உலகம் பிம்பங்களை நம்பும் உலகம்.

அதற்காக எல்லாமே குத்து மதிப்பாக இருக்கும் என்று அர்த்தமில்லை.

உலகத்தில் எல்லாமே ஏதோ ஒரு கணக்கில்தான் இயங்குகிறது.

எப்படி என்கிறீர்களா ? சொல்கிறேன் ….

 

நான் வரைந்த முதல் படம் “பரிசுத்த ஆவி” என்றும், முதல் முகம் ஜூஹி சாவ்லாவின் முகம் என்றும் உங்களுக்கு அறிமுகம் செய்தேன்.

எப்படி ஒருவனால் முதல் முகமே இவ்வளவு perfection னுடன் ஓவியமாக வரையமுடியும் என்று ஒரு கணமாவது யோசித்தீர்களா?

பெரும்பாலும், இருக்காது. அப்படியே யோசித்து இருந்தாலும் அதைக் கேட்கமாட்டோம்.

அதற்குக் காரணம் இருக்கிறது.

 

உண்மையில், நான் உருப்படியாக வரைந்த முதல் ஓவியம், நீங்கள் பார்க்கும் இந்தக் குரங்குதான்.

குரங்கை வரைந்துவிட்டு ஏன் ஜூஹி சாவ்லா என்று ஏன் பொய் சொன்னாய் என்று நீங்கள் கேட்கலாம்.

நான் முகம் என்று சொன்னேனே ஒழிய, முதல் மனித முகம் என்று சொல்லவில்லை.

முதல் ஓவியம் பரிசுத்த ஆவி என்றேனே ஒழிய முதல் உருப்படியான ஓவியம் என்று சொல்லவில்லை.

உண்மை இல்லாததிற்கும், உண்மைக்கும் இடையே இருப்பதுதான் பிம்பம்.

 

இது நம் Resume வில் முதல் வரியிலேயே கொட்டை எழுத்தில் ” I have 10+ years of experience” என்று ஆரம்பிப்போம்.

இதுதான் பிம்பம். உண்மை இல்லாததிற்கும், உண்மைக்கும் இடையே இருப்பது.

அது உண்மையாகவும் இருக்கலாம். உண்மை இல்லாமலும் இருக்கலாம்.

அதை ஒருவரை நம்ப வைத்துவிட்டால் அவரின் ” பிம்பிபைட்” (Bimbified)

 

அதைப்போல், ஜூஹி சால்வலா இந்தக் கதையின் Resume இன்ட்ரோ பிட்.

காரணம், ஒரு அழகான சேட்டு பொண்ணு ஹீரோயினாக வரும் கதையின் ஹீரோ ஒரு சொறி பிடித்த குரங்கை வரைந்தவன் என்று introduction கொடுத்துக் கதை சொன்னால் அது சேட்டு பொண்ணுக்கு செட் ஆகாது.

அதுவே, அவன் அழகான ஜூஹியை வரைந்தவன் என்றால் …

இந்தளவுக்கு இந்தக் கதையின் ஹீரோ ஜூஹியை அழகாக வரைந்து இருந்தால் சேட்டு பொண்ணை எவ்வளவு அழகாக வரைந்து இருப்பான் என்று உங்கள் மனம் நம்பும்.

ஆக, உங்களை நம்ப வைத்தேன். இந்த நம்பிக்கைதான் பிம்பம்.

We don’t write…We draw Resume for the Job Description.

காரணம், இந்த உலகம் பிம்பங்களை நம்பும் உலகம்.

 

இந்தக் கதையில் ஏன் திடீர் என்று குரங்கு வந்தது என்று நினைக்காதீர்கள்.

இந்தக் குரங்கும் இந்தக் கதையின் ஒரு முக்கிய கதாப்பாத்திரம்தான்.

உண்மையில், முதுகையும் முகத்தையும் நான் வரைந்து தோற்ற போது எனக்கு உதவியது இந்தக் குரங்குதான்.

முதலில் ஆரம்பித்தது முதுகுதான். முதல் மனித முகம் ஜூஹிதான்.

முதுகு எனும் ஆரம்பத்திற்கும் அழகான முகம் எனும் வெற்றிக்கும் இடையே இந்தக் குரங்குதான் முயற்சி.
குரங்கு நன்றாக வரும் வரை வரைந்தால் விடா முயற்சி.

