இன்று நடந்து வரும் Beef Ban பாலிடிக்ஸின் அடித்தளம் இன்று நேற்று அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்னரே விதைக்கப்பட்ட விதையின் விளை பயிரே அது.
கௌதம புத்தர் மீன், மாட்டுக்க்கறி என்று அவர் உண்டதோடு அமைதியாய் இருந்து இருக்கலாம்.
புத்தர் சாகும் முன் பன்றிக்கறியை உண்டுதான் மாண்டு போனார் என்பதே பலருக்கு தெரியாது.

அமைதியை போதித்த புத்தர் முதல் இன்று வாழும் தலாய் லாமா வரை யாரும் வேகன் கிடையாது.
நீங்கள் கொல்லாமல் இருந்தால் போதும்…பிறர் உணவுக்காக கொன்ற இறைச்சியை உண்ண அனுமதித்தவர் புத்தர்.

புத்தரை காட்டிலும் Non Violence ஐ சமயமாக போதித்த பெரிய விளக்கெண்ணைகள் இன்னும் இந்த மண்ணில் பிறக்கவில்லை. உடனே சொம்பை எடுத்த்துக்கொண்டு இவர் அதைவிட அதிகமாக போதித்தவர் என்று வர வேண்டாம்.

இன்று, மிருக வதை, இது தான் முறுக்கு வடை என்று எழுதி தள்ளுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.

இதில் மறைக்க ஒன்றும் இல்லை.

வேத காலத்தில், மாட்டுக்கறி பிரசித்தம். இந்திரனுக்கு காளை மாட்டுக் கறிதான் favourite டிஷ்.
வேத காலம் முதலே இந்துத்துவாவின் அடிப்படையில் புலால் உண்ணுதல் ஒன்றும் பாவம் இல்லை.

வேத காலத்தால் தோன்றிய மதம் பிராமனிசம். என்னது பிராமினிசம் மதமா என்று யோசிக்காதீர்கள்.
புத்திசம், ஜெனிஸம், சீக்கிசம் போல பிராமனிசம் என்பது ஒரு மதம் என்பதே பலருக்கு தெரியாது. It is a religion.

Bhraminism தின் அடிப்படை கருவானவர் பிரம்மன். அவர் ஒரு மெட்டாபிஸிக். மாறா நிலைத்தன்மை உடையவர்.
பிராமினிஸத்தின் அடிப்படை பிரம்மன் படைத்த மானுடர்களை அவர்களே நான்கு வகையாய் பிரித்து ட்ரீட் செய்வது.

அந்த நான்கு கேட்டகிரி இதுதான்.
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்.
இந்த முறையில் பிராமணர்கள் தாங்கள்தான் சமூகத்தில் டாப் என்ற ராக்கிங் கொடுத்து அவர்களை முதன்மை நிலையில் அவர்களே வைத்துக்கொண்டார்கள்.
நாமே produce செய்யும் படத்தில் நாமே ஹீரோவாக நடிப்பது போல்தான் இதை செயல்படுத்தினார்கள்.
இப்போது இந்த வருணமுறை கடைப்பிடிக்கப்படுவது இல்லை ஆயினும், இன்றும் இதே கொண்டையோடு இருப்பவர்கள் ஏராளம்.

இது தனி ட்ராக். விட்டு விடலாம்.
அவர்கள் தங்களை முதன்மை நிலைமையில் வைக்க சொல்லப்பட்ட காரணம், வி ஆர் கிளோஸ் டு god என்ற pinciple தான்.

வரலாற்றில் இந்த பகுதி வரை, பிராமணர்கள் எல்லோரை போலவும் மாமிச உணவு, மாட்டுக்கறி உண்டவர்கள்தான்.
வேததத்தில் Non Violence போதிக்க பட்டதே ஒழிய, அதில் நீ மாமிச உணவை சாப்பிடவே கூடாது என்று கோட்பாடாக சொல்லவில்லை.
In Broad Sense – நீ இதை மட்டுமே செய், செய்யாதே என்று போதிக்கவில்லை.
அன்று, கடவுளுக்கு பலி கொடுக்க எடுத்த வந்த மாடுகளை வெட்டியவர்கள் மற்ற 3 classified மக்கள் மட்டும் அல்ல.
பிராமணர்களும் வெட்டினார்கள், உண்டார்கள்.

Brahmins are categorized into two, vegetarian brahmins and non-vegetarian brahmins.
இது இன்று மட்டும் இல்லை அன்றும் இருந்தது.
வெஜிடேரியன் பிராமின் இந்துத்துவாவில் இறைச்சி உண்பது புனிதம் இல்லை என்று சொன்னால் அந்த கேள்வியை முதலில் non-vegetarian brahmin னிடம் கேட்டு தெளிவு பெறலாம்.
அப்போது அந்த விவாதம் வேத காலம் நோக்கி சென்றே ஆகவேண்டும்.

