுத்துக்கொண்ட காலம்.

கோவையில் லேபர் யூனியன் பிரச்சனைகள், நூல் விலை ஏற்றம், பருத்தியில் வெள்ளைக்கார புழு, உலக சந்தை விரிவாக்கம் என்று நாளா புறமும் நூல் ஆலைகளை நெருக்கிக்கொண்டு இருந்த காலம்.

பெரிய பெரிய நகை கடைகளில் மில் ஓனர் மனைவிகளின் கார்கள் பார்க் செய்யாமல் இருந்த வெற்றிடத்தில் பூக்காரிகள் கடை விரிந்து இருந்தார்கள்.

பாடிட்டியாலா ஸ்டைல் சுடிதார்கள் அப்போதுதான் கோவைக்கு வந்து இருந்தது.

தைக்கக் கொடுத்த மில் ஓனர் மனைவிகளின் கார் ஓட்டுநர்கள், தைத்த சுடிதாரை வந்து வாங்காமல் மில்லில் எடுபிடி வேலை பார்த்த காலம் அது.

சுமார் 50% பருத்திக்காடுகளை பிளாட் போட்டு விற்றுக்கொண்டு இருந்தார்கள்.

 

படிக்காத இந்த மார்வாரிக்கு எதுவுமே புடிபடவில்லை

சந்தை எப்படி நகர்கிறது என்றே தெரியாத காலம்.

நூல் எது, நூடுல்ஸ் எது என்று தெரியாமல் பஞ்சு வியாபாரிகள் பானி பூரி கடையில் குழுமினார்கள்.

முதல் உலகப் போரை அடுத்து இந்தியாவில் ஆங்கிலேயர்களை வாணிபத்தில் தோற்கடித்தவர்கள் இரண்டு பேர்கள்.

ஒருவர், தனி ஆளாகக் கப்பல் ஒட்டிய தமிழன்.

அடுத்து மார்வாரிகள்.

 

ஜூட் எனும் சணல் வியாபாரத்தில் ஆங்கிலேயர்களை மண்டியிட்டுக் கெஞ்ச வைத்தவர்கள் இந்த டேக்கா கொடுக்கும் மார்வாரிகள்.

ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் படித்து வந்த பிசினஸ் புலிகளின் பாட புத்தகத்தின் காகிதத்தை கிழித்து, தன்  காதை நோண்டிக்கொண்டே அவர்களை வென்றவர்கள் மார்வாரிகள்.

1950 க்கு மேல் சக்கரையிலும், பருத்தியிலும் உள்ளே நுழைந்தார்கள்.

அடுத்த 40 ஆண்டுகளுக்கு இவர்கள் ராஜ்ஜியம்தான் கொடி கட்டி பறந்தது.

 

ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை.

 

ஜல்தி ஆவோ…Yarn சப்ளையர் வெயிட்டிங் …

ஜன்னலில் அந்தக் குரல் கேட்டதும் விழித்துக்கொண்டார் பூர்ணிமா அகர்வால்.

 

கதைப்படி அவர் பெயர் இனி சேட்டம்மா. கதாநாயகியின் அம்மா.

இரண்டு நாட்களாக ரயில் ராஜதானில் இருந்து ஆடி, ஆடி வந்து சேர்ந்ததின் களைப்பு அவர் முடிகளில் தெரிந்தது.

மீண்டும், ஜல்தி ஆவோ…Yarn சப்ளையர் வெயிட்டிங் …என்ற தர்மேஷ் அகர்வாலின் குரலில் தெரிந்த பயம் இன்னும் நிலைமை வீட்டில் மாறவில்லை என்பதை சேட்டம்மாவிற்கு புரிய வைத்தது.

தர்மேஷ் அகர்வாலின் எண்ணம் முழுவதும் அன்று காலை சப்ளை செய்ய வேண்டிய நூலின் மீதே இருந்தது.

 

ஆனால், சுமார் 28 வருடங்களுக்கு முன் இதே தர்மேஷ் தன் தாய் தந்தையாருடன் பிகானீர்க்கு பெண் பார்க்க வரும் போது அந்தக் குரலில் இந்தப் பயம் இல்லை.

கோவையில், தர்மேஷின் அப்பா மிகப் பெரிய நூல் வியாபாரியாக இருந்தார்.

கூடவே லெஹன்கா மற்றும் நூல் புடவையையும் whole sale பிசினஸ் செய்து வந்தார்.

அவரை நம்பி கல்யாணம் செய்து கொடுக்க சேட்டம்மாவின் தந்தை தயங்கவே இல்லை.

காரணம், மார்வாரிகள் வாணிபத்தில் தோற்றதாய் சரித்திரம் இல்லை…

 

தந்தையும், ஊர் பெரியவர்களும் கிராமத்தில் ஒரு பொது திண்ணையில் அமர்ந்து இருந்தார்கள்.

ராஜபுத்திரர்களுக்குத் திருமண சடங்கு என்பது ஒரு மிகப் பெரிய விழா.

சுமார் ஒரு மாதம் ஊரே கலை கட்டும்.

பிகானீரில்தான் இந்தியாவின் தார் பாலைவனம் இருக்கிறது.

பாலைவனத்தில் வெப்பக் காற்று தினமும் ஓயாமல் இரவு முழுவதும்  வீசும்.

கம்பு மட்டுமே பெரும்பாலும் விளையும்.

அதுவும் எல்லா இடங்களிலும் அல்ல.

பின் எப்படி இங்குப் பணக்கார ராஜபுத்திரர்கள் தோன்றினார்கள்?

இந்தக் கதையை பின்னால் பார்ப்போம்.

இப்போது பூர்ணிமாதான் focus.

