ஒரு முறை, ஒரு ஹனுமான் கோவிலில் யோகதிற்காக  ஒரு பூஜை நடந்து கொண்டு இருந்தது.

அப்போது ‘கச கச’ என்று சில பெண்களும், ‘குசுகுசு’ என்று சில ஆண்களும் பேச ஆரம்பித்தார்கள்.

இதைப்பார்த்த சில குழந்தைகளும், “கல கல” என  ஓடிப் பிடித்து விளையாட ஆரம்பித்தார்கள்.

அதுவரை அமைதியாக இருந்த ஒருக் கைகுழைந்தை ” கீ கீ” என்று அழ ஆரம்பித்தது.

அதுவரை மணி ஆட்டிக்கொண்டு இருந்த குருக்களின் மைக் சத்தத்தை விட இந்த சத்தம் பெரிதாகி போனது.

கடுப்பான அர்ச்சகர், மணி ஆட்டுவதை நிறுத்திவிட்டு  “சத்த அமைதியா இருங்கோ” என்று ஒரே ஒரு முறை கர்ஜித்தார்.

அவ்வளவுதான். அதற்கு பின் அந்த கோவிலில்  ‘கப் சிப்” அமைதி.

ஆளாளுக்கு விளையாடும் குழந்தைகளை ” டேய் சும்மா இருங்க” என்று அட்வைஸ் செய்தார்கள்.

இதில் குசுகுசு ஆண்களும், கச கச பெண்களும் அடங்குவர்.

உண்மையில்  இது ஒரு chain reaction.

இதை முதலில் ஆரம்பித்தது ” இந்த புடவை நன்னா இருக்கே …எங்க வாங்கின்னேள் ?” என்ற ஒரு அம்மணிதான்.

ஆனால் திட்டு வாங்கியது என்னமோ குழந்தைகள்.

பின் மீண்டும் மணி அடிக்க தொடங்கினார் அர்ச்சகர்.

பெரியவர்கள் அமைதியானதும் ‘சட் சட்’ என்று ஆட்டொமேடிக்காக கைக்குழந்தை வரை அடுத்த 10 நிமிடத்துக்கு அமைதியானது.

விளையாடிக் கொண்டு இருந்த சில சிறுவர்களை ஒரு ஸ்கூல் பையன் மெதுவாக கதைவை திறந்து வெளியே ஓட்டிக்கொண்டு போய் விளையாட ஆரம்பித்தான்.

அதற்க்கு பின் சலசலப்பு இல்லை.

இந்த கேப்பில் பூஜையை டைம்முக்கு முடித்துவிட்டார் அர்ச்சகர்.

அதற்கு பின், மைக் பிடித்து “லக லக” என்று அவர் மட்டும் 20 நிமிடம் பேசியது தனிக்கதை.

 

ஒரு உதாரணம் சொல்கிறேன்…..

எல்லோரும் அமைதியாக தூங்கும் ஒரு flight ல், தனியாக ஒரு  குழந்தையால் அதிக நேரம் அழ முடியாது.
அப்படியே அழுதாலும் அதை சிறுது நேரத்தில் கட்டுக்குள் எடுத்து வந்துவிடுவார்கள் ..

அவர்கள் யார் யார் ??

1. எல்லா பயணிகளும்: இது  flight. குழந்தைகள் என்றால் அழும் என்று எல்லோரும் புரிந்து கொள்வது.
2. தாய்:  அழும் குழந்தைக்கு தேவையான பாலை அதன் தாய் வீட்டில்எ இருந்தே புட்டியில் எடுத்து வந்து கொடுப்பது.
3. தந்தை: அதற்கு உதவியாய் பால் டப்பாவை handbag ல் இருந்து எடுத்து மனைவிக்கு கொடுப்பது.
4. பணிப்பெண்கள் : அந்த குடும்பத்துக்கு தேவையான உணவோ, தேவையோ இருந்தால் கொடுத்தது சக பயணிகளுக்கு சிரமம் இல்லாமல் பார்த்துக்கொள்வது.
5. குழந்தை: தனக்கு தேவையான உணவோ, இல்லை சிறு வாக்கிங், இல்லை காற்றோட்டம்  கிடைத்தவுடன் அதுவாக புரிந்துகொண்டு தூங்குவது.

எதையுமே, தனியாக ஒரு controlled environment லில் ஒரு குழந்தையாய் இருந்தால் கூட செய்ய முடியாது.

இதை அறிவியலில் கிளாசிக்கல் கண்டிஷனிங் என்பார்கள்.

ஒரு விமானத்தில் ஒரு சொல்லிக்கொள்ளாத ஒரு கூட்டு முயற்சி எப்போதுமே இருக்கும்.

காரணம் ,விமானத்தை பொறுத்தவரை.. தாய், தந்தை, பணிப்பெண், பயணிகள் மற்றும் பைலட் என்று  எல்லோருக்கும் இருக்கும் ஒரே objective…

பயணம் இனிதே அமைய வேண்டும் என்பதே .. பிடிக்கவில்லை என்றால் வெளியே குதித்து ஓட முடியாது.

இதே அக்கறை கோயில் பூஜையின் போதோ, ஈவென்ட் நடக்கும் போதோ, இன்னொருவர் வீட்டுக்கு போகும் போதோ இருக்காது.
அந்த சூழ்நிலையில் இருக்கும் எல்லோரும் ஒரு விமானப் பயணம் போல்  புரிந்து கொண்டு செயல்படுவதில்லை.

