இந்த உலகம் விசித்திரமானது. 

மனிதர்களும்தான்.

ஒரு நிஜத்தைச் சொல்கிறேன்…

1970 களில் இந்திரா காந்தியை “டுமீல் டுமீல்’ என்று சுட்டு கொன்ற போது சரோஜ் நாராயணசாமிதான், வானொலியில் அழுது கொண்டே இந்திரா காந்தி இறந்ததை செய்தியாக வாசித்தார்.

காலையில் 9.20 க்கு டெல்லியில் அவரை, அவர் இல்லத்தில் வைத்து Peter Alexander von Ustinov என்ற ஆங்கிலேய நடிகர் interview எடுப்பதாக உத்தேசம். ஒரு ஐரிஷ் டாக்குமெண்டரிக்காக இந்த ஏற்பாடு.

அவர், அலுவலகம் சென்று அந்த interview கொடுக்கப் போகும் வழியில் சிங்கனுங்க இரண்டு பேர், கோல்டன் temple பிரச்சனையில் போட்டு தள்ளி விட்டார்கள்.

அங்கேயே அவர் இறந்துவிட்டார். பின் அவரை AIIMS எடுத்துச் சென்று சுமார் மதியம் 2.20 மணிக்கு இறந்துவிட்டதாக ஆல் இந்திய வானொலி அறிவித்தது.

அப்போது எல்லாம் …மதியம் இரண்டு மணிக்கு செய்தி.

முதல் பத்து நிமிடம் ஹிந்தி. அடுத்து பிராந்திய மொழியில் செய்தி வரும்.

2.10 க்கு தமிழ் நாட்டில் எல்லோருக்கும் இந்த செய்தியை  சரோஜ் நாராயண சாமி வானொலியில் அழுது கொண்டே சொன்ன போதுதான் தமிழகமே இந்த செய்தி அறிந்தது.

பின், ஊரே அழுதது.

மேட்டர் இதுதான்… இப்போது யோசித்துப் பார்த்தால்..

1. 9.20 மணிக்கு இறந்த இந்திரா காந்தியின் துக்க செய்தி சுமார் 5 மணி நேரம் கழித்துத்தான் கடைக் கோடி தமிழனுக்குத் தெரிந்தது.
2. எனக்கு இந்திரா காந்தி இறந்து பத்து வருடம் கழித்துத்தான்,  செய்தி ரீடர்  சரோஜ் நாராயணசாமி  ஆண் இல்லை, பெண் என்று தெரிய வந்தது.

கரகர என்று வாய்ஸ் இருந்ததால் எங்கள் கிராமத்தில் அவரை ஆண் என்று டீக்கடைக்காரர் முடிவு செய்து அதையே என்னையும் நம்ப வைத்துவிட்டார்.
சரோஜ் நாராயணசாமி, ஒரு versatile personality. அகில இந்திய வானொலி புதுடில்லி நிலையத்தில், தமிழ், செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்தவர் சரோஜ் நாராயணசாமி.
எழுத்தாளர், விமர்சகர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளர் என்ற பல முகங்களோடு  வாழ்ந்து இறந்தவர்.

அந்த காலத்தில் ..

ஒரு செய்தி டெல்லியில் இருந்து தமிழ் நாடு வந்து சேர 5 மணி நேரம் பிடித்தது இருக்கிறது…
ஒருத்தர் ஆணா இல்லை பெண்ணா என்று கூட தெரிய வாய்ப்பில்லாமல் நாராயண சாமியே செய்தி வாசிக்கும் போது அழுதிட்டார்னு நம்பி ஊரே அழுத காலம் அது…

அப்போது, உலகின் மறு முனையில் உலகம் வேறு மாதிரி இயங்கிக் கொண்டு இருந்தது டீக்கடை காரருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

சூரிய குடும்பத்தை  வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஓர் ஆளில்லா விண்ணுளவி (Space Probe), இந்திரா காந்தி இறக்கும் 7 வருடம் முன்பே வானில் பறந்து கொண்டு இருந்தது.
அதன் பெயர் வாயேஜர் 1. ஏவியது நாசா.

மொத்தம் சுமார் 850kg வெயிட்.
நேற்றோடு இந்தத் தல தளபதிக்கு 40 வருடம் ஆகிறது.
11 பில்லியின் மைல் தொலைவு பயணித்து இன்னமும் ஓடிக்கொண்டு இருக்கிறது.
புளுட்டோனியம் பேட்டரி, இன்னும் 150 வருடம் தங்குமாம்.
இன்னும் 25 வருஷத்துக்கு டேட்டா அனுப்புமாம்.
இது இன்னும் 150 வருடம் பயணித்தாலும் வானொலி waves ஐ துல்லியமாகப் பூமிக்கு அனுப்ப முடியுமாம்.
இத்தனைக்கும் இதன் மெமரி வெறும் 64 kb.
டேட்டா மிகத் துல்லியமாக அனுப்ப ஒரு நாள் ஆகும்.
இருந்தாலும் விட்டு விட்டு வந்து சேர்ந்து விடும்.
இல்லை என்றால் மீண்டும் அடுத்த நாள் முயலும்.
1970 களில் இருந்ததை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு பெட்டி.

