வாழ்க்கை என்பது ஒரு கோடு.
ஒரு பக்கம் நல்லவன்.
இன்னொரு பக்கம் கெட்டவன்.
இது நாம் பார்ப்பது. நல்லவனிடம் ஒரு நல்ல கதையும் அதற்கு உண்டான ஒரு தர்மமும் இருப்பது போல் கெட்டவனிடம் ஒரு கெட்ட கதையும் அதுக்கு உண்டான ஒரு நல்ல தர்மமும் இருக்கும்.
நாற்றம் பிடித்த சட்டையுடன், தாடி வைத்த்துக்கொண்டு நான் மோசமானவன் என்று தானே சொல்லிக் கொண்டு plan செய்யும் மாதவனின் மாயை privacy ஐ உடைத்து போலீஸ் station wallக்குள் புகுந்து துப்பாக்கி வைத்து மிரட்டும் character ல் விஜை சேதுபதி.
மாதவனின் டார்கெட் விஜய் சேதுபதி என்றாலும் அதை அவரால் லீகலாக நேர்மையாக செய்ய முடியாது. காரணம் விஜய் சேதுபதி எப்போது எப்படி யாரை எப்படி தாக்குவார் என்று மாதவனுக்கு தெரியாது.
அதனால் மாதவனை மீட் செய்ய வேண்டுமானால் விஜய் சேதுபதியே வாண்ட்டடாக போய் அவர் இடத்திலேயே சந்திப்பார்.
அப்போது கூலாக விஜய் சேதுபதி …நான் ஒரு கதை சொல்லுகிறேன் …என்று கதை ஒன்று சொல்லி ….கேள்வி ஒன்று கேட்பார்.
நீயோ ஒரு கெட்டவன். உன் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாதுனு ஹா ஹா ஹா என்று கேலி செய்வார் மாதவன்.
உன் கதையும், கேள்வியையும் வேற எங்கயாவது வச்சுக்கோ என்று டென்சன் ஆகி சொல்வார்.
இது என் இடம் நீ இங்க வந்து கேள்வி கேட்க நியாயம் இல்லைனு கொதிப்பார்.அதற்கு சேதுபதி, நல்லவனிடம் ஒரு தர்மம் இருப்பது போல் இந்த கெட்டவனிடம் ஒரு தர்மம் இருக்கிறது கேள் என்று பழைய கதை பேச ஆரம்பிம்பார்.
அப்போது தான் மாதவனுக்கு விஜய் சேதுபதி துப்பாக்கி வைத்து மிரட்டியது சுட அல்ல வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக என்று புரியும்.
படத்த்தில் மாதவனுக்கு ஒரு Family friend. Very Close Friend. அவருக்கு மதத்தின் மீது தீராத நம்பிக்கை.
இந்த சூழலில்தான் விஜய் சேதுபதி கதை சொல்ல ஆரம்பிப்பார். மொத்தம் மூன்று கதை. பல கேள்விகள்.
கிளோஸ் பிரிண்ட்டாக இருந்தாலும், மத நம்பிக்கையும், பாவ புண்ணியம் பற்றி யோசித்து பேசி வந்தால் மட்டுமே ஒருவன் நல்லவன் இல்லை.
ஒரு நல்லவன் யார் என்று ஒரு நல்லவனே முடிவு செய்து கொண்டு அறிவித்துவிட்டு நக்கல் அடித்து கேள்வி கேட்பவனை கெட்டவன் என்று ஒதுக்கி விட்டால் அந்த நல்லவனுக்கே கெட்டவன் சொல்லவில்லை என்றால் உண்மை தெரியாது என்பதுதான் கதையின் கரு.
திரும்ப திரும்ப விக்ரமாதித்தன் முதுகில் ஏறி சவாரி செய்து சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் கேள்வி கேட்க்கும். மாதவன் தட்டி கழிக்கும் போது கிடைக்காத விடைகள் பதில் சொல்ல சொல்ல கிடைக்கும்.இந்த பதில் தான் மாதவனுக்கு கடைசியில் யார் நல்லவன், யார் கெட்டவன் என்று புரிய வைக்கும்.
பாவம் புண்ணியம் பேசும் உயிர் நண்பன் யார் கோட்டுக்கு இந்த பக்கமா இல்லை அந்த பக்கமா என்று புரிய வைக்கும்.
உலகில் மொத்தம் இரண்டு வழிதான். ஒன்று நல்ல வழி. இன்னொன்று கெட்ட வழி. அதை நடுவில் நின்று யோசிக்க கூடாது.
ஒவ்வொருவர் வாழ்விலும் நாம் விக்கரமாதித்த சக்ரவர்த்தியாக வாழ நினைத்தாலும் விஜய் சேதுபதி போன்ற ஒரு வேதாளம் வேண்டும்.
