இது மிக முக்கியமான வரலாற்று பதிவு.
யோகி ஆத்யனாத் தாஜ் மஹலை இந்தியாவின் tourist list ல் இருந்து எடுத்தது ஒரு வரலாற்று பிழை. அது just like that நடக்கவில்லை.
ஏதோ ஒரு காரணி இதற்கு முன் தாஜ் மஹலை ஒட்டி நடந்து இருக்க வேண்டும். அந்த வரலாற்று காரணி பற்றிய பதிவுதான் இது…
ஆப்கான் பாகியான் புத்தர் தாலிபான்களால் அழிக்கப்பட்டது முதல் பாஸ்னியா ஹெர்சகோவின்யாவில் உள்ள மோச்டிசார் நினைவு சின்னம் போரினால் அழிக்கப்பட்ட்டது வரை வரலாற்றில் ஏதோ ஒரு காரணி ஒரு உலக கலை அம்சம் பொருந்திய வரலாற்று நினைவு சின்னங்களை அழிக்க காரணமாக இருந்து உள்ளன.
கஜினியின் சோம்னாத் ஆலய அழிப்பு, பக்தியார் கில்ஜியின் நாளந்தா பல்கலைகழக அழிப்பு போன்றவற்றில் ஆரம்பித்து போன வருடம் சிரியாவில் அழிக்கப்பட்ட பல்மைரா வரை எத்தனையோ அழிவுகளை இதற்கு உதாரண காரணிகளாக சொல்லலாம்.
அதைப் போல் தாஜ் மஹலுக்கும் இப்படி ஒரு அபாய நிகழ்வு நடந்தாலும் நடக்கும் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னே எச்சரித்து இருந்தார்கள்.
அந்த வருடம் 1999.
காரணம் இதுதான்..
பாரதிராஜாதான் இந்த நூற்றாண்டில் தாஜ் மஹலுக்கு முதல் சங்கு ஊதியவர். இதைப் படிக்கும் போது உங்களுக்கே இது அதிர்ச்சியாகவும் இருக்கலாம்.
மடிந்து கிடந்த அவர் மார்கெட்டை நிமிர்த்தவும், தன் மகனுக்கு ஒரு சினிமா பிரேக் கொடுக்கவும் ஒரு நவீன காதல் காவியம் படைக்கிறேன் என்ற அந்த கால நினைப்பில், நிகழ் கால மசாலாவை தினித்து ஒரு கழனிக்காட்டு கடலை பர்ப்பியை காதல் காவியமாய் எடுத்தார்.
என்னமோ எடுத்து போகட்டும். அதற்கு ஏன் உலக காதல் சின்னமாய் இருக்கும் “தாஜ்மஹால்” என்று பெயர் வைத்து அந்த சின்னத்துக்கே சங்கு ஊதினார் என்று வரலற்று ஆசிரியர்கள் அன்றே கேள்வி எழுப்பினார்கள். இன்று சமூக வளை தளத்தில் தாஜ் மஹலுக்காக கொதித்தது போல் ஒருவர் கூட அன்று நடந்த ஒரு வரலாற்று அழிப்பு நிகழ்வை கேள்வி கேட்கவில்லை என்பதும் ஒரு பெரும் ஆச்சிரியம்தான்.
அந்த படத்தை பார்த்த இந்தியாவின் முதுபெரும் வரலாற்று ஆசிரியர் “மான்கன் நிதின் சதுர்வேதி” தியேட்டரில் அந்த படத்தில் மனோஜ் பாடும் “ஏச்சி எலுமிச்சி” என்ற பாடல் வந்தவுடன் தியேட்டரை விட்டு வெளியே வந்து எழுதிய புத்தகமாம் ” தி final days of தாஜ் மஹல் arriving ” என்ற புத்தகத்தில் முன்னுரையை இப்படித்தான் ஆரம்பித்தார்…
“இந்த பூமியின் வரலாற்றிலே முதல் முறையாக ஒரு உலக அதிசியத்தை சினிமா எடுத்து அந்த சின்னத்தையே அழிவு பாதைக்கு எடுத்து சென்ற நிகழ்வு நம் கண் முன்னே நடக்கிறது”
இனி படங்களுக்கு உலக அதிசியங்களின் பெயரை வைக்க அரசு அனுமதிக்க கூடாது என்ற பரிந்துரையை இந்திய ஜனாதிபதிக்கு எழுவிட்டு அன்று இரவே மறைந்து விட்டார்.
அந்த ஈச்சி எலுமிச்சி ..
மான்கன் நிதின் குறிப்பிட்ட அந்த பாடல் இதுதான்..
https://youtu.be/OEqvQdtXO0w
????????????
அவர் சொன்னதர்க்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்
எல்லாவற்றையுமே சீரியசா படிச்சுட்டு கேள்வி கேட்டா எப்படி சார் என்னிடம் பதில் இருக்கும்?
ஆஸ்திரேலியாவில் அதானிக்கு மோடி வாங்கி கொடுத்த நிலக்கரி சுரங்கம் பற்றிய ஊழல், இப்போது வெளிநாட்டு ஊடகங்களில் அம்பலமாகியிருக்கிறது. உடனே அதை மறைக்க இங்கு தாஜ்மஹால் சர்ச்சையை உருவாக்கி கவனத்தை திசை திருப்பி விட்டார்கள். https://amp.theguard ian.com/world/2017/aug/16/adani-mining-giant-faces-financial-claims-as-it-bids-for-australian-coal-loan