முயற்சிகள் எனும் குரங்குகள் என்றும் பரிசுத்த ஆவியின் அட்டகாச முதுகைப் போலவும், அழகாக ஜூலிசாவ்லாவின் முகத்தைப்போலவும் மின்னுவதில்லை.
பல சமயம் கோர முகத்துடன் பல் இளிக்கத்தான் செய்யும். இருந்தாலும் முயலாமல் இருக்கக் கூடாது.

If you want something badly enough, make an attempt.
If you want to paint, get a brush and do it.
If you want to sing, sing.
A lot of people get scared.
They’re afraid to fail.
Take that word out of your vocabulary.
You don’t “fail.” You’ve “tried your best.”

இதை நான் சொல்லவில்லை. சொன்னவர் …
ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கதாநாயகி ஜேன் சிமோர்.
இவர் வேறு யாரும் இல்லை.
காந்தி படத்தை இயக்கிய ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் மருமகள்.

முதலில் அவர் ஆட்டன்பரோவின் மகனை மணந்தார் …நாட் ஒர்த்.
பின் அவர் நண்பனை மணந்தார் ..again …நாட் ஒர்த்…
பின் நண்பனின் நண்பனை மணந்தார் ..again …again …நாட் ஒர்த்…
இப்போது அவரின் நண்பரை மணந்து தி பெஸ்ட் out of four என்று 66 வயதில் முடிவு எழுதிவிட்டார்.

இப்படி, நான் விவாகரத்து செய்தது ஒன்று இரண்டு குரங்குகள் அல்ல, சுமார் 100 இருக்கும்.
பல வித குரங்குகளை, பலவிதமாக வரைந்து வரைந்து கிழித்தேன்.

ஏன் குரங்கில் இருந்து ஆரம்பித்தேன் தெரியுமா?
நீங்கள், ஒரு குரங்கை perfect ஆக வரையத் தெரிந்து கொண்டால் மனிதனை எளிதாக வரைந்து விட முடியும்.
ஒரு மனிதனுக்கும், குரங்கிற்கு 98.8 % ஒற்றுமை உண்டு. ஜீன் அளவில்.
நமக்கும் குரங்கிற்கும் மொத்தத்தில் 1.2% தான் வேறுபாடு.

இந்த 1.2% வேறுபாடு குரங்கில் இருந்து உருவாகப் பல மில்லியன் ஆண்டுகள் மனிதனுக்குத் தேவைப்பட்டது.
குரங்கின் கண்தான் நமக்கும், குரங்கின் மூக்குதான் நமக்கும், குரங்கின் வாய் முதல் குரங்கின் முடி வரை எல்லாமே நம்மிடம் உள்ளது.

Morphology என்றால் தோற்றம்.
பின் ஏன் நாம் குரங்கை போல் இல்லை என்று நீங்கள் கேட்கலாம்.

வேறுபாடு வெறும் 1.2 % தான்.
அதுவும் அதன் நீளம் அகலத்தில் மட்டுமே.
ஒரு குரங்கை படுக்கப் போட்டு நீட்ட வேண்டிய இடத்தில் நீட்டி, சுருக்க வேண்டிய இடத்தில் சுருக்கினால் போதும்.
மனிதன் ரெடி.

நீங்கள் எத்தனையோ முறை உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து இருப்பீர்கள்.
இன்று உங்கள் முகத்தை வேறு மாதிரி பார்க்க கற்றுக் கொடுக்கிறேன்..

உடனே இந்தக் கதையை எடுத்துக்கொண்டு கண்ணாடி முன் சென்று நில்லுங்கள்.
கையில் ஸ்கேல் அல்லது தலை வாரும் சீப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.

அளக்க ஆரம்பிங்கள்..

உங்கள் காது ஆரம்பிக்கும் இடத்திற்கு நேராக உங்கள் புருவம் இருக்கும்.
உங்கள் மூக்கு முடியும் இடத்தில் காது முடியும்.

கண்ணின் கருவிழியின் மையப் புள்ளி உங்கள் உதடுகளின் விளிம்பைத் தொடும்.
இரண்டு கண்கள் உடப்புறம் எங்கு ஆரம்பிக்கிறதோ அங்குதான் உங்கள் டபரா மூக்கு முடியும்.

