நான் இரவில் குளிக்கும் பழக்கம் உள்ளவன்.
அதுக்காக இரவில் மட்டுமா குளிப்பாய் என்று கேட்டக கூடாது.

என்று பகலில் வெளிச்சம் இருக்கிறதோ அன்று எல்லாம் இரவில் குளிப்பேன்.
எங்கள் வீட்டில் வெள்ளி இரவு, டாக்குமெண்டரி இரவு. விடிய விடிய ஓடும்.

வழக்கமாக இந்த வெள்ளிக்கிழமை குளியல் போதுதான் அன்று இரவு என்ன டாக்குமெண்டரி என்று முடிவு நடக்கும்.
ஒன்று அதை நான் முடிவு செய்து மகனிடம் சொல்லிவிட்டு ரெடி செய்.. வந்து பார்க்கலாம் என்பேன்.
இல்லை அவன் ரெடி செய்துவிட்டு ரெடி. வா என்பான்.

இந்த முறை குளித்துக்கொண்டு இருக்கும் போது, தட தட என்று தட்டி ரெடி, ஒரு வித்தியாசமான படம்.
கண்டிப்பாக இன்று டாக்குமெண்டரி இல்லை.

இந்த படம்தான். Who Killed Captain Alex?
இருவருக்குமே பிடிக்கும். வா பார்க்கலாம் என்றான்.

வழக்கமாக படம் ஓடும் முன் intro நடக்கும்.
அதை அப்படியே கீழே எழுதி உள்ளேன்.

உகாண்டா நாடு ஒரு ஏழை ஆப்ரிக்க நாடு.
அதன் தலைநகரமாம் கம்பாலாவில் இருக்கும் ஒரு slum ஏரியா பெயர் Wakaliga.
அங்கு வாழும் ஒரு சினிமா வெறியர் ஹாலிவுட் action படங்களை பார்த்து பார்த்து நாமும் ஏன் ஒரு படம் எடுக்க கூடாது என்று லோக்கல் ஆட்களை வைத்து ஒரு action படம் எடுத்தார்.
படத்தின் மொத்த பட்ஜெட் 200 டாலர். அதன் direction, music, மற்றும் voice ஓவர் என்று எல்லாமே அவர்தான். தன்னிடம் இருக்கும் ஓட்டை கம்ப்யூட்டர் வைத்து எடிட் செய்து அந்த slum மக்களிடம் போட்டு காண்பித்தார்.
அத்தோடு அந்த படத்தை Youtube ல் ஏற்றிவிட்டு அந்த படத்தை அழித்து விட்டு அடுத்த படம் எடுக்க போய்விட்டார்.

அந்த டைரக்டர் பெயர்: Nabwana IGG.

அந்த youtube படம் கொஞ்சம் கொஞ்சமாக பரவி Alan Hofmanis என்ற இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் டைரக்டரிடம் போய் சேர்ந்தது.
உடனே அவர் என்னடா இப்படி ஒரு சினிமா வெறி டைரக்டரா என்று உகாண்டா கிளம்பி போய் அந்த ஆள் இன் ஆள் அழகு ராஜாவை சந்தித்த பின்தான் அந்த டைரக்டருக்கு புரிந்தது அவரின் அந்த முயற்சி கடல் தாண்டி ஹாலிவுட் வரை சென்று சேர்ந்தது.
அந்த படத்தை அவர் பின்னாளில் Seatle Film Festival ல் திரையிட்டு இப்போது வொக்காளிவுட் என்றால் சினிமா உலகில் பிரசித்தம் ஆகும் அளவுக்கு உயரே சென்றுவிட்டார் அந்த டைரக்டர்.

இந்த மாதம் ஹூஸ்டன் வரை வந்துவிட்டது இந்த வொக்காலிவுட் படங்கள்.
படம் இப்போது youtube ல் மட்டுமே இருக்கிறது. IMDB ல் 7.8/10.00

படம் பார்க்கும் முன் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
மிக கடுமையான ஏழ்மையில் வாழும் மக்கள் நாமும் ஒரு நாள் ஹாலிவுட் போன்ற ஒரு படம் எடுக்க முடியும் என்று மிக சீரியஸாக தன்னால் முடிந்த resources வைத்து நடித்து எடுத்த ஒரு சீரியஸ் action படம் இது.

மாற்றுப்பார்வை சினிமா மற்றும் டாகுமெண்டரி பார்க்கும் பழக்கமும் இருந்தால் மட்டுமே பார்க்கவும்.
இந்த படத்தை எடுக்க அந்த டைரக்டர் தான் எல்லா சொத்துக்களையும் விற்று வாங்கிய காமெரா, தானே கட்டமைத்த கம்ப்யூட்டர் மற்றும் CG works எல்லாம் நினைவில் வைத்து பார்க்கவும்.

நம்மையும் அறியாமல் ஒரு உலகில் நம்மையும் அறியாமல் நாம் ஒரு சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு இந்த வொக்கலிவுட் ஒரு உதாரணம்.
ஆர்வமும், அதற்கு உண்டான ஈடுபாடு மட்டுமே நம்மை மற்றவர்களில் இருந்து தனிமை படுத்தி காட்டும்.

Welcome to Wakaliwood, the home of Ramon Film Productions and Nabwana IGG, a Ugandan filmmaker who has produced more than 40 feature films including the viral sensations Who Killed Captain Alex: Uganda’s First Action Movie and Tebaatusasula.

இந்த படத்தின் லிங்க் இதுதான்.

குறிப்பு: இந்த படத்தின் review வை ஒழுக்கமாக எழுது. இது ஒன்னும் பல கோடி பட்ஜெட்டில் வெளிவந்த விவேகம் இல்லை. 200 டாலர் மூன்றாம் உலகநாடு படம்.
பார்த்து சூதனமா எழுது என்று என்னை என் மகன் மிரட்டி எழுத வைத்த review இது.

IMDB ல் reviews படத்தை பார்த்துவிட்டு படிக்கவும்.
http://www.imdb.com/title/tt1813757/reviews?ref_=ttexrv_sa_3

முடிந்தால் பார்த்துவிட்டு கமெண்ட் செய்யவும்.

Sridar.com Rating : 7/10.00