வேதத்திலே வாழும் 250 உயிரினங்களில் எதை வெட்டலாம், எதை உண்ணலாம் என்று வகைப்படுத்தி இருக்கிறார்கள்.
வெந்தது, வேகாதது, வெங்காயம், வெள்ளை பூண்டு என்று எல்லாம் அன்று வரை ஓக்கேதான்.
பிரம்மனுக்கும் ஓக்கே, பிராமினசத்துக்கும் ஓக்கேதான்.
பிரச்னை பின்தான் வந்தது.
வேத காலம் பின் தோன்றியதுதான் புத்தமதம்.
பிராமனிசத்தில் பிரம்மன் மெட்டா form.

அதுவே புத்திசத்தில் புத்தர் பிஸிக்கல் form. தனி மனிதன் தோற்றுவித்த மதம்.
புத்திசம் மெட்டா form ஐ ஒத்துக்கொள்ளவில்லை.

அது மட்டும் இல்லை, அவர் தொட்ட இடம் அமைதி, கொல்லாமை.
அதுவரை நான்கு வித சமூக கட்டுப்பாட்டில் கொடுமை அனுபவித்து வந்த தாழ்த்தப்பட்டவர்கள் மெதுவாக புத்தர் பக்கம் சாய தொடங்கினார்கள்.
அவரின் மிகப்பெரிய மார்க்கெட்டிங் பாயிண்ட் – உயிர் கொல்லாமை.
அது வரை மாட்டினை தொடாமல் இருந்த புத்தர், மாடுகள் வதம் செய்வதை தவறு என்றார்.

மெதுவாக, புத்திசம் மலர ஆரம்பித்தது. இதை பிராமினிசத்தால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அதுவரை பலி இடுதல், மாட்டுக்கறி என்று உண்டு வந்த பிராமணர்கள் புத்திச மாடு – non violence எங்களிடம் உண்டு என்று காட்ட ஆரம்பித்தார்கள்.

உணவு முறை கொண்டு இந்துவையோ, பிரமணர்களையோ பிரிக்க முடியாது.
The diet of Hindus may include eggs and meat. இங்கு “மே” என்பதை மாடை குறிக்கும்.

இது இன்று மட்டும் அல்ல. வேத காலம் கொண்டே இதுதான் நிலை.
வேதங்களில் மாடுகள் வெட்டிய reference களும் உள்ளது.
உண்ட reference களும் உள்ளது. போற்றிய reference களும் உள்ளது.

புத்திசம் வரும் வரை மாட்டுக்கு பெரிய மரியாதை மக்கள் கொடுத்ததில்லை.
Buddhism propagated vegetarianism with more clarity.
புத்திசத்துக்கு ஈடு கொடுக்க மாடுகளை போற்றிய reference களை மட்டும், கையில் எடுத்து மாட்டினை கோ மாதா என்று ஆக்கினார்கள் லேட்டஸ்ட் Pro Vedic பண்டிதர்கள்.
அதுவரை எல்லாம் உண்டவர்கள், இறைச்சியை மட்டும் விட்டுவிட்டு பால், தயிர், வெண்ணெயுடன் டின்னர் முடிக்க பழகி கொண்டார்கள்.

மாட்டு Non Violence புத்திசத்துக்கு மட்டும் இல்லை, எங்களுக்கும் உண்டு என்று காட்ட தொடங்கினார்கள்.
இவர்கள் vegetarian brahmins. இவர்களுக்கு, மாட்டின் ரத்தமே பால் என்பது belief க்குள் வராது.

அது முடியாத வடக்கு பிராமணர்கள் கலிங்க ஒரிசாவில் சிக்கனும், பெங்காலி பிராமணர்கள் மீனும், காஷ்மீரி பிராமணர்கள் பன்றி கறியும் இன்றுவரை உண்டுதான் வருகிறார்கள்.
இவர்கள் non-vegetarian brahmins. இவர்களுக்கு, மாட்டின் ரத்தமே பால் என்பது மதத்துக்குளேயே வராது.

உண்மையில் மாடு பொலிடிக்ஸ் ஆரம்பித்தது புத்த மதம்.
அன்றும், கிராமத்தில் இந்து மதம்தான் தழைத்து ஓங்கி இருந்தது.
உண்மையில் புத்த மதம் ஒரு Urban கலாச்சாரம்.  க்ராஸ் ரூட் போதனைகள் இல்லை.
அதனால்தான், மீண்டும் இந்து ராஜாக்களும், முகலாய மன்னர்களும் நகரங்களை தாக்கிய போது புத்திசம் காணாமல் போனது.

இந்து மதம் இந்தியாவில் தழைத்து ஓங்க காரணம் இந்துயிசம் எதையுமே, யாரையுமே என்றுமே கட்டுப்படுத்தியதில்லை.
கொல்லாமை, மிருக வதை எதிர்ப்பின் ஓனர் இந்துமதமாக இருப்பினும் அதை பக்காவாக மார்க்கெட் செய்தது புத்த மதம்.
மீண்டும் சொல்கிறேன் …Buddhism propagated vegetarianism with more clarity.