காரணம் ஒவ்வொருவருக்கு ஒரு objective.

சிலர் சாமி கும்பிட வந்த இடத்தில குசலம் விசாரிப்பார்கள். இதைப் பார்க்கும் குழந்தைகள்… ஓ …இங்கு பேசலாம் போல் என்று நினைத்து பேச ஆரம்பிக்கும்.

அமைதியாக தூங்கும் ஒரு குழந்தை அழைத்தான் செய்யும். ஒரு சோசியல் இடத்தில் இதை  கட்டுக்குள் எடுத்துவருவது கூடும் அந்த objective க்கு முக்கியம்.

Parents சரியில்லை என்றாலும், பைலட் சரியில்லாம் ஆட்டி ஆட்டி ஓட்டினாலும், குழந்தைக்கு பால் flight ல் இல்லை என்றாலும் குழந்தை அழைத்தான் செய்யும்.

வீட்டுக்கு வந்த ஒரு குழந்தை வாங்கிய புது சோபாவில் ஐஸ் கிரீம் வைத்துக்கொண்டு ஜிங் ஜிங் என்று குதிக்கும் போது ..

மொத்தம் 64 factorial scenarios இருக்கும்.

ஒரு விமான பயணம் போல எல்லோரும் புரிந்து கொண்டு ஐஸ் க்ரீம் சோபாவில் கரைந்து ஓடாமல் காப்பாற்றுவது குழந்தைகள் கையில் மட்டும்  இல்லை.

அது ஒரு கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும்.

—————————————————-

கொடுக்கப்பட்ட ஒரு environment ல் ஒரு gene எப்படி react செய்யும் என்பது அறிவியல்.

G X E=P.

இதில் பல காரணிகள் உள்ளன.

ஒரு காரணியை பற்றி சொல்கிறேன்…

“இவான் பாவ்லோவ்” ஒரு ரஷியன் சைக்காலஜிஸ்ட்.

அவர் 1900 களில் ஒரு சோதனை செய்தார்.

அதில், அவர் நாய்க்கு தினம் சாப்பாடு போடும் முன் மணி அடித்து விட்டு பின் தான் தட்டில் சாப்பாடு போடுவார்.

சாப்பாடு போடும் இடம், நேரம், அது எங்கு கட்டி போட்டு வைக்கப்பட்டு உள்ளது என்பதை மாற்றாமல் செய்துவந்தார்.

இப்படியே ஆறுமாதம் அந்த நாய்க்குட்டியை பழக்கினார்.

பின்பு நாயின் saliva glands மட்டும் வெளியே எடுத்து தொங்க விட்டு, நாயை வேறு ஒரு புதிய இடத்திற்கு கூட்டிக்கொண்டு சென்று சம்பந்தம் இல்லாத ஒரு புது environment ல் வேறு ஒரு சமயத்தில் மணி அடித்தார்.

நாயின் சுரப்பிகள் தானாகவே சுரக்க ஆரம்பித்தன.

இதை வைத்து சில உளவியல் கோட்பாடுகளை 1920 களில் எழுதினார்.

அதுதான்…

1. Classical conditioning
2. Transmarginal inhibition
3. Behavior modification

இந்த மூன்று ரூல்ஸ்தான்  நாம் பிரபலமாக பேசும் parenting எனும் வார்த்தையின் அறிவியல் அடித்தளத்தை இன்று அமைத்துக்கொடுத்தது.

இந்த மூன்று தத்துவத்தில் parenting என்பது ஜஸ்ட் 1% தான்.

இந்த தத்துவம்தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் மற்றும் உலகில் வாழும் எல்லா உயிர்களின் behavioral சைக்காலஜியின் அடித்தளம்.

ஜஸ்ட் to நோட்:

சிம்பிளாக சொல்கிறேன்…

சரியான Classical conditioning செய்து வளர்க்கப்படாத ஒரு குழந்தை, வளர்ந்து பெற்றோர் ஆகி மட்டும் எப்படி இன்னொரு குழைந்தையை எப்படி சரியாக parenting செய்ய முடியும்?

கைக்குழந்தை முதல் டீன் ஏஜ் வரும் வரை குழந்தைகளை நான்கு சுவருக்குள் வைக்காமல் பல வித environment களுக்கு expose செய்து self learning மற்றும்  adapatability பற்றி புரிய வைப்பது பெற்றோரின் கடமை.

ஒரு மேட்டரை ஒரு பெற்றோருக்கு புரிய வைப்பதை விட குழந்தைகளுக்கு எளிதாக புரிய வைத்து விடலாம்.

Learned Parents களின் கைகளிலேயே குழந்தைகளின் learning உள்ளது.

நான் என்றுமே குழந்தைகள் பக்கம்.

இதைப்பற்றி பலது எழுதலாம்.

கோயில் மணியாக இருந்தாலும் சரி,

பாவ்லோவ் அடித்த மணியாக இருந்தாலும் சரி,

சைக்காலஜி என்றும் ஒரு ரகளையான சப்ஜெக்ட்.
———————————————————————

குறிப்பு:
பாவ்லோவ் ஆராய்ச்சி செய்த நாயை இன்றும் ருசியாவில் உள்ள பாவ்லோவ் அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வருகிறார்கள்.