ஜிஞ்சர் பிரட் துண்டுகள் 3:
(Secretary Bird – தரைப்பருந்து)

தமிழில் பெயர்தான் தாரைப் பருந்து.

ஆனா இந்த பறவையின் ஆங்கில பெயரே ஒரு கிக்கான பெயர்.

Secretary Bird.

சும்மா சொல்லக் கூடாது…

இதன் பெயரை முதலில் ஜோசப்தான் எனக்கு சொன்னார்…

அப்போது ஆப்ரிக்காவில், காலை சுமார் 5.30 மணி இருக்கும் ..

Where..Where ..என்றேன் …

அவர் கை காட்டிய இடத்தில …மங்கலான வெளிச்சத்தில்…

வண்டி மெதுவாக நகர்ந்தது….

ஜோசப் என் ஜீப்பை ஒட்டிக் கொண்டு இருந்தார்.

தூரத்தில் இந்த பறவை ஆடாமல் அசையாமல் நின்று கொண்டு இருந்தது.

சேவலும் இல்லாமல், கௌதாரியும் இல்லாமல் ஒரு அல்லக்கை சைஸ் பறவை அது.

அடுத்த வினாடிகளில் நடக்க தொடங்கியது ….

2010 ல் …

முதன் முதலில் கனடா வந்த புதிதில் ஒரு ஆங்கிலேய லாயர் ஆபீசுக்கு சென்றேன்.

அவருக்கு சுமார் 65 வயது இருக்கும்… டப் கிளாஸ் ஆபீஸ்.

எனக்கு appointment காலை பத்து மணிக்கு.

9.30 க்கே சென்று விட்டேன். Reception லில் ஒரு வயதான ஜெர்மன் பாட்டி.

அந்தம்மா ஜெர்மன் என்பதை அதன் முறைப்பில் இருந்து தெரிந்து கொண்டேன்.

புருவத்தை உயர்த்தி..வெயிட் டில் 10. என்றார்.

சரியாக 10.00 மணிக்கு கடிகாரம் மணி அடிக்கும் முன் லாயர் ஆபிஸின் கதவு திறந்தது.

சுமார் 25 வயது மிக்க ஒரு அழகு தரைப்பருந்து கையில் file உடன் வந்து,

I am Lawyer’s Personal Secretary …கண்களால் வா என்று சைகை காண்பித்தார்.

ஜோசப் கை காட்டிய இடத்தை நோக்கினேன்…

அங்கே தரைப்பருந்து, டொக் டொக் என்று தன் இடுப்பை வளைத்து நெளித்து டிக்கியை ஆட்டி கொண்டு நடந்து சென்றது.

சில வினாடிகளில் கதவு தட்டப்பட்டது.

அங்கு புழு போல் லாயர் நெளிந்து கொண்டு இருந்தார்.

தன் பார்வையால் அதை டொக் என்று கொத்தியது தாரை பருந்து.

———————————————————–

Kingdom: Animalia
Phylum: Chordata
Class: Aves
Order: Accipitriformes
Family: Sagittariidae
Genus: Sagittarius
Species: S. serpentarius
Binomial name
Sagittarius serpentariu
 
 
ஜிஞ்சர் பிரட் துண்டுகள் 
தொடரும்