அதற்கு ஈடு கொடுக்க தன்னை மாற்றி கொண்டு மாடு பாலிடிக்ஸ் எடுத்து பிராமணிசம்.
அந்த கேப்பில் வந்து ஒட்டியதுதான் இந்த மாட்டு பாலிடிக்ஸ்.
ஒரு பக்கம் ஆதி சங்கரர் தன் முழு பலம் கொண்டு அத்துவைதம் மூலம் பிராமினிச கொள்கைகளை பரப்ப, இன்னொரு புறம் வடக்கே ஒரிசா, கலிங்கா ஏரியாக்களை ஆண்ட பிராமண ராஜா புஷ்யமித்திர சுங்கன் புத்த பிட்சுக்களை போட்டு தாக்கி கொன்றான்.

இன்று பிஹார், பாட்னா எனும் பாடலிபுத்திராவில் இருந்த குக்கட்டராமா எனும் புத்த மடத்தை கூண்டோடு அழித்தான் புஷ்யமித்திர சுங்கன்.
அசோகர் புத்த மதத்தை தழுவி வளர்த்தார். அவர் இறந்த 50 வருடத்தில் தனி ஒரு ஆளாக பிராமண ராஜா புஷ்யமித்திர சுங்கன் வடக்கே வன்முறை கொண்டு புத்த மதத்தை ஒடுக்கினான்.
அந்த அரசனே மீண்டும் வேத காலத்தில் இருந்த இந்து சமயத்தை back to track எடுத்து வந்த மஹாராஜா.

உண்மையில், போஸ்ட் வேதிக் கால இந்து மதம் தழைத்து ஓங்க முக்கிய காரணம் ஆதி சங்கரர்.
மத்துவர், ராமணனுஜர் போன்றோர் சைட் ட்ராக் எடுத்தாலும் தி ஒன் அண்ட் ஒன்லி தோனியாக நின்று ஆடியவர் ஆதி சங்கரர்.
தன் வாதத்தால் வென்று இந்து மதத்தை பரப்பினார்.

இந்து மதத்தில் எத்தைனையோ கோடி நல்ல விஷயங்கள் இந்த நவ யுகத்தில்ர பரப்ப வேண்டி இருக்கிறது.
இந்து மதத்தில் மாடு புனிதம். புனிதம் என்பதால் இதை வெட்டாமலும் இல்லை. சாப்பிடாமலும் இல்லை.
5 வருடம் முன்பு வரை கூட உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தில் சுமார் 5000 மாடுகளை காந்திமாய் விழாவில் பலி கொடுத்திக்கொண்டுதான் இருந்தார்கள்.
எப்படி NON VIOLENCE இந்து மதத்தின் ஒரு அங்கமோ அதே போல் தான் மாமிச  உணவும், மிருக  பலி இடுதலும் இந்து மதத்தின் ஒரு அங்கம்.
இது கசந்தாலும், இதுவே உண்மை.

நம் கடவுள்களே beef கறி உண்டவர்கள்தான். புத்தரும், தலாய் லாமாவும் NON Vegeterians.
பாபர் மகன் ஹுமாயுன் ஒரு மகா வெறி ஹிந்து வேகன் பிரியன்.

மதம் கோட்பாடுகளை கொண்டது.
உணவு கட்டுப்பாடுகள் என்றுமே இந்து மதத்தில் இருந்ததில்லை.
இருக்க போவதும் இல்லை.

அப்படி ஒருவன், இல்லை இந்துவாக நீ இதைத்தான் உண்ணவேண்டும் என்று சொன்னால்,  அவன் உணவை பிரிப்பவன் அல்ல.
மானுடத்தை பிரிப்பவன். தி சேம் 4 Category.

உண்மையில் உலகத்தில் எந்த மதமும் violence போதிப்பதில்லை.
யார் அதிகம் Non Violence போதிக்கிறோம் என்பதில்தான் சண்டை நடந்தது. நடக்கின்றது.

மாட்டுக்கறி உண்ணாமல் இருப்பதால் ஒருவன் இந்துவும் அல்ல.
அதை உண்பதால் ஒருவன் இந்துவாக இல்லாமல் போக போவதும் அல்ல.

வேதிக் காலத்தில் ஏரோ பிளேன் இருந்து இருந்தால் ஹிந்து மீலில் கண்டிப்பாக மாட்டுக்கறி இருந்து இருக்கும்.
பிடிக்காதவர்களுக்கு வேதிக் veg option கண்டிப்பாக இருந்து இருக்கும்.

காரணம், அந்த விமானம் இந்து விமானம்.
எல்லோரையும் அரவணைத்து செல்லும்.