ஒரு நல்லவன் இன்னொரு நல்லவனிடம் பேசினால் நியாயமும் தர்மமும் வெளி வராது. அதற்குத்தான் விக்ரமாதித்தன் வேதாளம் கதையில் வேதாளம் கேரக்டர் உருவாக்கப்பட்டது.வேதாளம் எப்போதும் இரவு பகலாக கேள்வி கேட்க அலையும்.
ஓடி ஓடி wrong worng questions கேட்க்கும்.
நக்கல் அடிக்கும், நையாண்டி செய்யும். சீரியஸா பேசும் போது சிரிக்கும்.
அதன் டிசைன் அப்படி.
அதை அழைத்து டின்னர் வைத்து பழகுங்கள்.உங்களுக்கு நல்ல நண்பர்களுடன் வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டுமானால் உங்கள் நட்பு வட்டத்தில் ஒரு வேதாளம் வைத்துக்கொள்ளுங்கள்.
The devil is in the detail.
“devil is in the detail” was my most favorite phrase too… Wonderful review!
மிக்க நன்றி. இதை முன்பே ஒரு முறை எழுதி இருக்கிறேன். நல்லவர்களிடம் கெட்டவனாக நடித்துதான் உண்மை புரிய வைக்க வேண்டும் என்பது. எனக்கும் பிடித்த கரு அதுதான். படத்தில் மாதவன் மட்டும் அல்ல இந்த process ல் வேதாளத்துக்கும் உண்மை புரிகிறது. Relationship மட்டும் இப்படித்தான் இருக்க வேண்டும்.
True that. 🙂
Pretty detailed review!!! Semma bro ???? Still not watched the movie fully!!! Ur review tempting me more now!!
Fantastic review Sridar! Absolutely true… to understand the greatness of Vikramadithyan, we need the Vedhalam… Vedhalam need not be bad, it’s the point of view…
Thanks Subbu Govindarajapuram
People don’t understand the importance of questions. It needs space and time to explore. I think you are right. Vedalam asks questions only to good people. They are the one who needs his help. That’s why at the end both became friends. The story doesn’t show the climax. It means this relationship should exist for ever.
Sridar, very true. We have to ask and explore questions, so that we can understand things better. I really liked the climax, where it was left for the audience to figure.
1930 ல் வந்த அகதா கிரிஸ் டியின் இந்த புத்தகத்தை படிங்கள். Subbu Govindarajapuram
மாற்றுப் பார்வை பற்றி நீங்கள் கூறியதை அப்படியே எழுதி இருப்பார்.
ஜெய் சங்கர் கூட college professor- lady student படம் ஒன்று நடித்து இருக்கிறார். பெயர் தெரியவில்லை.
Most of those days thrillers will look like Agatha christie’s novels..
Sridar Elumalai I think you are talking about நூற்றுக்கு நூறு with Lakshmi & Sri Vidhya. That was by K. Balachander.
Yes, have read this novel a long long time ago. Very good one and it does talk about the perception – is good really good and bad really bad
Complete story package unravelled.
நடிப்பைப் பற்றி ஒன்றும் கூறவில்ஐயே.
எல்லாரும் வாழும் characters சார். அதான் நடிப்பு பத்தி எழுதல. படம் கண்டிப்பாக பாருங்கள்.
Sridar Elumalai அப்படியென்றால் அருமையான நடிப்பு.
மிகவும் அருமை படமும் படத்தை பற்றிய உங்கள் கருத்தும்.
Good review..
Wonderfully written Sridar Elumalai! Certainly after a long time Vikram Vedha will be remembered for its scripting. Actors were mere characters and the hero was the script. In tamil cinema, story layers are not so common these days with all the mass hero movies. A much needed & a welcome change!
மிக அருமையான அலசல். படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை கிளப்பும் தூள் trailer!!
பார்க்கணுமோ!☺️
கண்டிப்பாக பாருங்கள்.
விண்ணப்பம் போட்டு விடுகிறேன். ரெண்டு நாள் முன்னாடி மறு நாள் என்னாவேனோ என்று இருந்தேன். நிஜ மாதவனை மிஸ் செய்து விட்டேன். நிழலையாவது பார்க்கிறேன். சான்ஸ் போச்சே…..sigh….
Brindha Suresh
நீங்க நேரில் பார்க்க வேண்டியது மாதவனை. பேச்சு அருமை.
படத்தில் focus விஜை சேதுபதியிடம் காட்டூங்கள்.
படத்தை பற்றிய அருமையான அலசல் அட்டகாசம்
நன்றி சக்தி
நல்ல விமர்சனம்….
Even the picture was thrilling considering good old days …!