இது வெறும் இரண்டு கணக்குதான்.
இப்படி உங்கள் முகத்தை 28 செவங்கங்களும், 12 சதுரங்களும், 8 ஓவல் கோடுகளும், 32 முக்கோணங்களும் சேர்ந்துதான் உருவாக்குகின்றன.

Dominant Gene என்று ஒன்று உண்டு.
அப்பாவுக்கு டபரா மூக்கு Dominant morphology gene என்றால் அவருக்குப் பிறக்கும் பெண்ணின் மூக்கில் அந்த டபரா பெயிண்ட் அடித்து இருக்கும்.
அம்மாவின் கண்கள் Dominant morphology gene கட்லா மீனைப் போன்று இருந்தால் பிறக்கும் பொண்ணுக்கு கண்கள் கருவாடாகப் போக சான்ஸ் இல்லை.
இதில் ஹைபிரிட், லொட்டு லொசுக்கு என்று ஆயிரம் இருந்தாலும் நான் மேல் சொன்ன கணக்கு கட்லா மீனுக்கும் பொருந்தும். டபரா மூக்கிற்கும் பொருந்தும்.

அதற்காக எல்லாமே குத்து மதிப்பாக இருக்கும் என்று அர்த்தமில்லை.
உலகத்தில் எல்லாமே ஏதோ ஒரு கணக்கில்தான் இயங்குகிறது.

நம் முகமே, கடவுள் எனும் பிதாகரஸ் வரைந்த perfect கோடுகளால் ஆனது.
நமக்குத் தேவை இரண்டு அளவுகள் மட்டுமே.

One Reference. Two Objects.

ஒன்றை வைத்து இன்னொன்று, அதை வைத்து இன்னொன்று என்று பிடித்து முழு உருவத்தையும் வரைந்து விடலாம்.
பிளாஸ்டிக் சர்ஜன்கள் இதைத்தான் 5 வருட கோர்ஸில் படிக்கிறார்கள்.
இந்த உலகில் …இத்தாலிய ஓவியன், சிற்பி, மறு மலர்ச்சி கவிஞன்  “மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி” கண்டுபித்ததை விட அதிகமாக யாரும் உடற் கூறுவியலை ஆராய்ந்ததில்லை

இந்த  உடற் கூறுவியல்  வித்தைத் தெரிந்தால் நமக்கு இது பல வகையில் உதவும்…

Skytrain ல் அமர்ந்து இருக்கும் பெண்ணின் பின் மண்டையும், ஒத்த காதும் தெரிந்தால் போதும்..
சுமார் ஒரு நிமிடத்தில் முகத்தை மனதில் ஸ்கெட்ச் போட முடியும்.
அது அட்டு பிகரா, சூப்பர் பிகரா என்பதைக் காதும் மண்டையுமே சொல்லிவிடும்.

இந்தக் குரங்குதான், இந்தக் கணக்கை எனக்குச் சொல்லிக்கொடுத்த எசமான்.
இந்தக் குரங்கும் இந்தக் கதையில் ஒரு முக்கிய கேரக்டர்…ஏன் என்றால் …
இந்த குரங்கை வைத்துத்தான் முதன் முதலில் சேட்டு பெண் எவ்வளவு அழகாக இருப்பார் என்பதை ஜட்ஜ் செய்தேன்.

பின்னால் வர இருக்கும் அந்த முதல் ஹீரோயின் இன்ட்ரோ காட்சியில் …

சேட்டு பெண் …மஞ்சள் நிற சுடிதார் அணிந்து கொண்டு …
ஸ்கூட்டியை ஓடிக்கொண்டு ஒரு மார்வாடி தெரு முனையில் போய்க்கொண்டு இருந்தார் ..

பின்னால் இருந்து மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது …
ஒரு பக்கம் தலை முடி காற்றில் பறந்தது ..
இன்னொரு பக்கம் ,
பெரிய, வட்ட வடிவ  மார்வாடி கம்மல் ஒரு காதில் ஆட …

அப்போது என் காதுகளில் இதே குரங்கு சொன்னது
ஒரு தலை, ஒரு காது…
Two Objects. One Reference.
பட் பட் பட் …
மனம் வரைந்தது

தொடரும்