கொடுமை என்னவென்றால் இது பயணிக்கும் போது aliens வழியில் மீட் செய்தால் Greetings சொல்ல 55 Languages ல் ரெகார்ட் செய்து இன்னமும் வைத்து இருக்கிறது.
இதை எல்லாம் கோல்டன் ரெகார்ட் என்பார்கள்.
அந்த 55 மொழிகளில் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி அடக்கம். தமிழ் இல்லை. ஏனென்று கேட்காதீர்கள்.

இந்த உலகமே அழிந்தாலும் இந்த வாயேஜருக்கு மரணம் இல்லை.
பாட்டரி காலியாகும் வரை என்கிறார்கள்.

யாருக்காக, ஏன் பயணிக்கிறது என்று அதற்கே தெரியாது?
இதனால் என்ன பயன்? ஏன் இப்படி?
எதற்காக என்று கேள்வி கேட்கும் முன் யோசித்துப் பாருங்கள் …

சரோஜ் நாராயண சாமி ஆணா பெண்ணா என்று தெரியாத உலகில் இதை எல்லாம் யோசித்த ஒரு மூளை இதே உலகில் இருந்தது அல்லவா ?

அதைப் போல் உலகம் வேறு மாதிரி இயங்கும் போது,
சில மனிதர்கள் நிஜ உலகில் தங்கள் பழைய நினைவுகள் மற்றும் டெக்னாலஜி  வைத்துக் கொண்டு 55  விதமான  மொழிகளில் பேசி பேசி வாட்டி எடுப்பார்கள்.
இவர்களுக்கு இப்போது நடக்கும் மாற்றங்கள், அதற்கு எவ்வாறு தங்களையும் தங்கள் அறிவையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற புரிதல் இருக்காது.

இதை அவர்களுக்கு அப்டேட் செய்ய, ஒன்று நீங்கள் அவர்கள் உலகத்துக்குப் பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துக் கொண்டு ஒரு பழைய வானொலி ஒன்றுடன் செல்ல வேண்டும்.
இவர்கள் பேசும் மொழி அந்த 55 காலில் ஏதாவது ஒன்றாக இருக்கும்.

அவர்கள்தான், வாயேஜர் மனிதர்கள்.

நம்மை விட்டு வெகு தொலைவில் சென்ற பின்பும் உலகமே நமது டேட்டா வைத்துத்தான் இயங்குகிறது என்று நம்பும் மனிதர்கள்.
எப்போதும் இவர்கள் பார்வை பூமியை நோக்கியே இருக்கும்.

1970 காலில் எந்த objective வோடு பறந்ததோ அதேதான் கடைசி வரையில்.

பூமி அதற்குப் பின் எத்தனையோ ஏவுகணைகளை விட்ட போதும் வாயேஜர்  டேட்டா வை அனுப்புவதை நிறுத்தவே நிறுத்தவில்லை.
நாசாவுக்கு இப்போது பார்வை மார்ச் மீது இருக்கும் போதும் வாயேஜருக்கு பார்வை எப்போதும்  பூமி மீதுதான்.

அதுவாக பாட்டரி காலியாகும் வரை வாயேஜர் அமைதியாகும் வாய்ப்பே இல்லை.

அதுபோல் வாயேஜர் மனிதர்களை, வைத்துக் கொண்டு முன்னேற முடியாது.
இவர்கள் நிஜ உலகை விட்டு விலகி டெக்னாலஜி அப்டேட் செய்ய முடியாத ஒரு 64 Kb மெமரி காரட் மண்டையர்கள்.
இவர்கள் பேசுவதை ஒரு பழைய தகர டப்பா கணினி வைத்துத்தான் decode செய்ய முடியும்.

இந்திரா காந்தி வாயேஜர் சென்ற பின்புதான் இறந்தார்.
அது கூட தெரியாமல் உலகைச் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

வாயேஜரால் பூமி சுற்றுவதை நிறுத்த முடியாது.
நம்மாலும் வாயேஜர் மெமரி காரடை ஏத்த முடியாது.

தன்னையும், Knowledge , டெக்னாலஜி அப்டேட் செய்யவில்லை என்றால் நம் வாழ்க்கையும் வாயேஜர் போன்று மாறிவிடும்.
வாயேஜர் ஒன்று சுத்திகொண்டு இருப்பதே இந்தப் பூமிக்கு தெரியாது.

எப்பாவாவது இப்படி செய்தி வந்தாதான் நீ இருப்பதே இந்தப் பூமிக்கு தெரியும்.

இருப்பினும் ஆப்பி 40th பர்த்டே வாயேஜர்  !!!
நீ எங்கு இருந்தாலும் நலமுடன் வாழ்க !!!