நேற்று தபலா முதல் class க்கு போனேன். Master கேட்டார். எதுக்காக தபலா கத்துக்க வந்து இருக்கே. அதுவும் இந்த வயசுல. உன் objective என்னனு கேட்டார்.
சார், நான் “அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் வாசிக்கனும்” என்றேன். இது என் வாழ் நாள் லட்சியம். 
அப்படின்னா என்னனு கேட்டார்.
சார், “அது சின்ன தம்பி படத்தில் வரும் தபலா பாட்டு” என்றேன்.
அது என்ன பாட்டு போட்டு காமி என்றார்.
YouTube ல படத்தை போட்டு அந்த பாட்டு காண்பிச்சேன். ஹ்ம்ம்.. நல்ல பாட்டு … என்றார். சார் சும்மா இல்ல.. இது சூப்பர் டூப்பர் படம், எல்லா பாட்டும் சூப்பர் ஹிட். கதை கூடவே பாட்டு எப்படி மூவ் ஆகுதுனு பாருங்க சார் என்றேன்.
எங்க கொஞ்சம் போடு என்றார். முதலில் கொஞ்சம் போட படம் சூடு பிடிக்க.. wife கிட்ட தம்பிக்கு ஒரு சூடா டீ போடு என்றார்.

Tea சூட்டுடன் படம் ஓடிக் கொண்டு இருக்கும் போது “சார்” னு ஒரு பெரிய சவுண்டு.
ஏன் படம் பாக்கும் போது கத்துற என்றார். Disturbed என்றார்.
“நான் இல்லை சார். அடுத்த student. ஆல்ரெடி ஒரு மணி நேரம் முடிந்து, பதினைந்து நிமிஷமா அந்த student wait செய்றார்” என்றேன்.
கண் கலங்கி கொண்டே சொன்னார்…”சாரிப்பா…. சரி சரி மீதி அடுத்த class ல் பார்ப்போம். பாவம்பா அந்த சின்ன தம்பி. திக்கி திக்கி பேசும் குழந்தைப்பா..தாலி வேற குஷ்பு கழுத்தில் ஏறிடுச்சு..அவனுக்கு climax ல ஒண்ணும் ஆகக் கூடாதுப்பா. ” என்றார்.
இந்த லட்டணத்தில் class போகுது. பெரிய மனுஷன்னு நினைச்சு கத்துக்கப் போனா மாஸ்டர் சின்ன தம்பி படம் பார்கிறார்.
விளங்கின மாதிரிதான்.
தன்னன்னே தன்னன்னே ! 
________________________________

Read more : http://bit.ly/2xipVYp