வாழ்க்கை என்பது ஒரு கோடு.

ஒரு பக்கம் நல்லவன்.
இன்னொரு பக்கம் கெட்டவன்.

இது நாம் பார்ப்பது. நல்லவனிடம் ஒரு நல்ல கதையும் அதற்கு உண்டான ஒரு தர்மமும் இருப்பது போல் கெட்டவனிடம் ஒரு கெட்ட கதையும் அதுக்கு உண்டான ஒரு நல்ல தர்மமும் இருக்கும்.

வெள்ளை சட்டை அணிந்து மப்டியில் நான் அமைதியானவன், யார் வம்பு தும்புக்கும் போகாதவன் ஆனால் கெட்டவனை கண்டால் மட்டும் பொதுவில் encounter ல் சுடுவேன் என்ற character ல் மாதவன்.

நாற்றம் பிடித்த சட்டையுடன், தாடி வைத்த்துக்கொண்டு நான்  மோசமானவன் என்று தானே சொல்லிக் கொண்டு plan செய்யும் மாதவனின் மாயை privacy ஐ உடைத்து போலீஸ் station wallக்குள் புகுந்து துப்பாக்கி வைத்து மிரட்டும் character ல் விஜை சேதுபதி.

மாதவனின் டார்கெட் விஜய் சேதுபதி என்றாலும் அதை அவரால் லீகலாக நேர்மையாக செய்ய முடியாது. காரணம் விஜய் சேதுபதி எப்போது எப்படி யாரை எப்படி தாக்குவார் என்று மாதவனுக்கு தெரியாது.

அதனால் அவர் உபயோகிப்பது encounter technique. குரூப்பாக மறைந்து நின்று தாக்குவது.
ஆனால் மாதவன்  எங்கு எப்படி மறைந்து தாக்குவார் என்று விஜய் சேதுபதிக்கு தெரியும். அதனால் அவர் உபயோகிப்பது டைரக்ட் அட்டாக்.
அதனால் மாதவனை மீட் செய்ய வேண்டுமானால் விஜய் சேதுபதியே வாண்ட்டடாக போய் அவர் இடத்திலேயே சந்திப்பார்.
முதல் சந்திப்பு துப்பாக்கி முனையில் மிரட்டி நடக்கிறது. முதலில் மாதவனுக்கு BP எகிறினாலும் எதற்கு இவன் தேவை  இல்லாமல் என் இடத்துக்கே வந்து மிரட்டுகிறான் என்று புரியவில்லை.

அப்போது கூலாக விஜய் சேதுபதி …நான் ஒரு கதை சொல்லுகிறேன் …என்று கதை ஒன்று சொல்லி ….கேள்வி ஒன்று கேட்பார்.

நீயோ ஒரு கெட்டவன். உன் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாதுனு ஹா ஹா ஹா என்று கேலி செய்வார் மாதவன்.

இதுதான் கோடு. இது நான் போடும் கோடு. இதுக்கு அந்த பக்கம் நீ. இந்த பக்கம் நான்.
உன் கதையும், கேள்வியையும் வேற எங்கயாவது வச்சுக்கோ என்று டென்சன் ஆகி சொல்வார்.
இது என் இடம் நீ இங்க வந்து கேள்வி கேட்க நியாயம் இல்லைனு கொதிப்பார்.அதற்கு சேதுபதி, நல்லவனிடம் ஒரு தர்மம் இருப்பது போல் இந்த கெட்டவனிடம் ஒரு தர்மம் இருக்கிறது கேள் என்று பழைய கதை பேச ஆரம்பிம்பார்.
அப்போது தான் மாதவனுக்கு விஜய் சேதுபதி துப்பாக்கி வைத்து மிரட்டியது சுட அல்ல வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக என்று புரியும்.

படத்த்தில் மாதவனுக்கு ஒரு Family friend. Very Close Friend. அவருக்கு மதத்தின் மீது தீராத நம்பிக்கை.