 

பூர்ணிமாவிற்குத் தந்தை மட்டுமே. தந்தை ஒரு  பரம்பரை பணக்காரர்.

பெயர் சித்தரஞ்சன். வீட்டில் மொத்தம் 12 மார்வாரி குதிரைகள் இருந்தன.

பிக்கானீர் பாலைவனத்தில் ஒரு பௌர்ணமி நாள் அன்று சித்தரஞ்சன் எனும் ராஜபுத்திரனுக்கு மகளாக பிறந்தார் பூர்ணிமா.

பாலைவனத்தில் பௌர்ணமி என்பது பொக்கிஷம் போல.

கிராமமே, வீட்டை விட்டு ஊருக்கு வெளியில் இருக்கும் பாலைவனம் நோக்கி சாயும் காலமே நடக்க ஆரம்பிப்பார்கள்.

மார்வாரி குதிரைகளில் இளசுகள், காதில் கடுக்கனுடன் விரட்ட..

பாஜ்ரா ரொட்டியை ஆண்கள் சுடுவார்கள்.

கூடாரத்தில் கட்டி வைக்கப்பட்ட ஒட்டகங்கள் அசை போட ..

கம்பி வாத்தியங்கள் இசைக்க, முழு நிலவு ..வெப்பமான அந்த பாலைவனத்தில் இருந்து உதிக்கும்.

இரவு முழுவதும் கண் உறங்காமல் இசையும் நடனமும் நடந்த அந்த ஓர் இரவில்தான் பூர்ணிமா பிறந்தார்.

 

சிறு வயதிலே தான் தாயைப் பாலைவனத்து வெயிலுக்குப் பலி கொடுத்தார்.

அப்போது அவருக்கு வயது சுமார் ஐந்து இருக்கும்.

ஐந்து வயதுக்குள் குழந்தைக்கு நடக்கும் எதுவுமே ஒருவருக்கு ஞாபகம் இருக்காது.

ஊரில் சொல்வார்கள், தாயைப் போல பிள்ளை என்று.

செக்க செவேர் தோல் நிறம்.

மார்வார்களின் ரத்த நிறம் மஞ்சள்.

 

மஞ்சள் ரத்தம், சிவப்பு தோலில் மின்னுவதால்தான் மொத்த மொகலாய சாம்ராஜ்யமே ராஜ புத்திர ராணிகளிடம் அடிமை பட்டது.

பெர்ஷியா ராணிகளிடம் இல்லாத மாநிறம், தார் பாலைவனத்தில் கம்புக்காட்டில் விளைந்தது.

சுமார் ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் மஞ்சள் மாநிறம் ராஜபுத்திர  மகாராணிகளுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது.

விக்ரம் ரத்தோர் எனும் Un Lucky ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஒருவர் இருந்தார்.

அவரும் மார்வாரிதான்.

அந்த ரத்தோர்கள் ஆண்ட பூமிதான் மார்வார்.

மார்வாரிகளின் குதிரை உலக பிரசித்தம்.

இரண்டு காதுகள் உட்புறம் வளைந்து இருக்கும்.

காரணம், அந்தக் குதிரைகள் அழகிய அரேபிய குதிரையும், மங்கோலிய வலிமை குதிரையும் சேர்ந்து வார்ப்பு எடுக்கப்பட்ட ஹைபிரிட்.

குதிரைகள் சந்தோஷமாக இருக்கும் போது முன்னங்கால் இரண்டையும் தூக்கி காதுகளை வேகமாக நாய் வாலை போன்று ஆட்டும்.

 

அவர்கள் நாடோடிகள்.

இடம் விட்டு இடம் பெயரும் nomads.

 

காலம் நகர்ந்து விட்டது.

மனைவியையும், மகளையும் அழைத்துக் கொண்டு கார் புறப்பட …

தன் அப்பா,  அப்போது தர்மேஷிடம் கேட்ட கேள்வி பூர்ணிமா அகர்வாலின் மனதில் இன்னும் அசரீரியாய் கேட்டது.

என் மக்களை உனக்குக் கட்டித்தருகிறேன்.

நீ உன் பிசினெஸ்ஸை மட்டும் பார்த்துக்கொள்.

என் மகள் உன்னையும் உன் குடும்பத்தையும் பார்த்துக் கொள்வாள்.

உன் சுமையை என் மகளுக்குக் கொடுக்காதே.

உண்மையான மார்வாரியாக என் மகளை பார்த்துக் கொள்வாயா ?

“என்ன சொல்கிறாய்?” என்றார்.

தர்மேஷ் தலை ஆட்ட,

வெளியே ராவணஹதா இசை ராஜஸ்தான் கம்பி வாத்தியம் வாசிக்க ..

மார்வாரி குதிரைகள் இரண்டு காலை தூக்க ..

காதுகள் இரண்டும் ஆட ….

பிக்கானீர் பாலைவனத்து காற்று பூர்ணிமாவின் உடம்பில் பாய்ந்தது.

தாய் வீட்டை விட்டு கணவன் வீட்டுக்கு ஒவ்வொரு முறை வரும் ஒரு பெண்ணின்  இதயத்திலும்  இனம் புரியாத ஏதோ ஒரு தாக்கம் பல நாட்களுக்கு அடங்காமல் துடிக்கும்.

தாய் வீட்டு மண் வாசம் ஏனோ வந்து வருடி செல்லும் …

ஜன்னல் கண்ணாடியை இறக்கினார் பூர்ணிமா.

தார் பாலைவனத்து காற்று வீசியது ..

கார் அர்ச்சனா பேக்கிரியை தாண்டிச் சென்றது ..

பூர்ணிமாவிற்கு மீண்டும் ஜெய்ப்பூர் போகவேண்டும் என்று தோன்றியது.

தொடரும்