இந்திய அப்பா அம்மாக்களிடம் ஒரு பழக்கம் இருக்கும். அதாவது, அவர்கள் பையனோ, பொண்ணோ அதுங்க பாட்டுக்கு ஏதாவது ஒரு முயீஜிக் class க்கு போயிட்டு இருக்கும். அது பாட்டாவோ, drums, piano னு எதுவேனாலும் இருக்கலாம்.
யாராவது புதுசா வீட்டுக்கு வந்தா.. என் பைய்யன் இந்த class க்கு போயிட்டு இருக்கா, என் பொண்ணு பாட்டு படிச்சுட்டு இருக்கா.. னு முதலில் ஒரு short இண்ட்ரோ இருக்கும்.
அப்புறம் நீங்க கொஞ்சம் அசந்தா…
வா, வந்து அங்குள் ஆன்டிக்கு ஒரு முறை நீ வாசிச்சு காட்டுனு சொல்வாங்க. இல்லை பாட சொல்வாங்க. அதுங்களும் வேற வழி இல்லாம வந்து விருப்பம் இல்லாம கடமைக்கேனு ஒரு சோக டியூன் போடும். டியூன் போடாம முரண்டு புடிச்சாவோ, பாடாம போச்சுன்னவோ ஏன் நான் இவ்வளவு கஷ்ட்டப்பட்டு உன்னை class க்கு அனுப்புறேன்.. என் சின்ன வயசில் எல்லாம் எனக்கு இந்த மாதிரி opportunity கள் இருந்தது உண்டானு நைட் திட்டு விழும்.
இந்த பயம் அந்த குழந்தைகள் வரும் போதே கண்களில் தெரியும்.
இதை ஏன்டா இப்ப எழுதுறனு நீங்க கேட்கலாம். இப்ப சொல்லிட்டேன்… யாராவது எங்க வீட்டுக்கு வந்து தபலா வச்சு இருக்கியே, கிளாசுக்கு எல்லாம் போறியே.. எங்க இந்த அங்குளுக்கும், ஆன்டிக்கும் ஒரு டியூன் வாசினு அதே குழந்தை டார்சர் என்கிட்ட கொடுத்தீங்க ..படுவா ..பிச்சுபுடுவேன் பிச்சி.
Lovely
அப்ப டும் டக்கா வாசிச்சு வீடியோவாவது போடுவீங்களா இல்லையா?
https://www.youtube.com/watch?v=ApsTWYhK-5c
எத்தன க்ளாஸுக்குப் போயிருக்கீங்க? ரொம்ப பில்ட் அப்ஆ இருக்கு?????
இன்னும் போகவே ஆரம்பிக்கல..
அட !
நலந்தானா வாசிப்பீங்களா?
Sridar, we will sure ask you to play.
அந்தப் புறா வாசிக்க வேண்டும் என்றால், இந்த புறா பாட வேண்டும்………… குமார் இதற்கு ஆட வேண்டும் நாங்களெல்லாம் இதைப் பார்த்து ஓ……………. போட வேண்டும்