பாவம் புண்ணியம் பார்க்கும் ஆசாமி. இவர் வீட்டுக்கு அவர் போய் சாப்பிடுவதும், அவர் வீட்டுக்கு இவர் போய் சாப்பிடுவதும் என்றும் உறவு இருக்கும்.
ஒரு கட்டத்தில் மாதவனுக்கு பிரச்னை வரும் போது வாண்ட்டாக அவர் friend ஓடி வந்து இது நான் செய்தது…தயவு செய்து அவரை தொந்தரவு செய்யாதீர்கள் என்று அவர் வேலையை காப்பாற்றுவார்.
இந்த சூழலில்தான் விஜய் சேதுபதி கதை சொல்ல ஆரம்பிப்பார். மொத்தம் மூன்று கதை. பல கேள்விகள்.
ஒவ்வொரு கேள்விக்கு மாதவன் பதில் தேடும் போதுதான் கதையின் உண்மையான முடிகிச்சுக்கள் பார்க்கும் பார்வையாளர்களுக்கும், மாதவனுக்கு புரிய ஆரம்பிக்கும்.
கிளோஸ் பிரிண்ட்டாக இருந்தாலும், மத நம்பிக்கையும், பாவ புண்ணியம் பற்றி யோசித்து பேசி வந்தால்  மட்டுமே ஒருவன் நல்லவன் இல்லை.
ஒரு நல்லவன் யார் என்று ஒரு நல்லவனே முடிவு செய்து கொண்டு அறிவித்துவிட்டு நக்கல் அடித்து கேள்வி கேட்பவனை கெட்டவன் என்று ஒதுக்கி விட்டால் அந்த நல்லவனுக்கே கெட்டவன் சொல்லவில்லை என்றால் உண்மை  தெரியாது என்பதுதான் கதையின் கரு.
விஜய் சேதுபதி- வேதாளம், விக்ரமாதித்தன்- மாதவன் கதையில் விக்கிரமாதித்தனை வேதாளம் விடாமல் துரத்தும். விட்டு தொலை பேயே என்றாலும் விடாது. மறைந்து நின்று கொல்லலாம் என்றாலும் டகால்டி காட்டி அடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டு மீண்டும் வரும்.
திரும்ப திரும்ப விக்ரமாதித்தன் முதுகில் ஏறி சவாரி செய்து சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் கேள்வி கேட்க்கும். மாதவன் தட்டி கழிக்கும் போது கிடைக்காத விடைகள் பதில் சொல்ல சொல்ல கிடைக்கும்.இந்த பதில் தான் மாதவனுக்கு கடைசியில் யார் நல்லவன், யார் கெட்டவன் என்று புரிய வைக்கும்.

பாவம் புண்ணியம் பேசும் உயிர் நண்பன் யார் கோட்டுக்கு இந்த பக்கமா இல்லை அந்த பக்கமா என்று புரிய வைக்கும்.

உலகில் மொத்தம் இரண்டு வழிதான். ஒன்று நல்ல வழி. இன்னொன்று கெட்ட வழி. அதை நடுவில் நின்று யோசிக்க கூடாது.
ஒவ்வொருவர் வாழ்விலும் நாம் விக்கரமாதித்த சக்ரவர்த்தியாக வாழ நினைத்தாலும் விஜய் சேதுபதி போன்ற ஒரு வேதாளம் வேண்டும்.

Devil  எனும் வேதாளம் பல டீடைல் வைத்து இருக்கும். அதை உள் வாங்கி கொண்டு பதில் அளித்தால்தான் நியாயம் மற்றும் தர்மம் மட்டும் அல்ல உண்மையும் புரியும்.
ஒரு நல்லவன் இன்னொரு நல்லவனிடம் பேசினால் நியாயமும் தர்மமும் வெளி வராது. அதற்குத்தான் விக்ரமாதித்தன் வேதாளம் கதையில் வேதாளம் கேரக்டர் உருவாக்கப்பட்டது.வேதாளம் எப்போதும் இரவு பகலாக கேள்வி கேட்க அலையும்.
ஓடி ஓடி wrong worng questions கேட்க்கும்.

நல்லவன் முதுகில் சவாரி செய்து டார்ச்சர் செய்யும்.

நக்கல் அடிக்கும், நையாண்டி செய்யும். சீரியஸா பேசும் போது சிரிக்கும்.

என்ன செய்வது. பிறப்பே வேதாளம்.
அதன் டிசைன் அப்படி.
அதனால் அதை Harrasment என்று நினைத்து ஒதுக்காதீர்கள்.
அதை அழைத்து டின்னர் வைத்து பழகுங்கள்.உங்களுக்கு நல்ல நண்பர்களுடன் வாழ்க்கை நிம்மதியாக இருக்க  வேண்டுமானால் உங்கள் நட்பு வட்டத்தில் ஒரு வேதாளம் வைத்துக்கொள்ளுங்கள்.

The devil is in the detail.

By ஸ்ரீதர் ஏழுமலை.