நாம் டீசெண்டா வாழ உடனே கத்துக்கலாம்.
காரணம், இந்த process எல்லாமே நம்ம கையில் இருக்கு.
ஆனா தெரு பொறுக்கியா மாற மொத்தம் இரண்டு வேண்டும்.
1. நாம் பொறுக்கியா மாற இன்னொருத்தர் உதவணும்.
2. நாம பொறுக்க ஒரு தெரு வேண்டும்.
இது ரெண்டும் யாருக்கு அமையுதோ அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
உடனே, தெரு பொறுக்கினா கெட்ட வார்த்தைன்னு நினைக்க வேண்டாம்.
வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும்னு தெரியாம ஒரு Un Disclosed டெஸ்டினேஷன் தேடி, தினம் ஒரே தெருவில் திரும்பத்திரும்ப அதைத் தேடுபவனே தெருப் பொறுக்கி.
இப்படி தெருவா தெருவா தேடி, அதை ஒரு மரத்துக்கு கீழ் கண்டுபிடித்தா அவன் ஞானி.
கிரேக்க, தத்துவ ஞானிகளான பிளாட்டோ, அரிஸ்டாட்டில், பிதாகரஸ் எல்லாமே ஒரு காலத்தில் தெரு பொறுக்கியாஇருந்தவங்கதான்.
இவங்க ஏதென்ஸ் நகர வீதிகளில் பொறுக்காத நாள் இல்லை.
இப்படிப் பொறுக்கி பொறுக்கி கடைசியில் மரத்துக்கு கீழ் வந்து உட்காந்து மத்தவங்களுக்கு பொறுக்க கத்துக்ககொடுத்தாங்க.
புத்தர் நேரடியா மரத்துக்கு கீழ் உடகாந்தவர். சிலர் தெரு, ஊரு எல்லாம் சுத்தியை பிறகுதான் வந்து மரத்துக்கு கீழஉட்க்காருவாங்க.
சுவான்சாங் போன்றவர்கள் உலக மகா பொறுக்கி.
சரி, சேட்டு பொண்ணுக்கும் சுவான்சாங்க்கும் என்ன சம்பந்தம்னு கேட்குறீங்களா?
இருக்கு …
அப்ப, நான் மாஸ்டர்ஸ் படித்துக்கொண்டு இருந்த நேரம்.
கேப்பாமாரியா இருந்த நான் தெரு பொறுக்கியா மாறிக்கொண்டு இருந்த transformation காலம்.
Research லைப் ஏனோ பிடிக்கவில்லை.
நாலு சுவத்துக்குள்ள எண்ணத்த வாழ்க்கை முழுவதும் தேடுவது என்ற அலுப்பு வரத் தொடங்கிய காலம்.
டெய்லி லேப்க்கு போக வேண்டியது. எதையாவது நோண்ட வேண்டியது.
எப்படியும் இரண்டு வருஷத்தில் மாஸ்டர் டிகிரி முடிந்து விடும்.
ஆல்ரெடி 6 வருஷம் காலி.
மாஸ்டர்ஸ், முடிச்சா வாழ்க்கை முடியாது அதுக்கு மேல மூணு நாலு வருஷம் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சிலதாடி வைத்த Ph.D சீனியர்ஸ் சொறிந்து கொண்டே பயம் காட்டினார்கள்.
ஒரு நாள் சண்டே Ghee Rice வித் சிக்கன் சாப்பிட்டுவிட்டு….நாம் ஏன் இந்த Research field விட்டு மாறி வேற ஏதாவது உடனேவேலைக் கிடைக்கும் ஒரு field க்கு மாற கூடாதுனு யோசித்தேன்.
எதோ ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை .., பல நாள் யோசிச்சு யோசிச்சு ஒரு நாள் நான் கண்ணாடி முன் நின்னுபார்க்கும் போதுதான் அதுக்கு உண்டான பலன் தெரிந்தது.
தாடி முளைத்து இருந்தது.
ஆஹா..
இளம் வயதில் முதலில் வளரும் தாடியை செறிவது பிறக்கும் கன்றுக்குட்டியைத் தாய் பசு நாக்கால் வருடிவருடிக்கொடுப்பது போன்ற சுகமானது.
சரி, விடுங்கள் ..அதை அணுபவித்தவன்னுக்குத்தான் தெரியும்.
தாடி வளர்ந்தாச்சு ..Perfect. ஒரு தெருப் பொறுக்கியா மாற முதல் தகுதி அவனுக்குத் தாடி வேண்டும்.
இதை பிளாட்டோவே சொல்லி இருக்கிறார்…
நாம் பார்க்கும் உலகம் வேறு, மற்றவர்களால் அறியப்படும் உலகம் வேறு.
நாம் வித்தியாசப்பட்டவர்கள் என்பதை உலகிற்குக் காட்ட எல்லாத் தெரு பொறுக்கிகளும் முதலில் வளர்த்தது தாடிதான்.
தாடி வளர்ந்துவிட்டது.
வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும்.
எனக்காக இல்லை என்றாலும் இந்தத் தாடிக்காவது செய்ய வேண்டும்.
அதனால், ஏன் நாம் வரையக் கூடாது என்று யோசித்தேன்.
ஏன் வரைய வேண்டும் என்று யோசித்தேன் என்று இன்று வரை எனக்குத் தெரியாது.
சத்தியமாகச் சொல்கிறேன் இந்த வயது வரை நான் என் வாழ்க்கையில் எந்த ஒரு படத்தையும் வரைந்தது கிடையாது.
சிறு வயது முதல், இந்த வயது வரை எந்த drawing மாஸ்டர்ரிடம் கூட ஓவியம் படித்தது இல்லை.
ஸ்கூலில் Drwaing கிளாசில் 6 வந்து வரைந்ததோடு சரி.
ஏன் எந்த ஓவியப் போட்டியிலும் சரி, வீட்டிலும் சரி ஓவியம் வரைந்தது இல்லை.
படத்தில், என் பின்னால் இருக்கும் ஓவியம் நான் தாடி வளர்ந்து மூன்று மாதம் கழித்து வரைந்தது.
எதோ ஒரு நாள் போய் டவுன்ஹாலில் பேப்பர் போர்ட் வாங்கி வந்து ஒரே படத்தை 25 முறைக்கு மேல் வரைந்து வரைந்துகிழித்து பின் ஓரளவு சரியாக வந்தவுடன் அதை ஒரு frame போட்டு மாட்டி வைத்து எடுத்த படம் இது.
நீங்க கேட்கலாம்..முதல் படமே இப்படி ஒரு செக்சி போஸ்ஸா என்று.
தப்பு என்னிடம் இல்லை.
நான் அந்த பொண்ணோட முகம் வரையத்தான் ஆசைப்பட்டேன்.
எனக்கு வரைய தெரியல.
அந்தம்மா முதுகு ஈஸியா இருந்தது.
அதான் அதை வரைந்தேன்.
இந்தப் படத்தை வரைவதற்குள் நான் பட்ட பாடு இருக்கே..அத்தோட நிறுத்தி இருக்கலாம்.
அப்படி நிறுத்த என் தாடி விடல.
ஆனா அதை அன்னைக்கே நிறுத்தி இருந்தா இன்னைக்கு இந்தத் தொடரை எழுதி இருக்க முடியாது.
இந்தத் தாடி வளர வளர அந்தப் பெண் ஓவியம் மெதுவாகத் திரும்பி அமர்ந்தது.
ஒரு முகம் எப்படி வரைவது என்று கற்றுக்கொண்டேன்.
முதலில் வரைந்த அந்த பெண் முகம் எது??
தொடரும்
Leave A Comment