கனடா வந்த புதிதில் பல ஷாக்குகள் நடந்தன…அதில் முதல் shock… bike.
பைக் என்றால் இங்கே சைக்கிள் என்றார்கள். அடேய், அப்ப நம்மூர் பைக்கை என்ன சொல்வீங்க என்றால் மோட்டர் சைக்கிள் என்றார்கள்.
மோட்டர் வச்ச சைக்கிள் மோட்டர் சைக்கிள் என்றால் மோட்டர் இல்லாத சைக்கிள் வெரும் சைக்கிள் அல்லது சைக்கிள்தானே. கை வச்ச பனியனை வெறும் பனியன்னு சொன்னா கை வைக்காத பனியன் முண்டா பனியன் தானே?
சரி அடுத்ததுத்துக்கு போவோம்..
Lift.
நம்ம ஊரில் நம்மை தூக்கினாலும், இறக்கினாலும் அதுக்கு பேர் Lift. இங்க வந்து அதுக்கு என்ன பெயர்னு கேட்டா எலிவேட்டர்.
Elevation என்றால் ஏற்றம் மட்டும்தான். Height above given level. ஆனா lift என்றால் தூக்கு. நம்மை தூக்கினாதானே ஏத்தவோ இறக்கவோ முடியும்? முட்டா பசங்க.
சரி அடுத்த ஐட்டம் சலூன்.
நம்ம ஊரில் சலூனுக்கு முடி வெட்டத்தான் போவோம். இங்க ஒரு முறை சலூனுக்கு போனா ஒரு பொம்பள புள்ள தண்ணி அடிச்சுட்டு இருந்துச்சு. நம்ம ஊரில் சலூனில் தலையில் தண்ணி அடிப்பாங்க. இங்க டேபில் போட்டு தண்ணி அடிக்கிறாங்க. யாரை கேட்டு மாத்தினாங்க?
சரி அடுத்த shock… தி worst
honey..
நம்ம ஊரில் காதி கிராம்மில் வாங்கிய மலைத் தேனைத்தான் honey என்று சொல்வோம். இப்படித்தான் என் இங்கிலீஷ் வாத்தியார் நேசமனி சொல்லிக் கொடுத்தார். இங்க வந்தா honey என்றால் பொண்ட்டாடியாம். அப்ப புருஷன் என்றால் என்ன விளக்கு எண்ணெய்யா? I mean …castor oil.
பேர் British கொலம்பியா…
எல்லாமே தப்பு தப்பா புரிஞ்சி வச்சு இருக்கானுவ…
இங்க money யை தவிற எல்லாமே தப்பு.
Not only in BC. This confusion in Canada wide.
Idhu paravaille. Enakku Tamil to Tamil translation theva pattadhu Toronto le.
Adhu oru periyya comedy.
Superb ji
நம்ம ஊரில் எனக்கு தெரிந்து இரண்டே gas தான். ஒண்ணு gas cylinder. அடுத்தது.. அதில் செய்து சாப்பிட்டு நாம் generate செய்வது. இங்க gas 3 கிரேட்டில் கிடைக்குது. நம்ம ஊரில் அவன் சாப்பிட்ட சாப்பாடு பொருத்து அதன் quality மாறும்.
Ha ha ha. What a nice comical write up of the facts in Canada. I’m sure everyone that has come from India would have experienced this at some point.
Good documentatio !!!!! சிந்தனையை தூண்டும், அறிவான பதிவு. அப்படியே அந்த rest room, wash room, toilet controversy பற்றி….
நம்ம ஊரில் எதுக்கு அவசரமா போவோமோ அது இங்க மெதுவா rest எடுக்க போவாங்க: restroom
Differences in British and American English.
அது இருக்கட்டும், நீங்க யாரையும் தேனேன்னு சொன்னதில்லையா? ????
No.