அனைவருக்கும்  விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

இன்று காலையில் கொழுக்கட்டையையும், சுண்டலும் செய்து பிள்ளையாருக்கு படைத்தது, பின் உண்ட பின் இதை எழுத வேண்டும் என்று தோன்றியது.

 

சிறு வயதில் விநாயகர் சதுர்த்தி என்றாலே ஒரு பரவசம் இருக்கும்.

முதன் முதலில் ஒரு பெரிய பிள்ளையார் சிலை வாங்கி அதை சைக்கிள் பின்னால் வைத்து, பின் அதை கீழே விழாமல் சுமார் 3 கிலோ மீட்டர் தள்ளி வந்து வீட்டுக்குள் அவர் காலடி வைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

எவ்வளவு பெரிய பிள்ளையார் சிலை ஒருவர்  வீட்டில் இருக்கிறது என்பதில் பொடியர்களிடம்  போட்டியும் பொறாமையும் இருந்த பருவம் அது.

நான் முதன் முதலில் பிள்ளையார் சிலையை வாங்க என் அப்பாவுடன் சென்றேன். அங்கே கிராமத்தில் இருந்து வந்து ஒரு தார்பாலின் மீது சிலையை செய்து வைத்து விற்பார்கள்.

அந்த சிலையை செய்து விற்பவர்கள் எல்லோருமே கிராமத்து கலைஞ்சர்கள்.

சிலைக்கு அருகிலேயே ஒரு மாட்டு வண்டியில் சிலை செய்யும் களி மண்ணும் இருக்கும்.

சிலைகள் விற்க விற்க அங்கேயே அதை ஒருவர் செய்து கொண்டு  இருப்பார்.

முதல் வருடம் விநாயகரை சிலையாக வாங்கிய போது, அவர் எப்படி சிலை செய்கிறார் என்று பார்த்ததும் எனக்குள் ஏன் நாமே செய்து பார்க்க கூடாது என்று தோன்றியது.

அடுத்த வருடம், என் தந்தை எனக்கு சிலை வாங்கி தராமல் இரண்டு ரூபாய்க்கு களி மண்ணை வாங்கி தந்தார்.

அதை வாங்கி ஒரு பாலீதீன் பையில் கட்டும் போதே, அந்த கடைக்காரரிடம் எப்படி விநாயகர் சிலை செய்வது என்று கேட்டேன்.

இதோ செய்து கொண்டு இருக்கிறேன் பார் என்றார். சுமார் 30 நிமிடத்தில் ஒரு அழகான பிள்ளையார் ரெடி.

அவர் சிலையை செய்ய செய்ய, ஒவ்வொரு steps in making ஐ மனதில் record செய்தேன்.

எப்படியும், வீட்டுக்கு வந்தால் செய்துவிடலாம் என்ற தெம்பு வந்தது.

வீட்டுக்கு வந்தவுடன், உடனே ஒரு சொம்பில் தண்ணீரும் சில தென்னங் குச்சிக்களையும் வைத்து சிலை வடிக்க ஆரம்பித்தேன்.

சிலை செய்தவரின் எல்லா steps களும் என் மனதில் மனப்பாடமாக ஞாபகமாக இருந்தது. முதல் ஸ்டேப் தவிர.

முட்டி, முட்டி எவ்வளவு முறை களிமண்ணை எப்படி வடித்தாலும் அதை பார்க்க விநாயகர் மாதிரியே தெரியவில்லை.

இதில் என்ன கடுப்பு என்றால்…விநாயகர் கூட பரவாயில்லை.. அந்த தம்மாத்துண்டு எலிக் கூட அதன் shape ல் இல்லை.

சாயந்தரம் வரை போராடி கடைசி வரை அந்த விநாயகர் அருள் எனக்கு கிட்டவில்லை.

கொழுக்காட்டை சுண்டல் எல்லாமே ரெடி.

என் விநாயகர் தவிர.

இருந்தாலும் என்ன அளவு செய்தாயோ அதுவே விநாயகர் என்று வீட்டில் எல்லோரும் முடிவு செய்து எடுத்து வந்து வைக்க சொன்னார்கள்.

நானும் முடிந்த அளவு ஒரு shape செய்து அவர் தான் விநாயகர் என்று நம்ப வைத்தேன்.

களி மண்ணில் ஏதோ பிரச்சனை என்று சமாளித்து எடுத்து வந்து வைத்தேன்.

பூஜை, ஆரம்பித்தது. மணி அடிக்கும் போதுதான் பார்த்தேன் நான் செய்த அந்த எலிக்கு நான் ஒட்டிய வால் மிஸ்ஸிங்.

பூஜை மணி அடிக்க அடிக்க கயிறு போல் திரித்து ஒரு வாலை எலிக்கு ஓட்டினேன்.

ஒட்டிய அந்த ஜெர்க்கில் விநாயகரின் தும்பிக்கை கீழே விழுந்தது.

அன்று புரிந்தது, சிலை வடிப்பது ஒன்றும் லேசு பட்ட காரியம் இல்லை.

அடுத்த வருடம் அதே கடைக்கு சென்றேன்…அங்கு …

தொடரும்
ஜிஞ்சர் பிரட் துண்டுகள்
 
குறிப்பு: இந்த படம் நான் செய்த ஆணடவர் இல்லை. கூகிள் ஆண்டவர்.